அ.தி.அந்தரங்க கதவுகள் பகுதி 2

நம்புவதற்கு கொஞ்சம் சிரமமான கதைதான். ஆனாலும் அரச்சான் சொன்ன விதம் நம்பும்படியாகவே இருந்தது.

மாண்புமிகு சென்னையில் இருக்கும் மிகப் பெரும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளரின் ஒரே செல்ல மகன் முங்கி. கோடிக்கணக்கான சொத்துக்களின் ஒரே வாரிசு. சென்னையின் உயர்தர கல்லூரியில் பியீ முடித்து விட்டு வந்தவனிடம் சினிமா தியேட்டரின் பொறுப்பை ஒப்படைத்தார் முங்கியின் அப்பா. மது, மாது, சூது பழக்கமும் கிடையாது. அச்சில் வார்த்த சுத்த தங்கமாய் ஜொலித்தான். முங்கியின் செயல்பாடுகளால் பெற்றோர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். மாதமொருமுறை மதியத்திற்கு மேல் காணாமல் போய் விடுவான். தியேட்டர் மேனேஜர் அவன் ஏதாவது டிஸ்கொதேவுக்கு சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டு அதையே அவன் வீட்டாருக்கும் தெரிவித்து வந்தார். கரெக்டாக மறு நாள் தியேட்டரில் வழக்கம் போல் ஆஜராகி விடுவான்.

தியேட்டரும் நல்ல வருமானத்தையே சம்பாதித்துக் கொடுத்தது. இப்படியாக நாட்கள் இறந்து கொண்டிருந்த போது ஒரு நாள் மதியம், முங்கியின் உறவுக்காரர் அவனது வீட்டுக்கு வந்திருப்பதாக சாப்பாடு கொடுக்க வந்த சமையல்காரன் சொன்னான்.

அன்றைக்கு இரவு, முங்கி தியேட்டரிலேயே தங்கி விட்டான். அவனைக் விசாரித்து வீட்டிலிருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை. மேனேஜருக்கு ஆச்சரியம். அரை மணி நேரம் தாமதமானால் கூட முங்கியின் அம்மாவிடமிருந்து போன் மேல் போன் வரும். ஆனால் இன்றைக்கு என்ன ஆச்சரியமாக இருக்கிறதே என்று எண்ணினார். அம்மாவுக்கும் பையனுக்கும் ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்று எண்ணியபடியே தனது வழக்கமான வேலைகளை கவனித்தார்.

அதன் பின் தொடர்ந்து அவன் தியேட்டரிலேயே தங்கி விட்டான்.

முங்கியின் உறவுக்காரர் வந்த அன்றிலிருந்து சரியாக பத்தாவது நாள் தியேட்டர் கேட் மூடப்பட்டிருந்தது. விடுமுறை – என்று கேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மறு நாளைய செய்தி தாளில் முங்கி ஆக்சிடெண்டில் இறந்து விட்டதாக செய்தி வந்திருந்தது. ஊரிலும் ஆக்சிடென்டில் இறந்து விட்டான் என்றே பேசிக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் அதை மறைத்து விட்டார்கள் என்ற செய்தியும் தியேட்டரின் மேனேஜர் காதுகளுக்கு சமையல்காரன் மூலமாய் வந்து சேர்ந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வழக்கம் போல திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

“ ஏன் முங்கி தற்கொலை செய்து கொண்டான் ? “ மேனேஜருக்குள் உறுத்திய கேள்விக்கு விடை என்ன என்று அறியும் பொருட்டு அரச்சானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரம் பார்த்து அரச்சானின் மொபைல் சினுங்கியது…. பேசி முடித்து விட்டு பெருமூச்சுடன் என்னைப் பார்த்தான். பின்னர் கதையைத் தொடர்ந்தான்.

முங்கி ஹைதராபாத்தின் பேரழகி ஒருத்தரை காதலித்திருக்கிறான். இருவரும் காதலித்து கட்டில் வரை நெருங்கி விட்டார்களாம். அதன் விளைவாக பேரழகியின் வயிற்றில் டிஅண்ட்சி செய்ய முடியாத அளவுக்கு குழந்தை வளர்ந்து விட்டதாம். பேரழகியின் அப்பா தன் அண்ணனிடம் விவரத்தைச் சொல்லி பையனின் அப்பாவிடம் பேசலாமென்று வந்திருக்கிறார். அதன் பின்னர் தான் தெரிந்திருக்கிறது முங்கிதான் அந்தப் பையன் என்று. அவசர அவசரமாய் இரு குடும்பமும் கூடிப் பேசினார்கள். முங்கி பிடிவாதமாக இருந்திருக்கிறான். பேரழகியோ வாழ்ந்தால் அவனோடுதான் என்று அழிச்சாட்டியம் செய்திருக்கிறாள். அதன் பிறகு என்ன நடந்ததோ சரியாகத் தெரியவில்லை. முங்கி இறந்து விட்டான். தற்போது அந்தப் பேரழகி அவளது மாமாவைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாள் என்று முடித்தான் அரச்சான்.

மனதுக்கு சற்றே ஆயாசமாய் இருக்க, சிகரெட்டை பற்ற வைத்து கொண்டேன். அரச்சான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்ப்பவன் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். ஆம் எனக்குள் தோன்றிய விஷயத்தை அவனிடம் சொல்ல வேண்டுமென்ற ஆவல்தான். ஆனால் சொல்லவில்லை. அந்த விஷயம்,

”முங்கியின் உறவினர்கள் கலாச்சார பாதுகாவலர்களாய் மாறி விட்டிருக்கிறார்கள்”

குறிப்பு : கதை முற்றிலும் கற்பனையானது. யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை.

3 Responses to அ.தி.அந்தரங்க கதவுகள் பகுதி 2

 1. seidhi valaiyam சொல்கிறார்:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 2. harini சொல்கிறார்:

  Good imaginary

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: