அ.தி. அந்தரங்கக் கதவுகள் பகுதி – 1

காலையில் வாக்கிங் சென்ற போது எதிரே வந்து கொண்டிருந்தான் அரச்சான்.

அரச்சான் பிரபலமான வாரப்பத்திரிக்கையில் பணி புரியும் ஊழியன். காலையில் ஆறு மணிக்குச் சென்றான் என்றால் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் அலுவலகத்தில் இருந்து திரும்புவான். அவனது முதலாளி என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவனைப் பற்றிய பெருமையை பாடி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். அரச்சானிடம் முதலாளி பாராட்டிய விஷயத்தைச் சொன்னால் குளிர்ந்து விடுவான்.

அரச்சானை நினைத்து பெருமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் எனக்கோ அவனைப் பற்றிய கவலை வந்து விடும். கால நேரமெல்லாம் பார்க்காமல் குடும்பம், உறவுகள் என்ற கவலையின்றி ஆஃபீசே கதியென்று கிடக்கிறவர்களைத் தானே முதலாளிக்குப் பிடிக்கும். அவரது வேலையை அல்லவா அரச்சான் சுமந்து கொண்டு பத்திரிக்கை நல்லபடியாக நடக்க தன் வாழ் நாளையே அழித்துக் கொண்டு வருகிறான். இதில் என்ன அவனுக்கு சந்தோஷம் இருக்க போகிறது ?

என்னுடன் இணைந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். பேசிக் கொண்டே நடந்தோம்…

”அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தால் 100 பெர்சண்ட் வரி விலக்கு தருகிறார்களாம் ? ”

”அடே, பரவாயில்லையே…”

”என்ன அனாதி பரவாயில்லை என்று சொல்கிறாய். இவ்விஷயத்தில் இருக்கும் சூட்சுமத்தை நீ புரிந்து கொள்ள வில்லையா ?”

”என்ன சூட்சுமமோ எனக்குப் புரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள்.”

”ஆயிரம் ரூபாய்க்கு பில் போடச் சொல்லி விட்டு ஐநூறு ரூபாய் பணம் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா”

”ஆமாம், எலக்ட்ரிசியன்ஸ், பிளம்பர்ஸ் இப்படி சில பேர் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் “

”கட்சிகளுக்கா கணக்கு காட்ட முடியாது ?” என்று இழுத்தான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது நச்சென்று மண்டையில் உரைத்தது.

”இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது தெரியவில்லை, கொஞ்சம் கூட இந்தியாவின் நன்மையை உத்தேசித்து இந்த பட்ஜெட் போடப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்”

“ ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?”

”ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன அனாதி. பிளாக்குகளில் எழுதுகிறார்கள். படித்துப் பாருங்கள் “

”மேலும் ஒன்று, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கும் நிறுவன்ங்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்கு ஏதாவது பிரதியுபகாரம் எதிர்பார்ப்பதும் அதைச் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நன்கொடை வாங்கிய கட்சியும் ஆட்படுவது சகஜம்தானே ” என்றான்.

”இனிமேல் நேர்மைக்கு எங்கே இடமிருக்கப் போகிறது அரச்சான்” என்றேன்.

அரச்சான் சொன்ன அந்தரங்க கதைக்கு வருகிறேன்.

அவருக்குள் ஒரு பெரும் வியாதி. அழகான திருமணமான மாமிகள். அவருக்குப் பிடித்த காட்டேஜுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது மாமிகள் வருவார்களாம். ஆஃபீஸை விட்டால் வீடு. வீட்டை விட்டால் ஆஃபீஸ் என்றிருக்கும் அவருக்கு எப்படி மாமிகள் கிடைக்கிறார்கள் என்பது இதுவரையிலும் யாருக்கும் புரியாத மர்மம் என்று சொன்னான் அரச்சான். எப்படி வருகிறார்கள், யார் ஏற்பாடு செய்கிறார்கள் என்று இதுவரையிலும் கண்டு பிடிக்க முடியவில்லையாம். தொடர்ந்து அவனது பத்திரிக்கை நிருபர் ஒருவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். விஷயம் வெளிவந்தால் சொல்கிறேன் என்று சொன்னான் அரச்சான். அவர் இதுவரையிலும் செல்போனை பயன்படுத்தியதே இல்லையாம். போனும் பேச மாட்டாராம். நெட்டும் பயன்படுத்தமாட்டாராம். பின் எப்படி என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான் அரச்சான்.

குறிப்பு : இது ஒரு தொடர்கதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. அந்தரங்க கதையில் வரும் செய்திகள் அனைத்தும் கற்பனை. இக்கதை ஒரு ஆரம்பத்திற்காக சொல்லப்பட்டது. தொடரும் கதைகளில் அதிரடிகள் தொடரும்.

4 Responses to அ.தி. அந்தரங்கக் கதவுகள் பகுதி – 1

 1. vijay சொல்கிறார்:

  நல்ல கதை …தொடரட்டும் உங்கள் பணி

  • அனாதி சொல்கிறார்:

   நன்றி விஜய்.. படிக்க எப்படி இருக்கிறது ? என்ற கருத்தினை இட்டால் இன்னும் மெருகேற்றி எழுத இயலும்.

 2. இரவுப் பறவை சொல்கிறார்:

  அடுத்த பதிவு எப்போ????

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: