தமிழே தமிழே… ! ! !

ஜூலை 31, 2009

பொன்கரங்களால் பொன்னான வாக்கை
தாரீர் தாரீர் என்று தலை கவிழ்ந்து வந்தவரெல்லாம்
மாட மாளிகையிலே கோடிகளில் குளிக்கின்றார்

ஏழை வீட்டு அடுப்படியிலே
பாசி படர்ந்து கிடக்கிறது
பாரீர் பாரீர் என்கின்றார்
வளம் கொழிக்கிறது நாடென்பார்

கோமான்களின் காலடிகளில்
கொட்டுகின்றார் தன் மானத்தை
விற்கின்றார் தமிழர் மானத்தை

மானம் போன பின்பும்
துளிக்கணமும் உயிர் தங்கா
தமிழ் மண் இன்று வஞ்சகர்களின்
வாய் வீச்சிலே மண்ணாகி விட்டதோ

நெஞ்சிலே வேல் தாங்கி
வீர மரணம் அடைந்த
தமிழனோ தன்னை விற்று
தன் மண்ணையும் விற்கிறான்
விதை பழுதோ மண் பழுதோ

வற்றாத நதிகள் சுடுமணல்
கோபுரங்களாய் கப்பலேறி பயணிக்கின்றன
கோமான்களின் பணப்பெட்டி
காகிதங்களால் நிறைந்து வழிகின்றன

தங்கத் தமிழ்த் தலைவரெல்லாம்
தங்கத் தூளியிலே உன்னை விற்ற
காசிலே உறக்கம் கொள்கின்றார்
உற்றாரும் உறவினரும் உள்ளம்களி
கொள்கின்றார்

எச்சில் காயுமுன்னே வாசல் தாண்டிச்
செல்வோரெல்லாம் தமிழே
உன்னைக் காக்க உறுதிமொழி ஏற்கின்றார்.

தமிழே தமிழே தலைகுனிந்து
நிற்கிறாய் ?
நீ எப்போது தலை நிமிர்வாய் ?


கோடிகளைப் புரட்டும் திமுக லேடி : ஜூ.விகடன் எக்ஸ்க்ளுசிவ்

ஜூலை 31, 2009

மேலும் விபரங்களுக்கு ஜூனியர் விகடன் படித்தும், பார்த்தும் தெரிந்து கொள்க. படா சூப்பர் கட்டுரை.. அந்த அம்மா பேசுவது எல்லாம் சூப்பரா கேட்குது.

ஜூவியின் கட்டுரையினைத் தொடர்ந்து வெளிவரப்போகும் அறிக்கைகள்.

அறிக்கை 1:
அந்தப் பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி. எதிர்க்கட்சிகள் சேர்ந்து நடத்தும் அரசியல் பழிவாங்கல்தான் மேற்படிக் கட்டுரை.

அறிக்கை 2 :
இதெல்லாம் கம்ப்யூட்டரில் செய்யப்பட்ட சித்து வேலை. அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லவே இல்லை

அறிக்கை 3:
என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும், அந்த பத்திரிக்கையும் சேர்ந்து செய்யும் அக்கிரமச் செயல்

இப்படி இன்னும் என்னென்னவோ அறிக்கைகள் வர இருக்கின்றன.
படிக்க ஜாலியாய் இருக்கும்.

அந்த அமைச்சரையே வம்புக்கு இழுக்கின்றார்கள். ஏன் என்று தெரியவில்லை. அவர் தனது கடமையைச் சரியே செய்கிறார்.

திமுகவின் மீது சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை.

ஆமாம் இன்னும் எப்படி கோலங்கள் தொடர் அந்த டிவியில் வந்து கொண்டிருக்கிறது ? புரியாத மர்மம் இதுதான்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன ? என்று யோசிக்கின்றீர்களா ?

மக்கள் எவ்வழியோ அவ்வழியே ஆட்சியும் என்பது தானே உண்மை.


கடவுளும் பூசாரியும் – கள்ளப்பணம்

ஜூலை 27, 2009

கடவுளுக்கும் பூசாரிக்கும் நடந்த கள்ளப்பண விவகாரம்…

பூசாரி பாருய்யா அக்கிரமத்தை, சட்டசபை பைப்படி மாதிரியில்லே ஆயிடுச்சு என்றார்.

பூசாரிக்கு புரிந்து விட்டது. கடவுள் மெகபூப்பின் சட்டசபை மைக் அடிதடியைச் சொல்கிறார் போலும் என்று எண்ணிக் கொண்டார்.

பெண்கள் இயல்பு மாறவே மாட்டார்கள் போலும் பூசாரி. உன் மா நிலத்தில் கூட மைக் சண்டை நடந்துச்சு தெரியுமா ?

அய்யா கடவுளே, நீங்க என்ன வேலியில போற ஓணானை தூக்கி வேட்டிக்குள்ளே விட்டுறுவிய போலிருக்கே

என்னய்யா பூசாரி சொல்றே

எதுக்குங்க வம்பு என்றார்.

அன்றைக்கு பூசாரிக்கு பணத்தேவை ஏற்பட்டது. நம்மிடம் தான் கடவுள் இருக்காரே அவரிடம் கேட்கலாம்னு நெனச்சு கடவுளே எனக்கு கொஞ்சம் பணம் வேணும் உங்க அருளாலே கொடுக்க முடியுமான்னு கேட்டாரு.

கடவுள் சிரித்தார் சிரித்தார் அப்படி ஒரு சிரிப்பு..

ஏய்யா பூசாரி, நானும் இந்த நாட்டுல தானே இருக்கிறேன்

ஆமாம்.

அப்போ, நானும் இந்த நாட்டுப் பிரஜை தானேய்யா

ஆமாம் கடவுளே

கணக்குல காட்டாத பணத்தை என்னான்னுய்யா சொல்லுவீங்க…

கருப்புப் பணம்னு சொல்லுவோம்

அப்போ கருப்பு பணத்தை கொடுக்கிறதும், வாங்குறதும் தப்புத்தானய்யா

பூசாரிக்கு கிறுகிறுவென ஆகிவிட்டது.


வல்லான் வகுத்ததே சட்டம் !

ஜூலை 26, 2009

உலக மாந்தர்களை சுற்றிச் சூழ்ந்திருக்கும் மாயை அது . வல்லான் வகுத்ததே அது. இல்லானுக்கு எங்கே கிடைக்கிறது அது. வல்லானுக்குத் தெரியும் இல்லான் அதை மீற மாட்டானென்று. ஆனால் இல்லானுக்குத் தெரியாது வல்லானுக்கே அதுவென்று.

இருக்கிறதென்பார்
தர்மமென்பார்
நீதியென்பார்
கடவுளென்பார்
எங்கேயென்றால்
வல்லானின்
பணக்கட்டுகளை
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
அது

ஆனால் இவை எவையும் வல்லானுக்கு கிடையாது. இல்லானுக்கே வல்லானால் தரப்பட்டது. உலகைச் சூழ்ந்திருக்கும் மாயை சட்டமும் நீதியும். இல்லையென்று சொல்லுவார் உண்டெனில் உரக்க கத்தட்டும் ஆதாரத்தோடு.

ஆதாரம் என்னவென்றா எக்காளமிடுகின்றீர்கள் !

இதோ பாருங்கள்.. படித்து விட்டு உங்கள் முகத்தை எங்கே வைக்கப்போகின்றீர்கள். பத்தாயிரத்துக்கு விலைபோகும் மூளைக்காரர்களுக்கு பீட்சாவிலும் குளிர்பானத்திலும் மயக்கத்தை வைத்து விட்டு கொடுத்த பணத்தை திரும்பப் பெற பணப்பெட்டியை திறந்து வைத்து எக்காளமிட்டுக்கொண்டிருக்கும் வல்லானை யார் அறிவார் ?

ஒரே ஒரு உதாரணத்தைப் பாரீர் உலகோரே… பாரீர்…

http://www.hindu.com/mag/2009/07/26/stories/2009072650190600.htm

இப்பதிவை எழுத வைத்த தி ஹிந்து நாளிதழுக்கு நன்றி..


கடவுளும் பூசாரியும் – காலமும் நேரமும்

ஜூலை 23, 2009

பூசாரிக்கு ஒரே அலுப்பு.

என்னடா தினந்தோறும் பூஜை பண்றோம். பக்தியா இருக்கிறோம்.
ஆனா இந்தக் கடவுளு காசையே கண்ணுல காட்ட மாட்டேங்குதேன்னு உண்மையிலே கடவுளு இருக்கா இல்லையான்னே தெரியலையேன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாரு.

அடச்சே நம்ம நிலமை இப்படி ஆயிடுச்சே, பூசாரிக்கே நம்ம மேலே சந்தேகம் வந்துடுச்சே, உடனே தீர்த்துடனும்னு நெனச்சு, கடவுளு பூசாரிக்கு எதிரே பிரசன்னமானாரு.

பூசாரி, நான் தான் கடவுள் வந்திருக்கிறேன்னாரு.

பூசாரிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அவரு கடவுள்தானான்னு சந்தேகம் வேற வந்துடுச்சு. கடவுளைப் பார்த்து ஒரு கேள்வியை போட்டாரு.

ஏங்கடவுளே, ஊரெல்லாம் கோயிலைக் கட்டணும்னு சொல்லுறாங்களே அது எதுக்குன்னாரு.

கெட்டுப் போன உலகத்துல கெட்டுப் போகாம ஒரு இடம் வேணும்னு நினைச்சுதான் கோயிலைக் கட்டனும்னு சொன்னாங்க. ஆனா திருட்டுப் பயலுவ கோயிலையே கெட்டுப் போவ வச்சுட்டானுவ என்றார் கடவுள்.

பூசாரிக்கு வந்திருக்கிறது கடவுள்தான்னு தெரிஞ்சுடுச்சி.

தனது சோகக்கதையெல்லாம் கடவுளுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பூசாரி.

அதுக்கு கடவுள் சொன்னாரு எல்லாத்துக்கும் காலம் நேரம் வரணும்னு.

பூசாரிக்கு கோவம் வந்துடுச்சு.

நீங்களே அப்படிச் சொல்லலாமா கடவுளேன்னாரு பூசாரி.

அதுக்கு கடவுள் சொன்னாரு, பூசாரி, தெனமும் பூசை புனஸ்காரமெல்லாம் எத்தனையோ கோயில்லே நாளு தவறாம செய்யுறாங்க. ஆனா பாரு, சில கோயில்ல எதுவுமே நடக்கிறதில்லே. அதுக்கும் காலம் நேரம் வந்தாத்தானே பூஜை, புனஸ்காரமெல்லாம் நடக்குது. கடவுளுக்கும் காலம் நேரம் வரணும்னு இருக்கிறப்போ மனுஷனுக்கு மட்டும் கிடையாதான்னாரு.

பூசாரிக்கு வாயடைத்துப் போய்விட்டது.

இனிமே என்னா, தினமும் கடவுள் வருவாரு, பூசாரிக்கிட்டே பேசுவாரு. நீங்களும் ஒரு தடவை கடவுள் என்ன பேசுறாருன்னு தினமும் தளத்தை எட்டிப் பார்த்திருங்க …

கருத்து, எழுத்து உதவி : ருத்ர தாண்டவம் திரைப்படம்.


நயன்தாராவிடம் மட்டும் ஏன் இவ்வளவு ?

ஜூலை 20, 2009

நயன்தாராவிடம் மட்டும் ஏன் இவ்வளவு நடிகர்கள் மாட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு மற்ற கதா நாயகிகளிடம் இல்லாத உள் கட்டமைப்பு வசதிகள் நயன் தாராவிடம் மட்டுமே இருக்கிறதாம் என்றும் திரையுலகில் யுவன்சங்கர் ராஜா இதுவரை சாதித்தது என்ன என்ற கேள்விக்கு, கரகர குரல் உள்ள பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதும், வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாதபடி இசையமைப்பதும் இவரின் மிகப்பெரிய சாதனைதான் என்கிறார் குருவியார். குருவியாரின் பதில்கள் தினத்தந்தியில் காலம் காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் பகுதி. நக்கல் நையாண்டியில் இவருக்கு நிகர் இவர்தான்.

அப்பாக்கள் உதவியுடன் தகுதி இருக்கிறதோ இல்லையோ சினிமாவுக்குள் நுழைந்து கொண்டு படைப்பாளிகளாய் வலம்வரும் போக்கு தமிழ் சினிமாவுலகில் தற்போதைய ட்ரண்ட். அப்பாவின் பெயரை முன் வைத்து தரமில்லாத படைப்புகளை தருவதால் கோடிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் குப்பைக் கூடைக்கு சென்றன. பணத்தைக் கொட்டும் தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைக் காரர்களிடம் ஏமாந்து பிச்சைக்காரர்களாய் திரிகின்றனர். மினிமம் கியாரண்டியாவது பெற நடிகைகளின் அங்கங்களைப் படையல் இட வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறது தமிழ் சினிமா. தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். வாரிசுகளை நம்பினால் உங்கள் வாரிசுகள் பிச்சைக்காரர்களாய் மாறி விடுவார்கள். வாரிசு மாயையில் சிக்கி சின்னாபின்னாப் பட்டுப் போய் விடாதீர்கள். எவ்வித தகுதியும் இல்லாதவர்கள் தான் வாரிசு என்று சொல்லி கிளம்புவார்கள். ஜாக்கிரதை அய்யா ஜாக்கிரதை. உங்களால் எத்தனையோ குடும்பங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.

பல இயக்குனர்களால் தமிழர்கள் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் கேள்விக்குரியதாக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று, வசனங்களை மட்டுமே பேச வேண்டிய மிக மட்டமான நடிப்புக் கலையினை வெளிப்படுத்துவது. காதல் காட்சிகளில் கூட வசனங்கள் பேசுகின்றார்கள். சோகமான கட்டங்களில் கூட வசனங்கள் பேசுகின்றார்கள் கதாமாந்தர்கள். இந்தப் போக்கை தங்களது வாழ்விலும் பயன்படுத்த துணியும் மாந்தர்கள் அபத்தங்களில் சிக்கி வாழ்வை சிக்கலாக்கி கொண்டு விடுகின்றனர். கண்ணால் ஆயிரம் சேதிகள் சொல்லும் பெண்கள் இன்றைக்கு வார்த்தைகளை சுருக்கி தனது உணர்வுகளை வார்த்தைப் படுத்தி வருகின்றனர். நாடக பாணியிலான வாழ்க்கை முறைக்குள் தங்களை வாழ வன்கொடுமை செய்துகொள்கின்றனர். உணர்வு பூர்வமான வாழ்க்கையினை வசன நடைகளில் வெளிப்படுத்த முயல்கிறார்கள். இடியாப்பச் சிக்கலில் சிக்கி சிதைந்து போகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணமாய் இருப்பது தமிழ் சினிமாதான்.

காமெடி செய்கிறேன் பேர்வழி என்று சந்தானம், விவேக் இருவரும் பேசும் வசனங்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல நரகமாகி விடுகிறது. சமீபத்தில் விவேக் வேறு வடிவம் எடுத்தார். நாய் வாந்தி எடுத்து அதை நக்கிச் சாப்பிடும். நாய்க்குப் புண் வந்தால் அதை நக்கி நக்கியே பெரிதாக்கி அதனாலாயே இறந்தும் விடும். அதைப் போன்றது தான் சந்தானம், விவேக், வடிவேலு காமெடிகள். வடிவேலு காமெடி என்ற பெயரில் நேரக்கொலை செய்கிறார். கவுண்டமணி செந்தில் காமெடிகளை வேறு வழியின்றி ரசித்தனர் தமிழர்கள்.

மாசிலாமணியில் பாஸ்கரின் காமெடியில் படம் குப்பைக் கூடைக்குச் சென்று விட்டது. ஒரே ஒரு வரிக்கதை. நாயகி வன்முறை நாயகனை பார்க்க நேரிடுகிறது. அதனால் காதலி வீட்டில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். இரு வேடம் போடுகிறார் நாயகன். அய்யோ.. இதற்குமேல் எழுதவே எரிச்சலாக இருக்கிறது. மாசிலாமணியை அரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. கொடுமை. சன் நெட்வொர்க் மக்களை விளம்பரத்தால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது சரி, கேனத்தனமான இளிச்சவாயர்கள்தானே தமிழர்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்னால் பாலாற்றில் அணையே கட்ட முடியாது என்று உதார் விட்டுக் கொண்டு திரிந்தனர். இன்றைக்குப் பாலாற்றில் அணை கட்டுகிறது ஆந்திர அரசு. தமிழக மக்களிடம் பொய் சொல்லியிருக்கின்றனர். வட தமிழக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காவிரி, முல்லைப் பெரியார் அணைகளை எல்லாம் மற்றோருக்கு விட்டுக் கொடுத்து வந்தாரை வாழ வைத்து விட்டு அனாதையாய் திரியப்போகிறான் தமிழன். தமிழர்கள் உலகில் தனித்து விடப்பட்ட ஓர் இனம். இவர்கள் என்றைக்கு சினிமா நடிகைகளில் தொடையிடுக்கில் உற்றுப் பார்ப்பதை நிறுத்துகிறார்களோ அன்றைக்குத் தான் உருப்படுவார்கள்.

நீங்கள் எலக்‌ஷன் ட்யூட்டிக்குச் செல்கிறீர்களா என்று கேட்டார் ரபி பெர்னாட் ஜெயாடிவியில். சத்துணவுப் பணியாளார்களின் பிரதினிதி இருவர் இல்லை என்றனர். என்றைக்கு நீங்கள் எலக்‌ஷன் ட்யூட்டிக்குச் செல்கின்றீர்களோ அன்றைக்கு உங்களது போராட்டத்தை அரசு கவனிக்கும் என்றார். ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஆளும் கட்சி எலக்‌ஷனில் தவறுகள் செய்வதாக அர்த்தம் வரும்படி சுட்டிக் காட்டினார். அது என்ன தப்பு என்று ரபி பெர்னாட் நேரடியாக சொல்ல வில்லை. நாளைக்கு கலைஞர் டிவிக்குச் சென்றாலும் செல்வார். சன் டிவியில் முகவரி பெற்றவர் இப்போது ஜெயா டிவியில் பேசிக் கொண்டிருக்கிறார். சந்தர்ப்பவாதம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. குற்றம் சொல்லவும் ஒரு தகுதி வேண்டுமல்லவா?


முத்தம் கொடுப்பது எப்படி ? போட்டிக்குப் போட்டி

ஜூலை 19, 2009

சிம்புவின் நயனதாரா உதடுகடியையும் மிஞ்சி விட்டது உச்சகட்டடம்.

சிம்புவிற்கும் மேலே வில்லங்கமாய் சிந்திக்கும் திறனுடையவர்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படியெல்லாம் நிரூபிக்கின்றார்கள் பாருங்கள்.

உச்சகட்டம் என்ற் தமிழ் திரைப்படத்தின் ஒரு காட்சி தான் இது. விரைவில் தமிழில் அந்த மாதிரிப் படம் கூட வர இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

WWW.OKGOT.COM


%d bloggers like this: