11ஆயிரம் கோடி கறுப்புப் பணம்

சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து வெளிவரும் சுவிட்சர் இல்லஸ்ட்ரேட் பத்திரிகை கடந்த 1991-ஆம் ஆண்டு நவம்பர் 11 தேதியிட்ட இதழில் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுள்ளவர்களின் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் பெரும்பாலும் இந்தியா போன்ற ஏழை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்களே இருந்தன. அந்தப் பட்டியலில் முதல் 14 இடத்தில் இடம் பெற்றிருப்பவர் ராஜீவ் காந்தி. அவர் போட்டுள்ள தொகை 11,000 கோடி ரூபாய். எல்லாம் ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் அடித்த கொள்ளை. பட்டவர்த்தனமாக பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகையில் ராஜீவின் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ராஜீவ் இப்போது உயிருடன் இல்லாததால் இந்தச் சொத்து அத்தனையும் ராஜீவ் குடும்பத்தைச் சாரும்.

இந்தச் செய்தி தொடர்பாக காங்கிரஸ் 18 ஆண்டுகளாக மௌனம் சாதித்து வருகிறது என்கிறார் எஸ். குருமூர்த்தி. அவர் ஒரு பி.ஜே.பி. ஆதரவாளர் என்று சொல்லித் தப்பிப்பதில் பயனில்லை. அவருடைய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பினர் பதில் சொல்லவில்லை என்பது மட்டும் அல்லாமல், “இந்தப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று பி.ஜே.பி. சொல்வதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது; இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் தலித் குடிசைகளில் ஓர் இரவு தங்கி நாடகம் நடத்துகிறார் ராஜீவின் புதல்வர் ராகுல் காந்தி.

வட இந்தியாவில் காங்கிரஸின் நிலை இப்படியிருக்க, இங்கே தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன் கோவையில் ராணுவத்தினர் தாக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். ஏனென்றால், இலங்கையில் தமிழ் இனம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காங்கிரஸ் அரசும் சோனியாவும்தான் காரணம் என்று நம்புகிறார்கள் தமிழர்கள். இங்கிலாந்தில் சீக்கியக் குழந்தைகள் தலைமுடி (டர்பன்) அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் அதில் தலையிடும் இந்திய அரசு, இங்கே இலங்கையில் ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் தினம் தினம் இலங்கை ராணுவத்தால் கொல்லப் படும் போது அது பற்றி சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. அதுவும் தவிர, தமிழ் இனப் படுகொலையைச் செய்யும் ராஜபக்சேயின் ராணுவத்துக்கு உதவியும் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. அப்படியிருக்கும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு தி.மு.க.வும் காங்கிரசும் இங்கே ஓட்டுக் கேட்க முடியும்?

இதுதான் தமிழர்களின் இன்றைய கேள்வி.

நன்றி : சாருஆன்லை.காம்

முழு கட்டுரையினைப் படிக்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: