பணம், பெண், பட்டைச்சாராயம் = இந்தியத் தேர்தல்

நெல்லை வட்டாரத்தில் ஊர் நாட்டாமைகள், குட்டிக் குட்டி ஜாதிக் கட்சி தலைவர்கள், அமைப்புகள், பிரமுகர்களுக்கு வாகனங்களாகவும், பொருளாகவும் கட்சிகள் வழங்கி ஓட்டுக்களை வாங்குகிறார்களாம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, ஸ்டம்பு போன்றவற்றை கொடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஓட்டுக்களை சேகரிக்கின்றார்களாம். பச்சை, சிவப்பு, வெள்ளை என மூன்று கலரில் காசுக்கு கொடுக்கப்படும் டோக்கன்கள். கலருக்கு ஒரு அமெளண்ட் தரப்படுமாம்.

கன்னியாகுமரி தொகுதியில் சிறு தலைகளுக்கு மூவாயிரம் ரூபாய், பெருந்தலைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

கரூர், ஈரோடு, சேலம் தொகுதிகளில் வீடுகளுக்கே கொரியர் மூலம் பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடுகள் நடக்கிறதாம். வாக்காளர்கள் விரும்பினால் ஏடிஎம்மில் பணமும் செலுத்துவார்களாம்.

சேலத்தில் இளைஞர்களைக் கவர செல்போன்களை வழங்க விருக்கின்றார்களாம். கோவையில் வாக்காளர்களுக்கு சரக்காம். வெள்ளை டோக்கனுக்கு இரண்டு லிட்டர் கள்ளும், பச்சை டோக்கனுக்கு ஒரு லிட்டர் கள்ளும் கிடைக்குமாம்.

பொள்ளாச்சியில் அதிக ஓட்டுக்களை வாங்கித் தரும் பூத் ஏஜென்டுகளுக்கு மூன்று பவுன், இரண்டு பவுன் என தங்கச் சங்கிலிகளை பரிசாக தர விருக்கின்றாராம் ஒரு வேட்பாளர்.

சிவகங்கையில் கைக்கடிகாரங்கள் வழங்கப்படுகின்றனவாம். பெண்களுக்கு சில்வர் குடங்களும் தரப்படுகிறதாம்.

மதுரையில் கட்சிக் காரர்களுக்கு மூன்று வேளையும் கறிச்சோறு போட்டு, பூத் கமிட்டியில் தரப்படும் டோக்கனுக்கு சரக்கும் தருகிறார்களாம். கோழிக்கறி விலை நூற்று இருபது ரூபாய்க்கு ஏறி விட்டதாம். கட்சிக்காரர்களுக்கு கரை வேஷ்டி, சட்டையும் வழங்கப்படுகிறதாம்.

திண்டுக்கல், ராம நாதபுரம் ஊர்த் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் வேறு செய்ய கட்சிகளிடையே போட்டியே நடைபெறுகிறதாம்.

முடிவாக, ஆந்திராவின் வழிகாட்டுதல் படி பணம், பட்டைச் சாரயத்தோடு தொட்டுக்கொள்ள கிளுகிளு பெண்களையும் சப்ளை செய்யும் திட்டமும் அரசியல் கட்சிகளிடையே இருக்கிறதாம்.

செய்தி ஆதாரம் – பரபரக்கும் தேர்தல் களம், குமுதம்
நன்றி : குமுதம்

One Response to பணம், பெண், பட்டைச்சாராயம் = இந்தியத் தேர்தல்

  1. வல்வையூரான் சொல்கிறார்:

    பணம் ஒட்டிய வயிற்றின் அன்றாட நிலைக்கு
    பெண் அன்றைய நாளிகைக்கு
    பட்டைச்சாராயம் இறவாமல் இறப்பதற்கு

    இந்தியத் தேர்தலில் குடிமகன் அனைவரும்
    மழை நிலத்தின் பட்டுப் பூச்சிகளே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: