த லயன் ஷேர் !

மே 29, 2009

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினைக்கு காரணம் யார் என்றெல்லாம் எழுதப்போவதில்லை. எழுதினாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. இவ்வுலகம் மனித அரக்கர்களால் ஆளப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன. வரலாற்றில் அவர்கள் பெயர்கள் சர்வாதிகாரிகளாய், கொடுங்கோலர்களாய் பதிவு மட்டுமே செய்யப்படும். இவர்களால் கொல்லப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும் வாயில்லாப் பிராணிகளான மக்கள் மட்டுமே. அம்மக்களிடமிருந்தே மீண்டும் சர்வாதிகாரி உருவாக்கப்படுகிறான். மீண்டும் அழிக்கிறான். ஆள்கிறான். இது தொடர்கதை.

கார்டியன் ந்யூஸ்பேப்பரில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஒவ்வொரு பாலஸ்தீனியர்களும் நாளொன்றுக்கு 10 லிருந்து 15 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்களாம். மீதமுள்ள தண்ணீரை இஸ்ரேலர்கள் பயன்படுத்துகிறார்களாம். அதாவது வருடத்திற்கு 240 கியூபிக் வாட்டரை ஒரு இஸ்ரேலியன் பயன்படுத்துகிறாராம். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீராதாரத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் பங்கினையும் சேர்த்து அனுபவிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது வர்ல்ட் பேங்க். இதைத்தான் “ த லயன் ஷேர் “ என்கிறது கார்டியன். யாரிடம் அதிகாரமிருக்கிறதோ அவரே முக்கால் பங்கு வசதியை அனுபவிப்பது என்பது த லயன் ஷேர் . ஆனால் அப்படி அனுபவிப்பது அக்கிரமச்செயல்.

தமிழ் நாட்டிலும் “ த லயன் ஷேர் “ இருக்கிறது.

அப்பா – முதலமைச்சர்
பெரிய மகன் – மத்திய அமைச்சர்
சிறிய மகன் – உள்ளாட்சித்துறை அமைச்சர்
பேரன் – மத்திய அமைச்சர்
மகள் – எம்பி

நன்றி: கார்டியன் ந்யூஸ்பேப்பர் லிமிடட்.


இந்தியாவின் எக்கானமி

மே 26, 2009

இன்றைய நாட்களில் ஜப்பான் சந்தித்து வரும் பொருளாதாரப் பிரச்சினை பற்றிய விரிவான கட்டுரை ஒன்றினை கடந்த வாரத்தில் ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. உலகளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் பிரச்சினையும், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகளும் அதனால் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கின்றது என்று அக்கட்டுரை விவரித்துச் சென்றது. அதன் பாதிப்புகள் என்னென்னவென்று அழகாக சொல்லிச் சென்றார் கட்டுரையாளர். அக்கட்டுரையினைப் படித்துக் கொண்டிருக்கும் போது என் மனதில் ஏற்பட்டது ஒரு சந்தேகம்.

இந்தியாவில் பொருளாதாரப் பின்னடைவு பற்றியதும், அதற்கான எவ்வித சிறு அசைவுகளும் தென்படாதது மர்மமாக இருக்கின்றது. ஒன்று எனக்குப் புரியாமல் இருக்க வேண்டும். அல்லது வேறேதோ காரணமிருக்க வேண்டும். காரணம் என்னவென்று விளங்கவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்னர் சலவை, குளியல் சோப்புகளின் விலை முறையே 5ரூபாய், 10 ரூபாயாக இருந்தன. இன்றைக்கு 15 ரூபாய், 18 ரூபாயாக விலையேற்றப்பட்டிருக்கின்றன. கச்சாயெண்ணெய் விலை குறைந்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவே இல்லை. ஆனால் பாருங்கள் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமான கட்டணங்கள் மட்டும் உடனடியாக குறைக்கப்பட்டன. ஏன் என்று எவர் கேட்கப்போகிறார்கள் ?

தமிழ் நாட்டில் 50 ரூபாய்க்கு மளிகைச்சாமான் வழங்குகிறோம் என்று சொல்கிறார்கள். வழங்கும் ஆட்சியின் மந்திரி பிரதானிகள் ரேஷன் அரிசியையும், ரேஷன் மளிகைப் பொருட்களையுமா சாப்பிடுகிறார்கள். ஆமாம் தமிழ் நாட்டில் மன்னராட்சி தானே நடக்கிறது ???

இடையில் இதுவேறு வந்து பிராணனை வாங்க வந்து விடுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

கட்டுமானத்துறையிலும் சொல்லும்படியான வளர்ச்சிகள் இன்னும் வரவில்லை. கட்டுமான கம்பெனிகள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை தவணை தவறாமல் கட்டுகின்றனவா என்றும் புரியவில்லை. வங்கிகள் லாபக் கணக்கைக் காட்டுகின்றன.

ஒரே மர்மமாக இருக்கின்றன. பொருளாதாரத்தில் விற்பன்னராக இருக்கும் பதிவுலக நண்பர்கள் இவ்விஷயத்தைப் பற்றி சிறிது எழுதினால் அனாதிக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.


திமுகவிற்கு காங்கிரஸ் அடித்த ஆப்பு !

மே 22, 2009

மன் மோகன் சிங் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை : கலைஞர் – மக்கள் டிவி ஃப்ளாஷ் நியூஸ். ( 9.50am)

டிஆர்பாலு சென்னை திரும்பினார். திமுக கவலைப்படவில்லை என பேட்டி – டைம்ஸ் நவ் செய்தி ( 9.45am)

வாபஸும் பெற முடியாது. விட்டு விலகவும் முடியாது. அப்படிச் செய்தால் தமிழ் நாட்டில் ஆட்சி பறி போய் விடும்.

காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து இனிமேலொன்றும் செய்ய இயலாது என்ற சூழ் நிலைக் கைதியாகி விட்டார் கலைஞர்.

இருபக்கமும் ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறது திமுக.

மகன், மகள், பேரனுக்கும் கேபினட் அந்தஸ்த்து பதவி கொடுப்பதில் காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்று ஹிந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

இத்தருணத்தில் கலைஞரின் அரசியல் தந்திரம் என்னவென்று உற்றுப் பார்க்க வேண்டும். என்ன செய்யப்போகிறார் கலைஞர்?

விதியின் விளையாட்டில் அகப்பட்டுக் கொண்டாரா கலைஞர் ?


பசங்க – வித்தியாசமான விமர்சனம்

மே 22, 2009

பசங்க – தமிழ்ப் பட உச்சகட்ட, மிச்சக்கட்ட, ஒச்சக்கட்ட நடிகர்களின் நடிப்பெல்லாம் ஜீவா, அன்புவின் கால் தூசுக்கும் எட்டாது என்று நக்கலடிக்கும் படம். புதுக்கோட்டையைச் சேர்ந்த இயக்குனரின் குசும்புத்தனம் அப்பட்டம். தஞ்சாவூர்காரர்களை தஸ்க்கன் என்பார்கள். புதுக்கோட்டைக்காரர்களை புஸ்க்கன் என்று சொல்லலாம் போல. அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் காட்சியமைப்புகளையும், வசனங்களையும் கிழித்து தொங்கப் போட்டிருக்கிறார்.

யாரோ ஒரு பதிவர் எழுதியிருந்தார். பசங்க திரைப்படத்துக்கு ஆரம்ப பில்டஃப் கொடுத்தது அதிகமென்று. விஜய்க்கு பில்டஃப்ஃபு, அஜித்துக்கு பில்டஃபு, வயதான காலத்தில் உச்சக்கட்ட, உலகக்கட்ட நடிகர்களுக்கெல்லாம் பில்டஃப்பு கொடுத்தால் வாயில் ஈ போவது கூட தெரியாமல் இளித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்களாம். ஆனால் சிறுவயதில் குறும்பு செய்யும் பசங்களுக்கு பில்டஃப்புக் கொடுத்தால் வலிக்குமாம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் சில காட்சிகளை விட்டு விடுகிறேன். சொல்லி விட்டால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து போய் விடும்.

பைக் சேஷிங்க் – இது தான் உண்மையான பைக் சேசிங்க்… ஹீரோக்கள் டூப்போட்டு பார்க்கிறனுவங்களை கே.கூக்குறானுவளே அதை விட இந்தக் காட்சி அருமையோ அருமை.

மீனாட்சிக்கும், சோப்புக்கும் நடக்கும் உரையாடலின் போது நாயகன் படப்பாடல் வருமிடம் தமிழ் சினிமாவில் காதல் படும் பாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது.

சிறுகுழந்தை ஒன்று தன் அப்பனுடன் சண்டை போடும் எதிர் வீட்டு வாத்தியாரை எதிர்த்து, குட்டிக் கால்களால் நடந்து வந்து நாக்கைத் துறுத்தி வாத்தியாரின் முழங்காலில் குத்து விட்டு ஓடிப்போவது சிம்பு, தனுஷ் சண்டைக் காட்சி நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

வில்லன் ஜீவா, ஹீரோ அன்பு வீட்டில் நடந்த பிரச்சினைகளை பள்ளியில் சொல்லி நக்கலடிப்பது வில்லன்கள் ஹீரோக்களின் வீடுகளில் புகுவதை நக்கலடிக்கும் படக்காட்சி.

அவன் வருவானாடா?
வரமாட்டான் ஜீவா,
அவன் வருவானாடா?
வருவான் ஜீவா ? – ரன் திரைப்பட வசனம்.

அன்பு ஜீவாவைத் தேடிப்போய் அடிக்கும் காட்சியமைப்பை போல எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோம். இனிமேல் திரும்பவும் எந்த இயக்குனராவது (அதாவது மானம், கீனம் இருக்கிறவர்கள்) இக்காட்சி போன்று திரும்பவும் எடுக்க மாட்டார்கள் என்று நம்பலாம். இயக்குனரின் நக்கலோ நக்கல்.

இருவருக்கும் சண்டை நடக்கும் போது, ஒருவன் இடையில் ஒன்னுக்கு போய் வருவது சண்டை போடும் போது நடிகையைப் பார்த்து கண்ணடிக்கும் ஹீரோவை நினைவுக்கு கொண்டு வருகிறது.

தோப்புக்கரணம் போடும் போது ஜீவாவும், அன்புவும் விடும் சவால் உச்சக்கட்ட கிண்டலடிப்பு.

தனது அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சமரசம் ஆகியவுடன் ஹீரோ மீனாட்சி உதிர்க்கும் வாக்கியம் “ஒரு வழியா சீரியல் முடிந்து விட்டது போல”.

இயக்குனர் ராம நாராயணனை நக்கலடிக்கும் காட்சி ஒன்றைக் காட்டுகிறார் இயக்குனர். சிரித்துச் சிரித்து வயிற்று வலி எடுத்து விட்டது. அந்தக் காட்சி : வில்லன் ஜீவா க்ரூப் கருப்பசாமிக் கோயிலுக்குச் சென்று காசு வெட்டிப் போட்டு ஹீரோ அன்புவை பலிவாங்க வேண்டிக் கொள்வார்கள். அப்போது பல்லி ஒன்று உச் உச் கொட்டும்.

ஒத்தப்பிள்ளை இரட்டைப் பிள்ளை வசனம்.. பாக்கியராஜைக் கிண்டலிக்கிறார்கள்.

ஹீரோவுக்கும், வில்லனுக்கும் பிடிக்காததால் கல்யாணமே பிடிக்கவில்லை என்று பெற்றோர்களுடன் சண்டை போடுவதைப் பார்க்கையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் வில்லன்கள் செய்யும் வில்லத்தனத்தை நினைத்து நினைத்து … என்னத்தை எழுதுவது….

ஹீரோவும், வில்லனும் முடிவில் மாமனும் மாப்பிள்ளையாய் மாறி விடுவது எதிர்பாராத சம்பவம்.

பெரிய பள்ளியில் படிக்கும் பசங்களை வைத்து அன்புவை அடிக்க நினைக்கும் ஜீவாவிற்கு சமயத்தில் பெண் மூலம் அட்வைஸ் செய்வது ??? ஆகா ஆகா என்னே ஒரு நக்கல்.

””எங்க அம்மா சொல்லுவாங்க, இந்த வில்லனுங்கள் இப்படித்தானாமாம். கடைசியில நல்லவனுங்களா மாறிடுவானுவாங்களாம்”” பக்கோடாவின் வசனம்.

அன்பு ஆக்சிடென்டில் அடிப்பட்டுக் கிடக்கும் போது சக மாணவர்கள் பிரேயர் செய்வது… ஹி..ஹீ…..

பையன் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டு வருகிறான் என்று சொல்கிறார் டாக்டர்.

கை தட்டப்போகிறார்கள் என்று நன்கு தெரிந்து விடுகிறது. ஏன் கைதட்டுகிறார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வில்லன் ஜீவா முறைத்தபடி அன்புவை வந்து பார்ப்பான். இனி யாருகிட்டேடா சண்டை போடுவே என்று ஜீவாவின் அம்மா வில்லனைப் பார்த்துக் கேட்க, வில்லன் ஜீவா செய்யும் ஒரு செய்கை, என்ன ஒரு செண்டிமெண்டலான காட்சி… உச்சக்கட்ட நக்கல் இவ்விடத்தில் வருகிறது.

”சகிப்புத் தன்மையை வளர்த்துக்கொள்வதால் தான் வாழ்க்கையின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் “ மற்றும் ” ”புடிக்குதோ புடிக்கலையோ, கடையில் கஸ்டமருக்கிட்டே சிரிச்சுப் பேசறா மாதிரி பீ மூத்திரம் அள்ளுற மனைவிக்கிட்டேயும் பேசிட்டா பிரச்சினையே வராது “ வாத்தியார் சொல்லும் கருத்து.

சாம்ப்ராணி… இனிமேல் பெண்களுக்கு சாம்பிராணி போடுங்கப்பா உலக மகா இளிச்சவாய்க் தமிழ் மக்களே..

கண் அசைவில், பேச்சில், நடிப்பில் படம் பார்க்கும் வாயில் எச்சில் வழிய உட்கார்ந்து கொண்டிருக்கும் தமிழ் ரசிகனுவ மனதில் பச்செக் என்று ஒட்டிக் கொள்ளும் சோப்பிக்கண்ணு அருமையான செலக்‌ஷன்.

ஸ்ரேயாவின் சதையும், நயனதாராவின் சதையும் நாளடைவில் தொங்கிப் போய்விடும். ஆனால் அன்றைக்கும் இந்த சோபிக்கண்ணுவின் முகமும், கண்களும் உள்ளத்தை விட்டு அகலாது. நாங்க இடுப்பே இல்லாத குஷ்பூவுக்கும், இடுப்பைக் காட்டிய சிம்ரனுக்கும், தொடையக் காட்டிய ரம்பாவுக்கும் ஆப்பு வைத்த தமிழ் ரசிகர் இனம்.

வாத்தியார், வில்லன், ஹீரோ, ஹீரோவின் அப்பா, அம்மா செலக்‌ஷன் அபாரம்.

தமிழ் நடிகனுவவெல்லாம் உண்மையில் சின்னப்பசங்களை விடக் கேவலமா நடிக்கிறானுவன்னு நக்கலடிக்கும் படம் தான் பசங்க…

காசு கொடுத்து படமியக்கச் சொன்ன தயாரிப்பாளரின் படத்தையே நக்கலடித்த இயக்குனரின் அசாத்திய திறமைக்கு ஒரு சொட்டு.

ஒளிப்பதிவு, பாடல்காட்சி என்றெல்லாம் பார்க்காமல் படு ஜாலியாக பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான் பசங்க. இது அழகியைப் போன்று கடந்து போன மாணவ வாழ்க்கையை சொல்லவில்லை. இது வித்தியாசமான ஒன்று.

இது எப்படி இருக்கு ????


டியூசன் வாத்தியாரின் கணக்குப் பாடம்

மே 21, 2009

திருமணத்திற்கு முன் நான் கணக்கு டியூசன் கொடுத்து வந்தேன். இரண்டு +2 மாணவிகளுக்கு என் அறையில் கணக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருந்த நேரம். இரண்டு பேர் மட்டுமே என்பதால், கணக்கை அவர்களுடைய நோட்டு புத்தகத்தில் எழுதி சொல்லிக்கொடுப்பது வழக்கம். இரண்டு பேருக்கும் போட்டி இருக்க கூடாது என்பதால் இரண்டு பேர் நோட்டிலும் மாறி மாறி கணக்கு போட்டு காட்டுவேன். ஒரு முறை, ஏதோ ஞாபகத்தில் ஒரு பெண்ணின் நோட்டில் தொடர்ந்து கணக்கு போட்டு காட்டி விட்டேன்.

உடனே அடுத்த மாணவிக்கு கோபம் வந்து விட்டது.

என்னிடம் சத்தமாக, “என்ன அங்கிள், அவ இதுலயே செஞ்சிகிட்டு இருக்கிங்க. இரண்டு பேர் இதுலயம் மாறி மாறி தான செய்யனும். என்னுடையதிலும் செய்யுங்க. எவ்ளோ நேரம் காட்டிக்கிட்டே இருக்கேன்” என்றாள்.

இதைக்கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று குழம்பி விட்டார்கள். பக்கத்து வீட்டு நண்பர், கிண்டலாக கேட்டார் “யோவ், என்னய்யா நடக்குது உன் அறையில?”

குறிப்பு : நெட்டில் படித்தது. நன்றி : ஜோக்கடித்த யாருக்கோ….


ப.சிதம்பரத்தின் மீதான சர்ச்சைகள்

மே 21, 2009

உயர்திரு ப. சிதம்பரத்தின் மீதான் சர்ச்சைகள் பலவும் அவரது அரசியல் தொடங்கிய நாட்களிலிருந்தே ஆரம்பித்து விட்டன. கிளீன் ஸ்லேட் இமேஜ் இவருக்கு இல்லாத ஒன்று அவரது அரசியல் வாழ்வில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. மேலும், சமீபத்திய அவரின் தேர்தல் வெற்றி பலராலும், பலவாறாக குற்றச்சாட்டாக சொல்லப்படுவதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. அலுமினியம், இரும்புத்தாது, தங்கம்(!!!!) , காப்பர், ஸிங், லீட் உலோகத்தில் உலகளவில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனத்தின் மெம்பராகவும் இருந்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் கடந்த வருட நிகர வருமானம் : ரூபாய் 1,00,25,00,00,000.00

அவரின் மீதான சர்ச்சைகளாக விக்கிபீடியாவில் வெளியிடப்பட்டிருக்கும் காண்ட்ரவர்சீஸ் என்ற தலைப்பிலான பதிவை கீழே படிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்கவும்.

Controversies

He represented the bankrupt American energy giant Enron, as a senior lawyer in India, and is again set to revive its Dhabol power project.[6] [7]

He resigned on 10 July 1992 from the Minister position owning moral responsibility for investing in Fairgrowth, a company allegedly involved in securities scam.[8]

In 1997, he announced a controversial voluntary disclosure of income scheme which granted income-tax defaulters indefinite immunity from prosecution under the Foreign Exchange Regulation Act, 1973, the Income Tax Act, 1961, the Wealth Tax Act, 1957, and the Companies Act, 1956 in exchange for self-valuation and disclosure of income and assets. [9] The Comptroller and Auditor General of India condemned the scheme in his report as abusive and a fraud on the genuine taxpayers of the country. [10]

It should be noted that Chidambaram also represented the controversial British mining conglomerate Vedanta Resources in the Mumbai High Court until 2003 when he became the finance minister of India. He was also a member of the board of directors of that company.[11]

In August 2006, the then President A.P.J. Abdul Kalam gave permission to enquire into the allegations that Prime Minister Manmohan Singh and his Finance Minister P. Chidambaram had been holding office of profit at the time of elections. It has been alleged that they both had been the board members of Rajiv Gandhi Trust Foundation. The Election Commission has been authorised to enquire into the allegations.[12]

In February 2008, he announced a $15 billion farm loan waiver scheme triggering a public interest litigation.[13][14]

On 7 April 2009, P. Chidambaram was shoed by Jarnail Singh, a Sikh journalist during a press conference in Delhi. Singh, who works at the Hindi daily Dainik Jagaran was dissatisfied with Chidamabaram’s answer to a question on the Central Bureau of Investigation’s (CBI) clean chit to Congress leader Jagdish Tytler on the 1984 anti-Sikh riots case.[15]

Later, Jarnail Singh appeared on a few media channels and thanked Mr. Chidambaram for taking no action against him and said that he would apologize to Mr. Chidambaram if he got a chance to meet him personally[16]. He also said that his method of protest was wrong, but the issue was right[17][18]. He also declined to take money offered to him by the Shiromani Akali Dal, a Sikh political party.

உதவி : விக்கிபீடியா

இணைப்பு : http://en.wikipedia.org/wiki/P._Chidambaram


மாயாலோகத்தில் சோனாகச்சி வரலாறு

மே 20, 2009

sex-workers
சோனாகச்சி, தங்க மரம் எனப் பரவலாக அழைக்கப்படும் இடமே இந்தியாவில் அமையப்பெற்றிருக்கும் மிகப்பெரிய விலைமாதுக்கள் விற்பனையாகும் இடமாகும்.கொல்கத்தாவில் அமையப்பெற்றிருக்கும் இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதுக்கள் பாலியல் தொழில் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கடத்தப்படுதல்

சோனாக்கசிப் பகுதிக்கு விலைமாதுக்களாக வேலை செய்யமுன்வருபவர்களில் பலர் கடத்தப்பட்டும்,குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளினாலும் இங்கு வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.சிறுவயதிலேயே உள்ள மாணவிகள்,ஏழ்மைநிலையிலுள்ள பெண்கள் பல மாநிலங்களிலிருந்தும் கடத்திவரப்பட்ட பெண்களே இத்தகைய விபச்சார நிலையில் தள்ளப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் பாலியற் தொழிலில் ஈடுபட அனுமதி இல்லாத இந்திய அரசாங்கித்தின் சட்டம் அமுலில் இருக்கும் அதே வேளை அண்டை நாடுகளிலிருந்து கடத்திவரப்படும் மேலும் இந்தியாவிற்குள்ளேயிருந்தும் கடத்திவரப்படும் பெண்களில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனாக்கச்சி விபச்சாரப் பகுதியான வரலாறு

1700 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய ராஜாக்களின் காலத்திலேயே இப்பகுதி விலை மாதுக்கள் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து படையெடுப்பவர்களாலும்,மேலும் உள்நாட்டில் உயர்ந்த சாதியினர் எனக் கருதப்படுபவர்களாலும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இப்பகுதி இன்றளவும் இயங்கி வருகின்றது இந்திய அரசின் பார்வையிலிருந்து காண்பாரற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று சோனாக்கச்சியில் வாழும் விலை மாதுக்களும் அவர்கள் குழந்தைகளின் நலன்கருதியும் பல சமூக சேவை அமைப்புகள் எயிட்ஸ் நோயைப் பற்றிய தெளிவான கருத்துக்களினையும் மேலும் பல சுகாதார ஒழுங்குநெறிகளினையும் கற்றுக்கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி : விக்கி பிடீயாவிலிருந்து….


%d bloggers like this: