மாயாலோகம் – முடிவு ஒன்று கதைகள் இரண்டு

முதல் கதை :

நான்கு வருடம் பார்வைகளாலே உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொண்ட இளமையானவர்கள் அவர்கள். குடும்பத்தின் சூழ் நிலைகள் தங்களது காதல் நிறைவேற தடையாக இருப்பதை உணர்ந்தவர்களாகிய அவர்கள் தங்களுக்குள்ளே காதலை புதைத்து விட முடிவு செய்தனர். காதலிக்கு மணமானது. காதலன் வெளி நாடு சென்று விட்டான். கணவன் தன்னைப் புணர்ந்த போது காதலிக்கு முன்னாள் காதலனின் நினைவு வர கண்ணோரம் துளிர்த்து நின்றது அவளது காதல். சந்தோசத்தில் மனைவியின் கண்ணீர் வந்ததாக எண்ணம் கொண்டான் கணவன். வெளி நாட்டில் ஒருத்தியை புணர்ந்த காதலனுக்கு ஏதோ ஒன்றினால் தாக்கப்பட்டவன் போல மேலே தொடராமல் வெளியேறினான்.

இரண்டாவது கதை :

இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டனர். உள்ளங்கள் பேசியது. டேட்டிங்க் முடிந்ததும் இருவரின் ஆசா பாசங்களும் வெவ்வேறானவை என்றுணர்ந்தனர் காதலர்கள். அவளுக்கோ இவனின் அவசர புத்தி அயர்ச்சியையும், திருப்தியற்ற உணர்வினையும் தந்தது. அவனுக்கோ இவளோடு தொடர்ந்தால் தனது இயலாமை வெளிப்பட்டு விடுமோ என்ற உணர்வேற்பட்டது.

அந்த நான்கு பேரின் காதல்களும் இவ்வாறு முடிவடைந்தன.

குறிப்பு : மாயாலோகவாசிகளான மனிதர்களிடையே நிலவும் சம்பவங்கள் தொடராய் பரிணமிக்க இருக்கிறது. வாசகர்களின் ஆதரவினைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடரும்…

2 Responses to மாயாலோகம் – முடிவு ஒன்று கதைகள் இரண்டு

  1. yaathirigan சொல்கிறார்:

    hmmmmmmmmmm.. adharavu undu thodarungal

    • அனாதி சொல்கிறார்:

      நேரமின்மை காரணமாக தொடரின் அடுத்த பகுதி வெகு விரைவில். மாயாலோகவாசிகள் இனிமேல் உங்களோடு பயணிப்பார்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: