கீதாசாரம்

குடிகாரனுக்கு பக்கத்து வீட்டுப் மலையாளத்துக்குட்டி மேல் ஒரு கண். மனைவி கண் அசந்த நேரம் வாயில் ஜொள் ஒழுக அவளைப் பார்ப்பதை வாடிக்கையாய் வைத்திருந்தான். இவன் பார்ப்பது அந்த ம.குட்டிக்கு தெரியும் போல. அவ்வப்போது ஜாக்கெட் இல்லாமல் பனியன் மட்டும் போட்டுக் கொண்டு மாடிமேல் நடக்க(உலாவ) வருவாள். குடிகாரன் கையில் (அடச்சே) கைலியை பிடித்துக் கொண்டு திருட்டுத் தனமாக பார்த்து ரசிப்பான். மேலேயும் கீழேயும் சென்று வரும்(!) அதான்யா படியில் ஏறி இறங்கி நடை பயலும் அவளைக் காணக் காண அவனுக்கு குடிக்காமலே போதை வந்து விடும். இப்படியாகச் சென்று கொண்டிருந்த நாட்களில் ம.குட்டியும் இவன் தன்னைக் கவனிப்பதைக் கண்டு மேலும் மேலும் அரை குறை டிரஸ்ஸில் வந்து உசுப்பேத்த, இவனோ கா.கிறுக்கில் பித்துப் பிடித்தவன் போலானான். எப்படியாவது மேட்டர் டீல் செய்து விட வேண்டுமென்ற வெறியில் நாட்களை பிடித்து தள்ளிக் கொண்டிருந்தான்.

நாட்கள் மேலும் சென்றன. ஒரு நாள் அந்த ம.குட்டி இவனைத் தேடி, இவன் மனைவி இல்லாத நேரத்தில் வாசல் கதவைத் தட்ட அடித்தது ஜாக்பாட் என்ற குஷியில் அவளை வரவேற்றான். மேற்படிச் சமாச்சாரங்கள் எல்லாம் முடிந்தது. அதுதான் சம்பிரதாய வார்த்தைகள் எல்லாம் முடிந்து என்ன விஷமென்று கேட்க, அவள் தயக்கத்தோடு தான் காதலிக்கும் காதலனைப் பற்றியும், நாளை அவனுக்கும் இவளுக்கும் கல்யாணம் நடக்க இருப்பதாகவும் இவன் தான் தன் கல்யாணத்தை முன்னின்று நடத்தித் தர வேண்டுமென்றும் வேண்டினாள்.

தற்போது குடிகாரன் தனக்குள் அடிக்கடி கீழே இருக்கும் பத்தியை முணுமுணுக்கிறான்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள்,
அது வேறொருவருடையதாகும்.

குறிப்பு : எழுத மறந்து விட்டேன் : அந்த ம.குட்டியின் பெயர் கீதா !!!! ஹி…ஹி….

2 Responses to கீதாசாரம்

 1. suresh சொல்கிறார்:

  நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
  என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
  http://sureshstories.blogspot.com/

  • குடிகாரன் சொல்கிறார்:

   படிச்சிட்டேன். பய மக்கா சரியான பிளாக்குய்யா… நீங்களெல்லாம் பெரியாளுவ. நமக்கு டாஸ்மாக்குதான் உலகமே. என்ன இருந்தாலும் நாயி பதிவ படிச்சுட்டு, போட்டோவைப் பாத்தேன். அடிவயிறு லகங்கிடிச்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: