பாரு நிவேதிதாவும் குடிகாரனின் மனைவியும்

எப்போதும் இரவு நேரங்களில் குடிகாரன் வீட்டுக்குள் நுழையும்போதே அவன் மீது சாராய நெடி அடிக்கும். ஒன்றுமே பேசாமல் சோற்றினைத் தட்டில் போட்டு வைத்து விடுவாள் குடிகாரனின் மனைவி. என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலே சாப்பிட்டு விட்டு ஷோபாவிலேயே மட்டையாகி விடுவான். ஆனால் இன்றைக்குப் பார்த்து காலையில் போட்டிருந்த செண்டு வாசமடித்தது. என்னடா இது அதிசயமாய் இருக்கிறது என்று கண்கள் விரிய அவனையே பார்த்தாள். இன்றைக்கு பாரில் ஏதோ பிரச்சினையாய் இருக்கும்போல என்று அவன் மீது கண் வைத்தவாறே அங்குமிங்கும் சென்றபடி வேலைகளை செய்து கொண்டிருந்தாள். குடிகாரனின் அடுத்தடுத்த செயல்களோ அவளை பைத்தியம் கொள்ளும் அளவுக்கு அடித்தது. அப்படி என்ன தான் செய்தானென்றா கேட்கிறீர்கள் தொடர்ந்து படியுங்கள்.

டீப்பாயைத் தூக்கி நடு வீட்டில் போட்டான். ஏசியின் டெம்பரேச்சரை சரி செய்தான். ஷோபாவை நகர்த்திக் கொண்டு போய் டீப்பாயின் அருகில் வைத்தான். பெட்ரூமில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை கொண்டு வந்து டீப்பாயின் அருகில் வைத்தான். சிடி கலெக்‌ஷனைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குடைந்தான். நான்கு சிடிக்களை கொண்டு வந்து வைத்து விட்டு, சிம்ரனாஃப்பையும் அழகான குடிக்கும் கண்ணாடி கிளாஸையும் அருகருகே வைத்தான். சரக்கை கிளாசில் ஊற்றினான். மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தான். என்னவோ ஒரு கண்றாவி மியூசிக் வந்தது.

அவனது கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்றினை புக்மார்க் வைத்திருந்த இடத்தில் பிரித்து படித்தான். அந்தப் புத்தகத்தை அப்படியே டீப்பாயில் கவுத்து வைத்தான். மற்றொரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தைப் பிரித்தான். ஒரு வாய் சரக்கு ஒரு நொடி படிப்பு, கொஞ்ச நேரம் மேலே பார்வை என்ற படியே தொடர்ந்தான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது இன்றைக்கு இந்த எழவெடுத்தான் என்னென்னவோ செய்கிறானே மறை கழண்டு இருக்குமோ என்று கவலையாய்ப் பார்த்தபடியே கவனிக்கலானாள்.

சரக்கு முடிய கிளாஸ்ஸை மீண்டும் நிரப்பினான். ஒரு வாய் சரக்கு, படிப்பு சற்று நேரம் மேலே எங்கோ பார்த்தபடியே நிலை குத்திய பார்வை. மீண்டும் சரக்கு, படிப்பு, மேலே பார்வை என்றபடியே தொடர்ந்தான். இப்படியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாய் புக்கை புரட்டிக் கொண்டிருந்தான். சரக்கு முடிந்தது. மேலே பார்த்த பார்வை அப்படியே நிற்க புக்கோ டீப்பாயில் விழுந்தது. என்னவோ ஏதோவென்று குடிகாரன் மனைவிக்கு பதைபதைப்புத் தோன்ற அருகே சென்று பார்த்தாள். மேலே பரலோகத்தைப் பார்த்தபடி மட்டையாகிக் கிடந்தான் குடிகாரன்.

சரக்குடன் தண்ணீர் கலந்து குடிக்கும் குடிகாரன், இன்றைக்குப் பார்த்து எதுவும் கலக்காமல் குடித்து வைத்து விட்டான் அது தான் இப்படி மட்டையாகிப் போனான் என்றும் அவனருகில் சென்று மூச்சு சீராக வந்து கொண்டிருந்ததை கவனித்து உயிரோடுதான் இருக்கிறான் என்றும் மேலும் டீப்பாயின் மேல் கவுத்து வைத்திருந்த அந்தப் புக்கில் என்ன எழவுதான் இருக்கு என்று எடுத்துப் பார்த்தாள்.

குடிகாரனால் அடிக்கோடிட்டிருந்த பகுதியைப் படித்தாள்.

சென்ற கட்டுரையில் உள்ள கவிதைகளையோ, அல்லது ஸீரோ டிகிரி நாவல் உங்கள் கையில் இருந்தால், அதில் உள்ள மற்ற கவிதைகளையோ எப்படிப் படிக்க வேண்டும் என்று சில ஆலோசனைகள் தருகிறேன்.

இரவு நேரமாக இருக்க வேண்டும். மது அருந்துபவராக இருந்தால், இரண்டு பெக் உத்தமம்.

ஃப்ரான்ஸ் ஷீபர்ட்டின் ‘ஆவே மரியா’, சோப்பினின் Ballade 1 போன்ற மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதம் பின்னணியில் மெல்லிய இழையில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கத்திய சங்கீதம் என்றதும் அதற்காக மொஸார்ட்டின் Cadenzaக்களை போட்டு விடக்கூடாது. அந்த இசைச் சூழலுக்கும் ஸீரோ டிகிரியின் கவிதைகளுக்கும் பொருந்தி வராது. சாஸ்திரீய சங்கீதம் வேண்டாம் என்றால் Richard Clayderman, Matthew Bellamy போன்ற நவீன கலைஞர்களாகவும் இருக்கலாம். ஆனால், பின்னணியில் இப்படி ஒரு இசை இழைந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

இதற்கு அடுத்தபடியாக, முக்கியமாக, அந்தக் கவிதைகளை நீங்கள் வாய் விட்டுப் படிக்க வேண்டும்.

இப்படிச் சொல்வதன் காரணம் என்னவென்றால், ஸீரோ டிகிரியை எழுதும்போது, இசை இசை இசை என்று இசையிலேயே உழன்று அதிலேயே மூழ்கிக் கிடந்துதான் அந்த நாவலை எழுதினேன்.

அடப்பாவிகளா என்று நினைத்தவள் “ சரோஜா தேவி புத்தகத்தைப் குடிகாரன் படித்தானென்றால் என் கதி என்னவாகுமோ” என்று எண்ணிப் பீதியடைந்தாள் குடிகாரனின் மனைவி.

நன்றி : சாரு நிவேதிதா, உயிர்மை பதிப்பகம்.
புத்தகம் : கடவுளும் நானும் / பக்கம் 43 மற்றும் 44.

2 Responses to பாரு நிவேதிதாவும் குடிகாரனின் மனைவியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: