கோக்கும் ஃப்ரீயா மணியும்

priyamani-21

பாரில் உட்கார்ந்து சிக்னேச்சரை உள்ளே செலுத்திக் கொண்டிருந்த போது வீணாய்ப்போன சாநக்கி வந்தான். என்னடா மூஞ்சியை உம்முன்னு வெச்சுருக்கேன்னு கேட்டேன். பதிலே சொல்லாம மொவத்தையே உத்து உத்துப் பாத்தான். என்னாடா சா.னா தெரியுது எம்முவத்துலன்னு கேட்டேன்னா, அதுக்கு அவன் சொன்னான், குடிகாரா தலைவரு கோக்கு வெளம்பரத்துல நடிக்கானா எல்லாரும் கேலி பன்னுராவனுவடா என்றான். யாருடா அதுன்னு கேக்க, அதான்டா விஜயின்னு சொன்னான். என்னாடா சேதின்னு கேக்க, கோக்குல விஷமிருக்குன்னு சொன்னானுவ. டெஸ்ட்டுனாவ குடிச்சா பல்லே கரைஞ்சு போயிடும்னாவுக, அம்புமணி வந்தாரு. அதுக்கப்பறம் கோக்கு வெஷம் என்னாச்சுன்னே தெரியலடா. இப்பல்லாம் அந்தக் கன்றாவிய நாங்கூட குடிக்கறதில்லடா. ஆனாப்பாருடா நம்மகிட்டேயே துட்டை வாங்கிக்கின்னு விதவிதமா நடிகைகள கட்டிப் பிடிச்சுக்குன்னு இரண்டு கோடிக்கு பிஎம்டபுள்யூ காரில சுத்தறவன், வெஷத்தை விக்கிறதுக்கு நடிக்கிறாண்டா. நாமெல்லாம் எப்படியோ போகட்டும்னுதானேடே நெனைக்கான். இவனைப் போயி தலைவரேன்னு கூப்பிட்டேண்டா குடிகாரா. எம்பொண்டாட்டி சிரிக்கறாடா. அசிங்கமாப்பூச்சுடா என்றான்.

அப்போ கிரிக்கெட்டு விளையாடுறனுவங்களும், சினிமாக்காரியளும் நடிக்கிறாளுவகளேடா அவுகளை எல்லாம் என்னாடா சொல்வே நீயுன்னு கேட்டேன். அவன் ஒன்னுமே சொல்லலை. அவுகளைத் தானடா வீவீஅய்ப்பீங்கிறாய்ங்க என்றேன்.

என்னமோடா எல்லாம் மார்க்கமாத்தாண்டா அலையுறானுவ. நாம தாண்டா ஜாக்கிரதையா இருக்கோனும் என்று சொல்லி விட்டு சாநக்கி வழக்கம் போல தட்டில் வழிந்திருந்த ஆப்பாயில் மஞ்சக் கருவை நக்க ஆரம்பித்தான்.

குறிப்பு : இந்தப் பதிவில் நானொரு பார்வையாளனாக எனது கருத்தினை சொல்பவனாக இருக்கிறேன். படிக்கும் போது ழார் பத்தாய் நினைவுக்கு வரனும். ஆபாசமாக இருக்கிறது என்று எண்ணக்கூடாது. புரிகிறதா??? நண்பர்களே…

இந்தப் படத்துக்கும் இதுக்கும் என்னாடா சம்பந்தமுன்னா கேக்குறீய. இருக்கு. பொம்பளைப் பித்துப் புடிச்சாலும் அழிஞ்சுருவோம்னு சொல்றாய்ங்க. அதைக் குடிச்சாலும் குடிச்சாலும் செத்துருவோம்கிறாய்ங்க. படிக்கிற வாசகனுவ, இதையெல்லாம் புரிஞ்சுக்கிடனும். சொல்லிட்டு இருக்க முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: