சிறுகதைகளின் போக்கு….

சிறு வயதிலிருந்து புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அனைவருக்கும் அப்படியே தொடருமா என்றால் பெரும்பாலும் இருக்காது என்பது தான் உண்மையாக இருக்கும். காரணம் எவ்வளவோ இருந்தாலும் எதைப் படிக்க வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதில் தான் படிக்கும் பழக்கம் தொடரக்கூடிய நிலையோ அல்லது நிறுத்தி விடக்கூடிய சூழ் நிலையோ வரும்.

சாண்டில்யனைப் படிக்கும்கால், பாலுணர்ச்சி மற்றும் வரலாற்று நாயகர்கள் மீதான ஈர்ப்பும், சுஜாதாவினை படிக்கும்கால் விஞ்ஞான இயலின் மீதான ஈர்ப்பும் இப்படி இன்ன பிற எழுத்தாளர்களைப் படிக்கும் போது ஏற்படும் ஈர்ப்புகளும் இலையில் படைக்கும் அறுசுவைக்கு ஒப்பானதாகும். வாழைக்கறி அதிகமுண்டால் ஏற்படும் வாயுத் தொல்லை போல, சிலரின் எழுத்துகளும் அழகாய் சமைக்கப்பட்டிருந்தாலும் படித்ததன் காரணமாக நமக்கு மற்ற எழுத்தாளர்களின் மீதான ஏதோ ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடும் அபாயமும் உண்டு. எனக்கு அதுபோல ஏற்பட்டு விட்டது.

அவர் ஒரு மிகப்பிரபலமான எழுத்தாளர். முதலில் இல்லீகல் செக்ஸ் உறவுகள், அவர்களின் வாழ்க்கை என்று எழுதி வந்தவர், திடீரென்று ஆன்மீகம் பக்கம் சாய்ந்து விட எனக்குள் உண்டான குழப்பத்தின் முடிவு மொத்தமாக அனைத்து எழுத்தாளர்களையும் புறக்கணிக்கச் செய்து விட்டது. இந்தச் சூழ் நிலையில், சமீபத்தில் சில சிறுகதைகளைப் படிக்க நேர்ந்த போது ஒருவித செயற்கைத் தன்மையில் எழுதப்பட்டிருப்பதை அறிந்த மனம் அயர்ச்சி அடைந்தது.

நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும்போது சற்று உற்று நோக்கினால், அவர்கள் இயல்பை மீறி நடிப்பதைப் பார்க்கலாம். அது போல பெரும்பாலான சிறுகதைகள் இயல்பை மீறி வார்த்தைகளால் கட்டடம் கட்டுவது போல எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்.

உதாரணம் சொல்கிறேன் :

அவன் தெருவில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.
அப்போது எதிர்ப்பட்ட அவனின் நண்பன் “ஆன்ந்த், அறுபது வயதானாலும் ஒரு இடத்தில் இருக்கமாட்டாயா” ”என்றான்.

மேற்கண்ட வரிகளில் இக்கதையின் நாயகன் பெயர் ஆனந்த் என்பதும், அவனுக்கு அறுபது வயதென்பதும் மற்றொரு கேரக்டர் மூலம் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் கதாசிரியர். இது இயல்பை மீறிய அல்லது எதார்த்தம் மீறிய வார்த்தைப் பிரயோகம். இதைப் போன்ற படைப்புகள் தான் இன்றைய சிறுகதை உலகில் அதிகம் எழுதப்பட்டு வருகின்றன.

மனித வாழ்வின் சம்பவங்களை மட்டும் விவரித்துச் செல்லும்போது மிக இயல்பாக அல்லது இயற்கையான என்ன நிகழுமோ அதை எழுத மறந்து விடுகின்றனர் சிறுகதை எழுத்தாளர்கள். தர்க்கம், விவாதம், கருத்துப் புனைவுகள் மற்றும் இன்ன பிற புரியாத வார்த்தைகளை கதையினூடே புகுத்தி, சிறுகதையின் போக்கையே மாற்றி விடுகின்றனர். அது தான் சிறந்த இலக்கியமென்கிறார்கள். வார்த்தைகள் படிப்பவர்களை யோசிக்க வைக்க வேண்டும் அல்லது உள்ளுக்குள் உணர வைக்க வேண்டும். எப்படி என்று கேட்க தோன்றும்.

அதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். கீழே இருக்கும் கவிதையை படித்துப் பாருங்கள்..

என் பழைய மொழி-

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
“எப்படி இருக்கிறான் என் மகன்..??”

அவள் சொன்னாள்..
“ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை..”

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
“அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!”

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
“நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்..”
என்றார்..

நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
“அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!” என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
“உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன..” என்றான்..
நான் கோபத்துடன்,
“தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்..” என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
“நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்..”
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!

மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்

இந்தக் கவிதையை எழுதியவர் கலீல் ஜுப்ரான் என்ற லெபனான் கவிஞர். இன்றைய கவிதைகள் எழுதப்படும் முறைகளையும், வார்த்தைப் பிரயோகங்களையும் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி விட்டு எண்ணிப்பாருங்கள். நாம் எவற்றை எல்லாம் கவிதைகள் என்று சொல்கிறோமோ அதுவெல்லாம் என்னவென்று நான் சொல்லாமலே உங்களுப் புரியும் நிச்சயமாய் என்பது என் நம்பிக்கை.

சிறுகதைப் படைப்பாளர்கள் மேற்கண்ட கவிதையை ஒரு முறை படித்துப் பார்த்தார்களென்றால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.

இது எனது ஆதங்கம் மட்டுமே. பகிர்ந்து கொண்டேன். தவறிருந்தால் மன்னித்து அருளவும்.

2 Responses to சிறுகதைகளின் போக்கு….

 1. “வாழைக்கறி அதிகமுண்டால் ஏற்படும் வாயுத் தொல்லை போல,”
  நல்ல உதாரணம்தான் தேடினீர்கள்.!
  “வார்த்தைகள் படிப்பவர்களை யோசிக்க வைக்க வேண்டும் அல்லது உள்ளுக்குள் உணர வைக்க வேண்டும். ”
  அதுதான் நல்ல படைப்பு.
  நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

  • குடிகாரன் சொல்கிறார்:

   வணக்கம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி. உதாரணம் சரியில்லையா ? வேறு உதாரணம் என்ன சொல்லலாம் என்று அறிவுறித்தினால் மகிழ்வேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: