யாருக்கு ஓட்டுப் போடலாம் – நடுநிலையோடு ஒரு கணிப்பு

மார்ச் 31, 2009

மீடியாக்கள் பரபரப்பாகிவிட்டன. நிருபர்களும், வீடீயோகிராஃபர்களும் அரசியல் கட்சிகளின் அலுவலங்களை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். தினமும் பேட்டிகளும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. பரபரப்பாஅன இச்சமயத்தில் இந்திய அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை பற்றி சிறிது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த எத்தனையோ அரசியல் சம்பவங்கள் இந்திய மக்களின் வாழ்க்கைப் போக்கினை மாற்றி இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலின் முடிவு இந்தத் தேர்தலின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை லேசில் அனுமானிக்க இயலவில்லை.

தேசியக்கட்சிகள் என்று சொல்லக்கூடிய காங்கிரஸ், பாஜக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலக் கட்சிகளை நம்பி இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை பெரும்பான்மையாக உருவாக்க முடியாத பரிதாபத்துகுரியதாக அவைகள் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் அரசியல் கட்சிகளின் போக்கும் நடத்தைகளும், பொது மக்களின் உள்ளத்தினையும் ஒருவாறு அனுமானித்து ஒரு சில முடிவுகளுக்கு வரலாம் என்று இந்தப் பதிவினை தொடர்கிறேன். இந்தப் பதிவு சிலருக்கு முரண்பாட்டினைத் தோற்றுவிக்கலாம் அல்லது வருத்தத்தினை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் மீறி உண்மை என்ற விசயத்தினை முன்னிறுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்பதிவு என் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ளவும். உடன்பாடற்ற கருத்துகள் இருப்பதாக தெரிந்தால் தயங்காமல் சுட்டவும். தவறிருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்ள ஏதுவாயிருக்கும்.

இந்திய ஜன நாயகத்தில் தேர்தல் கமிஷனின் அறிவிப்புகள் பெரும்பாலும் கேலிக்குரியதாகப் போய் விட்ட சம்பவங்கள் அதிகம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு சட்டம். ஆனால் எந்தக் கட்சிகள் இந்த விதியினைக் கடைபிடித்திருக்கிறது? விதிகளை மீறிய சம்பவம் சமீபத்தில் மதுரையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். தேர்தல் கமிஷனால் என்ன செய்ய முடிந்தது அல்லது செய்து கிழித்தது? தேர்தல் விதிகள் என்பவை ஏட்டுக்கு மட்டும் சொந்தம். அதைக் கடை பிடிக்க வேண்டிய கட்சிகள் சற்றுக் கூட அவ்விதிகளுக்கு கட்டுப்படுவதே இல்லை என்பது கடந்து சென்ற தேர்தல்களின் மூல்மாக கண்டோம். லோக்சபா தேர்தலுக்கு போட்டியாளர் 25 லட்ச ரூபாய் மட்டும் தான் செலவழிக்க வேண்டுமென்ற விதியினை இதுவரை எந்தக் கட்சியாவது செயல்படுத்தி இருக்கிறார்களா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஏழைக் கட்சிகளும், சுயேட்சைகள் மட்டுமே இவ்விதிகளை வேறு வழியின்றி கடை பிடித்திருப்பார்கள். தேர்தல் விதிமுறைகள் மீறுவதற்காகவென்றே இருக்கும் கேலிக்குரிய சட்டங்கள் என்பது உண்மைதானே. மீறிய கட்சிகளின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க இயலாத அதிகாரமுடைய தேர்தல் கமிஷனால் என்ன பயன் என்று பார்த்தோமானால் தேர்தல் நடத்த உதவுகின்றது என்று மட்டும் சொல்லலாம். மேலும் உச்சப்பட்சமாக இன்றைய தேர்தல் கமிஷனர் மீது சர்ச்சைகள் இருப்பது மேற்படி சம்பவங்களை வலுப்படுத்தும் செயலாக கருத வேண்டியிருக்கிறது.

அடுத்து வாக்காளர்கள் பணம் பெறுவது பற்றியது. படித்தவர்கள் அல்லது கையாலாகாதவர்கள் தேர்தல் நடத்தை விதி, சமூக அக்கறை என்றெல்லாம் காரணம் காட்டி பணம் வாங்கக்கூடாது என்று பேசிக் கொள்வார்கள். ஆனால் அன்றாடம் சோற்றுக்கு திண்டாடும் வறுமைக்கூட்டத்தின் தேர்தல் விதி என்ன தெரியுமா ”நான் உனக்கு ஓட்டுப் போட்டால் என்ன தருகிறாய்” என்பது தான். இந்தக் கூட்டத்தின் வறுமை நிலையினை நன்கு பயன்படுத்திக் கொண்டது திமுக மட்டுமே. போன சட்டமன்றத் தேர்தலில் திமுகாவால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் இந்தக் காசு வாங்கும் கூட்டத்தினை முன் வைத்து தான் என்பது அனைவராலும் மறுக்க இயலாத ஒன்றாகும். அதற்கு ஆதாரமாக ஜெயித்த பிறகு பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து அளித்த நிகழ்ச்சியினையும் தமிழ் நாட்டு மக்கள் கண்டார்கள். வறுமைக் கூட்டம் ஒழிந்தால் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இயலாது என்பதால் அந்தக் கூட்டத்தினர் சமுதாய மேன்மையடையக்கூடிய திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள். அந்தக் கூட்டத்தினர் தான் கோஷம் போடுவார்கள், கொடி பிடிப்பார்கள், பஸ்ஸை எரிப்பார்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்தக் கூட்டமில்லையென்றால் அரசியல்வாதி காணாமல் போய்விடுவான். தேர்தலில் பணம் கொடுத்தால் மட்டுமே (அது இலவசமாகவும் இருக்கலாம்) ஓட்டுப் போடுவோம் என்ற நிலைக்கு இன்றைய பெரும்பான்மையான இந்திய மக்கள் வந்திருக்கிறார்கள் என்பது உண்மை.

அடுத்ததாக சிறிய வட்டாரக் கட்சிகள். தேர்தல் நேரத்தில் கிடைக்கக் கூடிய பணம் மற்றும் சில இதர வசதிகளை அந்தக் கட்சித் தலைவர்கள் பெறும் பொருட்டு வட்டாரக் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அந்த கட்சிகள் ஜாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தி தங்களுக்கான ஓட்டு வங்கியை ஏற்படுத்திக் கொள்கின்றன. சினிமாக் ஹீரோக்களும் தன் ரசிகர் பட்டாளத்தை ஓட்டு வங்கியாக மாற்றி தனக்கான இடத்தைப் பெறுகிறார்கள். தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லை. டெபாசிட் இழந்தாலும் பரவாயில்லை கடந்த தேர்தலில் எத்தனை சதவீதம் ஓட்டுப் பெற்றிருக்கின்றோம் என்று ஆதார பூர்வமாக அரசியலுலகிற்கு காட்ட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்கிறது. அப்படிக் காட்டினால் தான் எந்தப் பெரிய கட்சி அதிக பணமும், சீட்டுகளும் மற்ற வசதிகளும் தருகின்றார்களோ அவர்களோடு கூட்டணி என்ற நிலைப்பாட்டிற்கு வர இயலும். இந்தக் கட்சிகளால் ஜாதியினருக்கோ, மதத்தினருக்கோ அல்லது ரசிகர்களுக்கோ பைசா புண்ணியம் கிடைக்காது. அதற்கு உதாரணங்களாக தமிழகத்தில் எத்தனையோ கட்சிகளை விரல் நீட்டிக் காட்டலாம். மேலும் இந்தக் கட்சிகள் ஜெயித்தால் அரசியல் குதிரை பேரங்கள் நடத்தி கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதிக்கவும் ஆரம்பித்து விடுகின்றன.

இப்படிப்பட்ட சூழ் நிலையில் இன்னுமொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் அவதானிக்க வேண்டும். பாஜக ஆட்சியினை பதிமூன்று மாதங்களில் தூக்கி எறிந்து மீண்டும் பொதுமக்களின் மீது தேர்தல் செலவினை ஏற்றிய கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி தாங்கள் விரும்பிய பதவிகளை தரத் தயங்கினால் வாபஸ் ஆதரவு என்று மிரட்டிய கட்சிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இவர்களிடம் இருக்கும் ஓட்டு வங்கியை மனதில் வைத்து தேசியக் கட்சிகளும் வளைந்து நெளிந்து போகின்றன. இதனால் படுபாதக விளைவுகள் உருவாகி விடுகின்றன. இதற்கு உதாரணமாக இன்றைய திமுக அரசின் இக்கட்டான சூழ்நிலையினைச் சொல்லலாம்.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளின் போக்கு இவ்வாறு இருக்கிறது.கூட்டணி சேராத மாநிலக் கட்சிகளின் போக்கினை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. அவர்கள் தேர்தலில் கனிசமான வெற்றியினைப் பெற்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இந்திய மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இவர்களால் மீண்டும் இந்தியா பொதுத் தேர்தலைச் சந்திக்க நேரிடும் அபாயம் இருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கு பொதுமக்களின் மீது எள்ளளவுக்கு கூட ப்ரீதி கிடையாது. குதிரை பேரத்தில் கோடி கோடியாய் பணத்தினை குவித்து செல்வத்தில் மிதப்பார்கள் அல்லது வேறு வழிகளில் நன்மை அடைந்து விடுவார்கள்.

மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி கொண்டுள்ள தேசியக் கட்சிகள் ஜெயித்தால் யாருக்கு என்ன நன்மைகள் கிடைக்குமென்று பார்த்தோமானால் மாநிலக் கட்சிகளே அதிக நன்மை பெறுவார்கள் என்பது உண்மை. கூட்டணி கட்சிகளின் பலத்தில் ஆட்சி அமைக்கும் தேசியக் கட்சிகளின் கைகள் கட்டிப் போடப்பட்டுவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு உலகப்போக்கிற்கு ஏற்றவாறு சிந்திக்கத் தெரியாது என்பது கடந்த வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. எந்த பொது நோக்கிற்கான திட்டத்தினை செயல்படுத்த விரும்பினாலும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் அனுமதி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒப்புதல் பெறாத எத்தனையோ நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இன்று முடங்கிக் கிடக்கின்றன என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை.

இப்படிப்பட்ட சூழ் நிலையில் என்ன செய்யலாமென்று பார்த்தால் எந்த தேசியக் கட்சி பெரும்பான்மையாக மாநிலக் கட்சிகளுடன் உடன் பாடு காணாமல் தனியாக நிற்கிறதோ அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது தான் சாலச் சிறந்ததாகும் என்று நம்பலாம். தனி மெஜாரிட்டியுடன் ஜெயிக்கும் தேசியக் கட்சிகளால் தான் சிறிய அளவிற்காவது இந்தியாவிற்கு நன்மை செய்ய இயலும்.

குறிப்பு : நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.


வளைச்சுப் பிடிச்சு நச்சுன்னு முத்தம்

மார்ச் 26, 2009

திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக என்று பரபரப்பான தமிழ் நாட்டுச் செய்திகளிடையே சற்று இளைப்பாறும் பொருட்டு இந்தப் பதிவு.

நாகார்ஜூன் மற்றும் அந்தப் பொண்ணும் சேர்ந்து சும்மா கும்மோ கும்முன்னு கிஸ் அடிக்கிறாங்க பாருங்க. எனது எதிரி ஒருவன் கனடாவில் வசிக்கிறான். வாராவாரம் பேசிக் கொள்வோம். இதெல்லாம் என்னடா பிசாத்து. ரோட்டோரத்துலேயே மஜா பன்னுவானுங்க கனடா பசங்க. என்னமோ முத்தத்துக்கு இப்படி பறக்கிற என்று வயிற்றில் ஆசிட்டை கொட்டினான்.

அந்தக் காலத்தில் வந்த இதயப் பிரச்சினைப் படம். அதில் மணிரத்னம்(உலக மகா இயக்குனர்) வைத்த பாட்டு. பார்த்து ரசியுங்கள்…


பாமகவுக்கு ஆப்பு வைக்கும் அதிமுக…

மார்ச் 26, 2009

திமுக அல்லது அதிமுக இரண்டின் செல்வாக்கில் தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி பாமக. வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் சற்றே சுதாரித்து இன்றோடு இந்தக் கட்சிக்கு ஆப்பு வைத்தால் ஆடிப்போய் விடுவார் மருத்துவர். இது தான் சரியான நேரம் அதிமுகவிற்கு. திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பாமகவைப் புறக்கணித்தால் காணாமல் போய்விடும் பாமக.

செய்வார்களா ? இல்லை வளர்த்து விடுவார்களா ? எல்லாம் விதியின் கையில்.. நாளை என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்


ராகினிஸ்ரீயின் ஸ்பெஷல் எது?

மார்ச் 25, 2009

பாரிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் பார்க்கும் முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பிளாக்குகளில் ஜட்சுகளுக்கும் ராகினிஸ்ரீ அம்மணிக்கும் இடையில் ஏதோவென்றெல்லாம் எழுதி வயித்தெரிச்சலைக் கிளப்புகின்றனர். ஜட்சுகளில் கொஞ்சம் பார்ப்பது மாதிரி இருப்பவர் உன்னி. பத்தாதுக்கு ராகினி வேற ஒரு மாதிரியா அவரைப் பாக்குது. ஏனய்யா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க. அடப்பாவிகளா !!

சீ..சீ. .. அண்ட் ஐ தாட் ஜட்சுகளால் பிரச்சினை வராது போல. உன்னியப் பாத்தா பயமாயிருக்கே. இப்படிப் புலம்ப விட்டுட்டானுவளே. ஊரு உலகத்துல ஒரு அழகான பெண்ணைக் கூட விடமாட்டேங்குறானுவ…. உடனே எதிரி மொளைக்கிறானுவ.

ராகினிஸ்ரீயின் குரலை விட கண்கள் தான் அழகு.
பார்வையோ “ அடியே கொல்லுதே ரகம்”

சாம்பிளுக்கு வீடியோக்களைப் பாத்து விட்டு சொல்லனும்.

கலக்கல் பொண்ணு அப்புறம் கண்ணு….


ஜட்டிக் கதை

மார்ச் 23, 2009

வீணாப்போன எனது நண்பன் இடையில் புகுந்து என்னைக் கேட்காமலே எனது அனுமதி இன்றி தளத்துக்குள் புகுந்து கொண்டு அவனது பதிவுகளை இணைத்து விட்டான். எவ்வளவு கிளுகிளுப்பாய் இருந்த தளத்தில் இன்று அரசியல், வரலாறு என்று குப்பை விஷயங்கள் வந்து விட்டது.

சரி போனால் போகட்டும். கம்ப்யூட்டருமில்லாமல் தான் எழுதுவதெல்லாம் இலக்கியமென்றும் தம்ப்பட்டம் அடித்து திரியும் நண்பனுக்காகவும், நட்புக்காகவும்ு என்று விட்டுக் கொடுத்து விடலாம். மேலும் இவனிடம் பலமுறை சொல்லி விட்டேன். அடேய் சீரியஸ் இலக்கியமென்று ஏதாவது எழுதப் புகுந்தால் ஒருத்தர் கூட பார்க்கக் மாட்டார்கள்.

நீ எழுதிய சிறுகதைகளின் போக்கு என்ற பதிவை மொத்தமாகவே 100 பேர் தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால் நான் எழுதிய இலக்கிய தரம் வாய்ந்த ஃப்ரீயா மணி என்ற பதிவை கிட்டத்தட்ட 600 பேர் பார்த்திருக்கிறார்கள். ஆதலால் விலை போகாத சரக்கெல்லாம் மார்கெட்டுக்கு கொண்டு வராதே என்றேன். ஆனால் பாருங்கள் அவன் அரிப்பை இங்கு வந்து தீர்த்துக் கொண்டு தளத்தையே கேவலப்படுத்தி விட்டான். பிழைத்துப் போடா என்று விட்டு விடலாம்.

விஷயத்துக்கு வருகிறேன். கீழ்க்கண்ட புகைப்படங்களை எடுத்த புகைப்படக்காரர்களை என்னவென்று சொல்லிப் பாராட்டுவது. நாமெல்லாம் படம் பார்க்கும் போது தான் நடிகைகளின் கவட்டிக்குள் ஏதாவது தெரிகிறதா என்று உத்து உத்துப் பார்ப்போம். ஆனால் இங்கே பாருங்கள். கொஞ்சம் கூட லஜ்ஜை இன்றி பொது இடத்தில் அங்கேயே உத்து உத்துப் பார்த்துக் கொண்டு எப்படா தெரியும். படமெடுக்கலாம் என்று காத்திருந்து ப் புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்களால் நம் மனது எப்படிக் குளிர்கிறது என்று. என்ன ஒரு தொழில் பக்தி. எதைப் போட்டால் ( சே…சே…) பிரசுரித்தால் காசு பார்க்கலாமென்று அவர்களுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது பாருங்கள். சரி சரி எல்லாம் தெரியனும்னு தானே அவர்களும் அப்படி டிரஸ் போட்டுக் கொண்டு வந்தார்கள். ஆதலால் இது ஒன்றும் தவறில்லை.

sriya1sg0

priyamani-0027


ரத்தம் குடிக்கும் காட்டேறி

மார்ச் 22, 2009

மனித வாழ்க்கையின் அவலங்களையும், துரோகங்களாலும், கொலைகளாலும் கீறப்பட்டுக் கொண்டிருக்கும் சோக கீதமிசைக்கும் வாழ்வின் அகோர முகத்தினையும் இன துவேஷங்களும், வெறிகளால் விளைந்த படு பாதகச் செயல்களையும், காமத்தின் சூட்டினால் வெந்து தணிந்த எண்ணற்ற மாந்தர்களில் அவலக் குரலினையும், வீரமென்ற பெயரால் உயிரைக் குடித்த போர்களையும், ரத்த தாகம் தீராமல் தனது பக்கங்களில் கவுச்சி வாடையோடு இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறது வரலாறு.

வரலாற்றின் வரிகளில் தேங்கிக் கிடக்கும் வாழ்க்கையின் நுட்ப விஷயங்களை மனிதர்கள் அறிந்து கொள்ள கிஞ்சித்தும் முயற்சிக்காமையால் தான் மனிதர்கள் மனிதர்களால் கொல்லப்படுகிறார்கள். அந்த குருதி வரிகளில் சில இங்கே.

காதல் ! மனிதனின் இன்பவாசல். வரலாற்றில் காதல் என்பது கொல்லப்பட்டு அமராகாவியமாய் பதியப்பட்டிருக்கிறது. காதலால் உருவான மனிதன் அதேக் காதலை எதிர்த்த செயல்களையும், அதனால் விளைந்த கொலைகளையும் ஒன்று விடாமல் பதித்து வைத்திருக்கிறது. ஒன்று தெரியுமா உங்களுக்கு. வரலாறு எவரையும் வாழ வைத்ததில்லை. சாக அடிக்கிறது. இதன் பக்கங்களில் வாழ்ந்தவர்களை எங்கும் காண இயலாது. செத்துப் போனவர்களும், மற்றவர்களைச் சாக வைத்தவர்கள் செத்துப் போன கதைகளும் பிணங்களின் குவியல் போல அங்கங்கு குவிந்து போய் கிடக்கின்றன. ஒவ்வொரு குவியலிலும் பிண வாடை அடிக்கிறது. அரசியல் பெயரால் பிணமானோரும் உண்டு. ஆன்மீகத்தின் பெயராலும் பிணமானோரும் உண்டு.

அடுத்ததாக மதம் ! சோகமிழையோடும் பக்கங்களில் ரத்த்த்தின் மீது தான் இன்றைய மதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு எத்தனையோ ஆதாரக்கதைகளும் உண்டு. மதங்கள் எதுவும் மனிதனை வாழ வைத்ததாக வரலாற்றின் பக்கங்கள் சொல்ல வில்லை. மதங்கள் தனக்கான விதிகளை மனிதர்களின் மீது திணித்து எதார்த்த வாழ்க்கையின் போக்கினை மாற்றிய நிகழ்ச்சிகளும், அதே விதிகளைக் காரணம் காட்டி சக மனிதனை அழித்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளையும் இன்னும் தன் பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறது.

கடந்து போன நிகழ்வுகள் தான் இன்றைய மனிதர்களிடையே உள்ள பிரச்சினைகளுக்குக் காரணமோ என்னவோ? வரலாறு இல்லையெனில் மனித வாழ்வினில் சற்று மலர்ச்சி ஏற்பட்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை.

அரசியல் ! தனி மனித வாழ்வில் அவன் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ சில மனிதர்கள் தனது ஆளுமையினைச் செலுத்தி வருவார்கள். அந்த மனிதர்கள் தான் உலகை ஆள நினைக்கும் சர்வாதிகாரி. சர்வாதிகாரியின் பக்கங்களில் தினமும் அவனால் நடத்தப்படும் அவனுக்காக கொல்லப்படும் உயிர்களின் வேதனைக் கொலைகளும் பக்கம் பக்கமாக பதிய வைக்கப் பட்டிருக்கின்றன. இன்று அச் சர்வாதிகாரியின் பெயர் மாறுபட்டிருக்கிறது. அவன் யாரென்று சற்றே வரலாற்றுப் பக்கங்களில் தோய்ந்தால் மனித குலத்தைக் காக்கவும், ரட்சிக்கவும் வந்ததாய் நடித்துக் கொண்டிருக்கும், மனித உயிரைக் குடிக்கும் எமனின் மறு உருவமாகத் தெரிபவன் சர்வாதிகார அரசியல்வாதி. இவன் என்னவெல்லாம் செய்கிறான் அவனுக்கு யார் யாரெல்லாம் துணை போகிறார்கள் என்ற சிறு விளக்கத்தை வரலாற்றின் கடந்த காலப் பக்கங்களில் கிடைக்கும் சான்றுகளைத் தொகுத்து சிறு சம்பவ நிகழ்வாக இங்கு காணலாம்.

மக்களின் முன்பாக மேடையில் நடிக்க இவன் போடும் வேஷம் ஜனநாயகவாதி. இந்த வாதிக்குத் தேவை ரத்தமே அன்றி மக்களின் நலனல்ல. மற்றவர்களின் பிணங்களின் மீது நடக்கும் மிகக் கொடூரமானவன் இவன். அவனிடம் மக்களை மயக்க வைக்கும் மந்திரமிருக்கிறது. அந்த மந்திரம் தான் ஜனநாயகம். மேடையின் மீது வெள்ளுடையில் தேவனைப் போல காட்சி தருவான். அவனது பின்புறம் ஒளி விளக்குகள் மின்னும். சக மனிதனை ரட்சிக்க வந்த தேவனைப் போல தன்னைக் காட்டிக் கொள்வான். அடிப்பொடிகளை விட்டு காலில் விழ வைத்து தன்னைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொள்வான். வெளுத்ததெல்லாம் பால் என்று கருதும் பெரும்பாலோரின் மனதினுள் அவனது பிம்பத்தை தெய்வமாக பதிய வைப்பான்.

குண்டும் குழியுமான சாலையில் கொதிக்கும் சூட்டில் செருப்புக் கூட இல்லாமல் கூலி வேலைக்கு நடந்தே செல்லும் மனிதனின் மனத்தில் அவன் கடவுளாய் காட்சி தரும்படி உருவகம் செய்கிறான். அவனது வெற்றியின் மகத்துவம் பொது மேடையில் நடிக்கும் அவனது நடிப்பில்தான் இருக்கிறது. மேடையில் தன்னைப் பற்றிப் பேசமாட்டான். மற்றவனைப் பற்றித்தான் பேசுவான். இவன் மஹாத்மா என்று கேட்போர் சொல்லும் படி எதிராளியை பற்றி புள்ளிகளோடு திட்டுவான். அவனுக்குச் சப்போர்ட்டாய் மேலும் சில அடிமை மனிதர்களையும் பேச வைப்பான்.

அவனுக்கு அடியாளாய் காக்கி உடை போட்ட காவல்காரர்கள். சட்டத்தினைக் காக்கிறேன் பேர்வழி என்று காவல்காரர்கள் அரசியல்வாதிக்கு அடிமை வேலை செய்யும் நாடகத்தில் அவனோடு இயங்கும் சக நடிகர்கள். நாங்கள் பொது மக்களின் நண்பனென்பார்கள். பணக்காரனுக்கு ஒரு மரியாதை. ஏழைகளுக்கு ஒரு மரியாதை என்று எக்காளமிடுவர் இவர்கள். ஏழை என்றால் எள்ளி நகையாடும் இவர்களின் நாடகத்தில் காணாமல் போன ஏழைகளும், படுகொலையானவர்களும் பலருண்டு. சந்தர்ப்பவாதிகளுக்கு உதாரணமாய் திகழ்பவர்கள் சட்டத்தின் காவலர்களாய் வேஷம் போடும் காவல்காரர்கள்.

அடுத்து தனது நாடகத்திற்கு பக்கபலமாய் சில அல்லக்கைகளை சேர்த்துக் கொள்வான் இந்த ஜனநாயகவாதி. சட்டத்தின் பாதுகாவலனாய் இருப்பவர்கள் போல அடுத்த வேஷம் கட்டுபவர்கள் வக்கீல்களும் காவல்காரர்களும். தாமதித்துக் கொடுக்கும் தீர்ப்பினை வழங்கும் நீதியும் தர்மத்தின் முன்பு குற்றவாளிதான். சட்ட மேதைகளை வைத்து பொதுமக்களின் நன்மைக்காக சட்டங்கள் இயற்றுவான். அச்சட்டங்களை அவனே கேலிக்குரியதாக்குவான். இருட்டறையின் சட்டத்திற்கு காது மட்டுமே இருக்கிறது என்ற சமூகத்திற்கு ஒவ்வாத சட்ட விதிகளை கொண்டிருக்கும் சட்டத்துறையில் வாதமெனும் ஒளி விளக்கை ஏந்தி வரும் வக்கீல்களின் வீடுகளும், வாசல்களும் சொல்லும் அதன் கீழ் செத்து மடிந்த எண்ணற்ற ஏழைகளின் கண்ணீர்க் கதைகளை.

இப்படி தனக்காக கூட்டுச் சேர்ந்து கொண்ட சந்தர்ப்பவாதிகளின் துணையோடு மக்களை ஆண்டு வந்த சர்வாதிகார அரசியல்வாதிகள் இருட்டறையில் சேர்த்து வைத்த சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க கூட இயலாமல் நெருப்புக்குத் தீனியான கதைகள் ஏராளம் உண்டு வரலாற்றில்.

அடுத்ததாக, இதே போன்று ஜாதி என்ற பெயரில் மனிதரை பிரித்தாழும் சூட்சிகளையும், மதமென்னும் பெயரில் ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொண்டு சாகடிக்கச் செய்த பெரிய மகான்களின் கதையும் தன்னகத்தே கொண்டுள்ளது வரலாறு. மதத்தின் விதிகளே சக மனிதர்களைக் கொல்லும்படியும் சாகடித்தும் செத்தும் போன மனிதர்களின் கதைகளும் காணக் கிடைக்கின்றன அதன் பக்கங்களில்.

இப்படி எண்ண இயலாத சம்பவங்களைக் கொண்டுள்ள வரலாறு மக்களுக்கு என்றும் உதவி செய்வதில்லை. தனது பக்கங்களின் மூலமாக மீண்டும் மனிதர்களை கொடுஞ்செயல் செய்பவர்களாக மாற்றிக் கொண்டு வருகிறது.

எண்ணற்ற கொடுஞ்செயல்கள் புரிந்தோரும் வாழ்வின் முடிவில் கேவலப்பட்டு இறந்த கதையினைப் படித்தாலும், மறந்து விட்டு மீண்டும் அதே கொடுஞ்செயல்களை செய்ய விழையும் மனிதனின் செயல்கள் விதி வழி நடப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. இது போல இன்னும் எண்ணற்ற சம்பவங்களைப் பட்டியலிடலாம்.

விதியும் வரலாறும் பின்னிப் பிணைந்தவை என்றுச் சொல்வார்கள். விதியின் முடிவில் வரலாறு துவங்குகிறது. வரலாற்றின் முடிவு எப்போது என்று படைத்த ஆண்டவனுக்கே தெரியாது. வரலாறு தன் பக்கங்களை எப்போது எழுதி முடிக்கும்? தெரியாது. ஏனென்றால் படைத்த இறைவனுக்கும் வரலாறு உண்டே. ஒன்றன் முடிவில் மற்றொன்றின் ஆரம்பம் என்றால் ஆரம்பமானதின் முடிவெப்போது? வரலாற்றின் ஆரம்பம் மனிதனால் துவக்கப்பட்டது. ஆனால் அதன் முடிவு மனிதனால் முடிக்கப்பட போவதில்லை என்பது தான் உண்மை. ஆக வரலாற்றை ஆரம்பித்து வைத்தவன் மனிதன். முடித்து வைக்கப்போவது யார் ?


மரணக் கல்லறைகளின் மீது வெற்றிப் படிகளா?

மார்ச் 21, 2009

இலங்கையில் நடக்கும் மரணங்கள் தமிழக அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாயிருப்பது வரலாற்றின் சோகமான பக்கங்கள். இக்கொலைகள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வெற்றியினை ஈட்டித் தருமா அல்லது தோல்வியினைத் தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இன்றைய தமிழகத்தின் சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன என்ற பார்வைதான் இப்பதிவு.

மனிதர்களை பொம்மைகள் போல ஆட்டுவிக்கும் விதியின் விளையாட்டில் எங்கோ நடக்கும் மரணங்கள் கூட பிறருக்கு வெற்றிக் கனியைப் பறித்து தந்து விடும் அவல நிலை உலகில் அவ்வப்போது நடப்பது உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் மரணங்களின் மீது வெற்றியின் பாதைகள் அமைந்து விட்ட சந்தர்ப்பங்களுக்கு குறைவு இல்லை.

ராஜீவ் காந்தியின் மரணத்தில் வெற்றிக் கனியை ருசித்த அரசியல் கட்சிகளில் முதன்மையானது அதிமுக. அன்று விடுதலைப் புலிகளை முன் வைத்து கோட்டையைக் கைப்பற்றிய அதிமுக, இன்றும் அதே விடுதலைப் புலிகளை முன் வைத்து வெற்றிக் கனியைப் பறிக்க முயற்சிப்பது விடுதலைப் புலிகளுக்கும் அதிமுகவிற்கும் இடையேயான ஒவ்வாத ராசியைக் காட்டுகிறது. புலிகள் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ, அவர்களை எதிரியாகப் பாவித்து அரசியல் நடத்தி வந்த அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது விதியின் விளையாட்டு. பரிதாபத்துக்குரியவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

நேற்றைக்கு முந்திய தினம் வரை விடுதலைப் புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா, திடீரென அரசியல் பல்டி அடித்ததன் காரணம் தமிழக மக்களின் உணர்ச்சிப் போராட்டத்தை ஓட்டுக்களாக மாற்றும் அரசியல் தந்திரம் மட்டுமே. மரணங்களின் மீது வெற்றிக் கோட்டையை கட்டி வரும் ராசி அதிமுக தலைமைக்கு உண்டு. எம்ஜிஆரின் மரணத்தினால் அதிமுக தலைவியானார். ராஜீவ் காந்தி மரணத்தினால் முதலமைச்சர் ஆனார். இன்று லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் மரணத்தில் ஆட்சி அமைக்க அரசியல் காயை உருட்டுகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி என்று அதிமுகவால் குற்றச்சாட்டினைச் சுமக்கும் திமுகவின் அரசியல் தோல்விக்கு காரணமாயிருந்ததும் புலிகள் தான்.

புலிகளை எதிர்த்து இது நாள் வரை அரசியல் செய்து வந்த அதிமுக, அதே புலிகளை ஆதரிக்கும் தலைவரை தனது கூட்டணியில் வைத்திருந்திருந்ததும், திடீரென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் புலிகளை முன்னிட்டுக் கிடைத்த லாபங்களைக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

தமிழக மக்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள். இன்றைய உணர்ச்சி மயமான, ஒவ்வொருவரும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் விஷயம் இலங்கையில் சிங்களவர்களால் கொல்லப்படும் தமிழர்கள். அதிமுக, அந்த கொந்தளிப்பான உணர்ச்சியினை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்களா என்பதும் தேர்தல் முடிவு சொல்லி விடும்.

முத்துக்குமாரின் மரணம் விதைத்த வேதனை உணர்ச்சியில் தமிழக மக்கள் உள்ளுக்குள் எரிமலையாய் புகைந்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் அரசின் துணையோடு தான் தமிழ் மக்களை வேட்டையாடிக் கொல்கிறான் ராஜபக்‌ஷே எனும் அரக்கன் என்று மக்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் மீதான திரு வைகோவின் அனல் பேச்சு, அடுக்கடுக்கான அவரின் குற்றச்சாட்டுகள், புள்ளி விபரங்கள் மேலும் நேரடியாக காங்கிரஸ் அரசின் மீது அவர் வைத்திருக்கும் இலங்கைத் தமிழர்களை கொல்ல இலங்கைக்கு உதவி செய்யும் குற்றச்சாட்டுகள் என்று அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக காங்கிரஸிடம் பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழர்களுக்கு விரோதிகளாக, கொலைகாரர்களாக, துரோகிககளாக காங்கிரஸை அவர் முன்னிறுத்தும் பேச்சு மக்களிடையே எடுபட்டு வருகிறதா என்பதை தேர்தலின் முடிவு சொல்லிவிடும்.

காங்கிரஸ் அரசுக்கு துணை போகும் பங்காளியாக திமுக அரசினை அவர் சாடுவதை தமிழக மக்கள் உள்ளர்த்ததுடன் கவனித்து வருவதும் கண்கூடு. குடும்ப அரசியலை வெளிப்படையாக நடத்தி வரும் திமுக தலைமை, ஜெயலலிதாவின் அந்தர் பல்டிக்கு சரிக்கு சரியான பதிலடி கொடுக்க இயலாமல் தடுமாறும் போக்கும் வெளிப்படை.

இலங்கைத் தமிழர்களின் நிர்கதியற்ற மரணத்தின் மீது வெற்றிக் கோட்டையை எப்படியாவது கட்டியாக வேண்டுமென்ற வெறிகொண்டலையும் கூட்டமும், சவங்களின் மீது நடந்து சென்று ஆட்சியைப் பிடிக்க விழையும் குரூர மனப்பான்மை கொண்டோரும் தமிழக அரசியலில் உலா வருவது கொடுமையிலும் கொடுமை. இவர்கள் பொது மக்களுக்கு நன்மைகள் செய்வார்களா என்ற சிறு விஷயம் கூட தெரியாமல் இருக்கும் அதி மேதாவிகளா தமிழர்கள் என்று தேர்தல் வெற்றி சுட்டிக்காட்டி விடும்.

அடுத்ததாக விலைவாசிப் பிரச்சினை திமுக கூட்டணிக்கு பின்னடவை தரக்கூடிய சமாச்சாரமாக இருக்கிறது.

ஒரு ரூபாய்அரிசி, இலவச டிவி, கேஸ் கனெக்‌ஷன், இலவச நிலம் என்று எத்தனையோ நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு அளித்து, ஒரு வேளையாவது நிம்மதியாக சாப்பிட உதவி செய்து வரும் திமுக ஆட்சி மக்களின் மனதினைப் பாதித்திருக்கிறதா என்பதை தேர்தல் முடிவு சொல்லிவிடும்.

பெட்ரோல் விலையினை முன் வைத்து உயர்த்தப்பட்ட விலைவாசி, இன்றுவரை விண்ணைத் தொட்டு நிற்கிறது. பெட்ரோல் விலை குறைந்தும், விலைவாசி உயர்வு மட்டும் குறையாத காரணத்தால் திமுகவின் மீது வெளியில் சொல்ல இயலாத கோபத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். வெறும் 120 ரூபாய் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளி காய்கறி, மளிகைச் சாமான் வாங்கவும், தரமான அரிசிச் சாப்பாடு சாப்பிடவும் 250 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஐந்து ரூபாய் விற்ற சலவைச் சோப்பு இன்று பத்து ரூபாய் விற்கிறது. எண்ணெய், பருப்பு வகைகள் இன்னும் விலை குறையவே இல்லை. மளிகைச் சாமான்களின் விலை வின்னை முட்டி நிற்கிறது. தரமான பொன்னி அரசியின் விலை ரூபாய் நாற்பது என்ற அளவில் விற்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தடுக்கவும், விலை வாசி குறையவும் திமுக அரசு மறந்து விட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். விளைவு அடுத்த சாய்ஸ் என்னவென்று பார்க்க முயலுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

மேலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் திமுக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு மின்வெட்டு. சிறு தொழில் முதற்கொண்டு அனைத்து தொழில்களும் நசிந்து கிடக்க மின்வெட்டு காரணமாயிருக்கிறது. வெளி நாட்டின் மூலதன்ங்களை தமிழ் நாட்டுக்கு கொண்டு வரும்போதே மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என்பது கூட தெரியாமல் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

பெண்களின் சொல்லொண்ணா கோபத்தை மின்வெட்டு சம்பாதித்திருக்கிறது. காரணம் டிவி சீரியல்கள். இதை நான் பலமுறை பல வீடுகளில் நேரில் கண்டிருக்கிறேன்.

திமுகவின் மீது மக்களின் உட்கோபமும், அதிமுகவின் அரசியல் சந்தர்ப்பவாத சூழ்ச்சி அரசியலும், இலங்கைத் தமிழருக்காக கட்சி நடத்திய வைகோவின் சேராத இடம் சேர்ந்த துரோக அரசியலும், எங்கு பசை இருக்கிறதோ அங்கு ஒட்டிக் கொள்ளும் அட்டை பாமகவும், சாதராண வட்டச்செயலாளர் பொறுப்புக்குக் கூட காசு வாங்கும் தேமுதிகவும், ஏதோ ஒரு காரணத்துக்காக கட்சி ஆரம்பித்த சமதிகவும், இந்துத்துவ அரசியல் செய்து வரும் பாஜகவினையும், இலங்கையில் தமிழர்களை கொன்றொழிக்கும் அரசுக்கு உதவி செய்யும் காங்கிரஸ் கட்சியும் மேலும் தேர்தல் மழையில் முளைத்து வரும் ஜாதீயக் கட்சிகளையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வெல்லப்போவது யார் என்பது மே 13க்கு முன்னால் நடக்கக்கூடிய தேர்தல் பிரச்சாரம்தான் முடிவு செய்யும். போன தேர்தலில் தமிழகத்தில் நடந்ததும் அதுவே. தமிழக மக்கள் புத்திசாலிகளா இல்லை ஆட்டு மந்தைக் கூட்டமா என்பதை இத் தேர்தல் நிரூபித்துக் காட்டி விடும்.


%d bloggers like this: