குடிகாரன் எழுதிய இலக்கிய கதை

டாஸ்மாக்கில் ஆஃப் வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பாரில் ஒதுங்கினேன். அழுக்காய், தூசியாய், இருளாய் சற்றே வெளிச்சத்தோடு கவுச்சியும், எச்சிலும் சேர்ந்த மணத்தோடு இருந்த பாருக்குள் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். சர்வர் வந்தான். வேண்டியற்றைச் சொல்ல, ஆம்லெட்டும், ப்ளாஸ்டிக் குவளையும், தண்ணீரும் வந்தது.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அரசு சம்பந்தப்பட்டவைகள் எல்லாம் ஏன் அழுக்காய் இருக்கின்றன ? அழுக்கு மனமுள்ள மனிதர்கள் தாங்கள் என்று நிரூபிக்கின்றார்களா என்னவோ தெரியவில்லை.

போதையில் பேசும் பேச்சுக்களையும், எழுத நினைப்பவைகளும் எழுத்தில் கொண்டு வரும் பொழுது சற்று இலக்கணம் சேர்த்து வருகிறது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. போதையில் தான் மனிதன் மனிதனாக இருப்பானோ????

பக்கத்தில் அரவம் போல சத்தம் கேட்க உண்மையில் நாகநாதன் அருகில் நின்று கொண்டிருந்தான். அரவம் என்று எழுதியதற்காக பெயரையும் நாகநாதன் என்று எழுதிவிட்டு என்னை நானே ஒரு சொட்டு வைத்துக் கொண்டேன். பாருங்கள் எழுத்து சற்று மேம்பட்டிருப்பதை. ஹா… ஹா… என்ன சிரிக்கின்றீர்கள் ? இதெல்லாம் இலக்கியமய்யா… இலக்கியம்…. இலக்கியமல்லவா எழுதுகிறேன்.. சுத்த இலக்கியம் எங்கிருந்து வருமென்று நினைக்கிறீர்கள். தண்ணி அடித்தவன் தான் உச்சப்பட்ச இலக்கியத்தைப் படைக்க இயலும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா. ஆதலால் நான் எழுதுவதெல்லாம் இலக்கியம்.. எதிர்கால சந்ததிக்கு என்று வாழ்வியலின் நாடகங்களையும், கதா பாத்திரங்களின் வசனங்களையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியாய் தான் குடிகாரன் பேச்சு இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நல்ல போதை. ஜிவ்வென்று கண்கள் எல்லாம் கனத்தது. உடம்பு மிதந்தது போல தெரிந்தது. எதிரே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் நாகநாதன் இருக்கிறானே, அவன் கல்யாண வீட்டுக்குச் சென்றானென்றால் மாப்பிள்ளை இப்போது இறந்தால் எப்படி இருக்குமென்று எண்ணுபவன். விவஸ்தையே இல்லாமல் இடம் பொருள் பார்க்காமல் மனதுக்குள் என்ன நினைக்கிறானோ அதையே பேசி வைப்பான். ஆட்டுப் பிரியாணியை வாய்க்குள் திணித்துக் கொண்டே போன வாரம் லாட்ஜில் புணர்ந்த காட்சியை சாப்பிடுவதோடு ஒப்பிட்டுப் பார்ப்பான். இதுவும் கறிதான் அதுவும் கறிதான். என்ன இந்தக் கறி மசாலாவில் வெந்து வாய் வழியாய் போகிறது. அது மசாலாவாக பேசி உள்ளே செல்கிறது என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான். போதையின் பிடியில் மிதந்து கொண்டிருந்த என்னிடம் விசுக்கென்று கேள்வி ஒன்றைக் கேட்க, அவன் எப்படி யோசிப்பானோ அப்படியே பதிலும் சொன்னேன். அது தான் இது…

”டேய், குடிகாரா… ?”
“என்ன சொல்லு….!”
“ஏண்டா குடிக்கிறாய்….? குடித்துக் குடித்துக் குடல் வெந்து செத்துப் போகப் போகிறாய். உனக்கோ மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்காவது நீ இந்தக் குடியை நிறுத்தக் கூடாதா ?” என்றான்….

ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்தேன்.

”முடியாது நாதா ! முடியாது. விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் விடமுடியாது. குடியின் போது என்னை நானே மறந்து போகிறேன். என்னைச் சுற்றி நடக்கும் மனித உலகத்தின் அவல நாடகங்களை கண்ணுறும் போது ஏற்படும் வெறுப்பு எனக்கு வாழ்வின் மீதான வெறுப்பாய் மாறுகிறது. அதுகூடாது என்பதால் குடிக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் மீது என்னைப் போல வெறுப்பேற்பட்டால் சமுதாயம் சீரழியும். குடும்பமும், குழந்தைகளும் அழிந்து போவார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாமல் போவதால் எனக்குள் உண்டான வெறுப்பினை மறக்கக் குடிக்கிறேன் “

”என்னடா, குடிகாரா, இப்படியெல்லாம் பேசுகிறாய். என்னவோ பிளாக் எழுதுகிறேன் என்று சொன்னாய். அதற்காக இப்படியா புரியாத மாதிரி எல்லாம் பேசுவது. என்ன சொல்லுகிறாய் என்றே புரியவில்லை. புரியும் படியாகத்தான் பேசேன்”

”சரி நாதா, உனக்குப் புரியும்படியே சொல்கிறேன் கேள்.

தமிழக அரசின் குடிமகனான நான், நம்மைக் குடிக்க வைக்க கடை நடத்தும் அரசுக்கு உதவி செய்ய வேண்டுமல்லவா? அதனால் தான் குடிக்கிறேன் என்றேன். நான் என்றும் அரசின் சட்ட திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல. அரசுக்கு உதவி செய்ய விரும்பும் சாதாரண குடிகாரன்.

என்ன சொல்வதென்றே தெரியாமல் ஹக் என்ற சத்தத்துடன் என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான் நாகநாதன்.

3 Responses to குடிகாரன் எழுதிய இலக்கிய கதை

 1. Joe சொல்கிறார்:

  அரசாங்கத்தை வாழ வைக்கும் உங்களை போன்ற குடிகாரர்கள் வாழ்க.
  நமக்கு மட்டமான சரக்கை விற்று உடலை கெடுத்து, பரலோகம் அனுப்பும் அரசாங்கம் ஒழிக!

  (தேவையில்லாமே இந்தாளு சரக்கை பத்தி எழுதி, வெள்ளிக்கிழமை அடிக்க வேண்டிய சரக்கை திங்கட்கிழமையே அடிக்க வைச்சிருவான் போலேருக்கே?)

  • குடிகாரன் சொல்கிறார்:

   ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு என்று பாட்டெழுதிய கண்ணதாசனை பாராட்டுவீர்கள். ஆனால் என்னைத் திட்டு வீர்கள். என்னய்யா அக்கிரமம் இது! அரசாங்கம் என்பதற்கு அருமையான விளக்கத்தை கொடுத்த ஜோ அவர்கள் வாழ்க… வாழ்க… எந்த பாரில சரக்கு போடுறீயன்னு சொன்னா நானும் வந்துக்குவேன்ல….

 2. nTamil சொல்கிறார்:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: