மஹாத்மாக்கள் ஆன வக்கீல்கள்

டிவிக்களில் பார்த்ததையும், கேள்விப்பட்ட செய்திகளையும் வைத்துப் பார்க்கும் போது, ஜன நாயக நாட்டில் ஒரு பிரச்சினையை முன்னிட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த சக வக்கீல் சுப்பிரமணிய சாமியை இன்று குய்யோ முறையோ என்று கத்தும் வக்கீல்கள் தாக்கியது முதல் குற்றம்.

அழுகிய முட்டையை கோர்ட்டுக்குள்ளேயே, அதுவும் நீதிபதியின் முன்னிலையில் வீசிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்த போலீஸாரை தாக்குகியது இரண்டாவது குற்றம்.

இப்படி வரிசையாக குற்றச் செயலில் ஈடுபட்ட வக்கீல்கள் முத்தாய்ப்பாக கோர்ட்டுக்குள் இருந்த காவல்துறை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்.

வரிசையாகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை விரட்டி அடிக்க வந்த போலீஸார் மீது கல்லெறிந்த காட்சியினையும் கண்டோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றமோ, கூட்டமாக சேர்ந்து தாக்குதல்களோ நடந்தால் போலீஸ்கார்ர்கள் கலவரக்காரர்களை விரட்டி அடிப்பது வாடிக்கையான ஒன்று. எவ்வளவோ இடங்களில் கலவரத்தினை அடக்க தடியடி, கண்ணீர்புகை குண்டு முடிவில் துப்பாக்கிச் சூடு எல்லாம் நடத்தினார்களே போலீஸார் அப்போது எங்கே சென்றார்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்றுச் சொல்லி பொதுமக்களை சட்டத்தின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கும் சில வக்கீல்கள்.

அடுத்து போலீஸார் யாரைக் கேட்டுக் கொண்டு கோர்ட்டுக்குள் சென்றார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

குற்றச் செயல்களை வக்கீல்கள் கோர்ட்டுக்குள் செய்தால் குற்றமில்லையா ? வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? சுப்பிரமணியசாமியைத் தாக்கியது உண்மை என்றால், அப்படித் தாக்கியவர்கள் வக்கீல்கள் என்றால், அவர்கள் இருக்கும் இடம் கோர்ட்டு என்றால், அக்குற்றவாளிகளை கைது செய்ய கோர்ட்டுக்குள் வரக்கூடாதா ? குற்றவாளிகளைப் பாதுக்காக்கும் கூடரமா கோர்ட்டுகள் ? கருப்புக் கோட்டுக்குள் முகம் மறைத்த வக்கீல்கள் சட்டத்தினை தன் கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தைக் கொளுத்தினார்களே காவல்துறை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? சட்டம் வக்கீல்களுக்கு சம்பாதித்துக் கொடுக்க மட்டும் தானா இருக்கின்றன. இவர்களின் இந்தியாவின் பிரஜைகள் இல்லையா ? இவர்கள் சட்டத்தினை மதிக்க வேண்டாமா ?

போலீஸ்கார்ர்கள் அனுமதி பெற்றுத்தான் கோர்ட்டுக்குள் வரவேண்டுமென்றுச் சொன்னால் மும்பையில் நடந்த்து போல மோசமான நிகழ்ச்சி கோர்ட்டுக்குள் நடந்தால் யாரைக் கேட்டு போலீஸார் கோர்ட்டுக்குள் வரவேண்டுமென்று யாராவது சொல்வார்களா?

கோவிலாக இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன ? எல்லா இடங்களும் ஒன்று தான் சட்டத்தின் பார்வையில். குற்றவாளி தாயின் கருவறையில் இருந்தால் கூட கைது செய்யலாமென்று வேடிக்கையாகச் சொல்வார்கள். இன்னொன்றையும் இனிமேல் சேர்த்துக் கொள்ளலாம். வக்கீல்கள் என்றால் போலீஸாரும் கழிந்து விடுவர் என்றும் சொல்லலாம். வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்பது நிதர்சனம்.

சட்டத்தின் படி அத்துமீறி தாக்குதல்களில் ஈடுபட்ட போலீஸ்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்டம் பேசும் வக்கீல்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு விட்டு, இன்று போலீஸார் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று நீலீக்கண்ணீர் விடுவது நியாயமா?

தவற்றுக்கு மேல் தவறு செய்து விட்டு பெரிய மஹாத்மாக்கள் போல வக்கீல்கள் போராடுவது கேலிகூத்து என்பது உண்மை.” அடித்து விட்டார்கள் அவர்களை சஸ்பெண்ட் செய்யாமல் விடமாட்டேன்” என்று கொக்கரிக்கின்றார் ஒரு வக்கீல். யார் அடித்தது ? இவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டா அடியினை வாங்கிக் கொண்டார்கள்? போலீஸ் ஸ்டேஷனை எரித்தார்களே அது என்ன அஹிம்சைச் செயலா? குற்றமில்லையா? அடிக்க வந்தவர்களை விரட்டி அடித்தால் அது போலீஸ்காரர்களின் தவறா ? சட்டக்கல்லூரியில் வேடிக்கைப் பார்த்த போலீஸாரை என்னவெல்லாம் பேசினார்கள் இந்த வக்கீல்கள். சும்மா இருந்தாலும் குற்றம், சும்மா இல்லையென்றாலும் குற்றமா? ஊருக்கு இளிச்சவாயர்கள் போலீஸாரா?

சரி ஒரே ஒரு கேள்வி : குற்றம் ஒன்று நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அக்குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் நான் குற்றவாளி இல்லை என்று வக்கீல்கள் மூலம் வாதாடுவார்கள். ஆனால் உண்மையில் யாரோ ஒருவர் குற்றவாளி என்பது உண்மை. அக்குற்றவாளிக்கு துணை போகும் அல்லது காப்பாற்ற முனையும் வக்கீலும் குற்றவாளிதானே. இவர்களை எந்தச் சட்டத்தின் வாயிலாக தண்டிப்பது ? குற்றத்திற்கு துணை போனவர்களுக்கும் தண்டனை உண்டு என்று சொல்கிறது இந்திய தண்டனைச் சட்டம். அக்குற்றவாளிக்குச் சப்பைக்கட்டு கட்டி அவர்களைக் காப்பாற்ற துணியும் வக்கீல்கள் என்ன மகாத்மாக்களா ?

வாய்தாக்களில் தனது சொத்துக்களை இழந்த எத்தனையோ ஏழைமக்களின் கண்ணீர்க்கதைகளும், வாய்தாக்களின் மூலம் மாட மாளிகை கூட கோபுரங்கள் கட்டிய எத்தனையோ வக்கீல்களின் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது கோர்ட் வளாகங்கள்…

வக்கீல்களின் வெற்றிக்குப் பின்னால் எண்ணற்ற போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விட்டு இன்று குதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

போலீஸாரைக் குற்றம் சொல்லும் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதும் போலீஸார் தான் என்பதனை மறந்து விட்டு ”அடிக்கிறார்கள்” என்று அலறுகிறார்கள்.

குற்றச் செயலை முதலில் செய்தது வக்கீல்கள். இச்சம்பவத்திற்கு காரணகர்த்தாக்கள் வக்கீல்கள்தான். தப்புச் செய்தார்கள் அதனால் தான் போலீஸார் அங்கு கைது செய்ய வந்தனர் என்பதை அனைவரும் முதலில் அறிந்து கொள்வது நல்லது. இதை விட்டு விட்டார்கள். போலீஸார் அராஜகம் அது இதுவென்று கூப்பாடு போடுகிறார்கள். போலீஸார் எதற்கு அவ்விடத்தில் நுழைந்தார்கள் என்பதை உலகே அறியும்.

முதலில் நீதித்துறை கருப்புக் கோட்டுக்குள் புகுந்து கொண்டு சட்டத்தினை பாதுகாப்பாய் வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்யும் சில வக்கீல்களை அடையாளம் கண்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக போலீஸாரின் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினை கேவலப்படுத்தும் செயல். குற்றச் செயலிலும், காவல் நிலையத்தையும் எரித்த வக்கீல்கள் லைசென்ஸ் பறிக்கப்பட வேண்டும். அந்த வக்கீல்கள் கோர்ட்டுக்குள் நுழைய வாழ் நாள் தடை விதிக்க வேண்டும். வக்கீல்கள் தனது வண்டிகளில் வக்கீல் சின்னத்தினை பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

ஆனால் இது எதுவும் நடக்கப்போவதில்லை. உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கே அல்வா கொடுத்த கேரள அரசினை யார் என்ன செய்தார்கள்? சட்டம் என்ன செய்தது? காவல்துறைக்கும், வக்கீல்களுக்கும், சட்டத்தினை சட்டைப்பையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது குடும்பதார் நலனுக்கு மட்டுமே சட்டங்கள் இருக்கின்றன. அது பொதுமக்களுக்காக எழுதப்பட்டது என்று புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதெல்லாம் வேடிக்கைப் பேச்சு. கேட்டு சிரித்து வைக்கலாம்.

குறிப்பு : இக்கட்டுரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட வக்கீல்களை முன் வைத்து எழுதப்பட்டது. தர்மத்தினை மூச்சாக கருதும் வக்கீல்கள் யாராவது படிக்க நேர்ந்தால் இது அவர்களைப் பற்றியது அல்ல என்று கருதவும். இது முற்றிலும் குடிகாரனின் நகைச்சுவை கலந்த போதைப் பேச்சு. போதை தெளிந்தால் கருத்துக்கள் மாறுபடலாம். ஹி..ஹீ…

14 Responses to மஹாத்மாக்கள் ஆன வக்கீல்கள்

 1. rudhran சொல்கிறார்:

  இது முற்றிலும் குடிகாரனின் நகைச்சுவை கலந்த போதைப் பேச்சு. போதை தெளிந்தால் கருத்துக்கள் மாறுபடலாம். ஹி..ஹீ…!!!!!!!
  then write when you wake up

  • குடிகாரன் சொல்கிறார்:

   காலை பதினோறு மணிக்குத்தான் விழிக்கிறேன். மீண்டும் சரக்கு.. மீண்டும் போதை. எங்கே விழிப்பது ? வேக்க்ப்பும் கிடையாது ? ஒன்றும் கிடையாது… இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

 2. Anbu சொல்கிறார்:

  ETHUTHAN NAAN ETHIPARTHATHU. ENDRIKU HIGH COURT ROWDIHALIN KOODARAMAHI POI VITTATHU. EVARHAL VAKEELHALA ALLATHU ROWDIHALA ENDRU PURIYA VILLAI. YARUKKUM KATTUPADA MATTEN ENDRAL EVARHAL ENNA VANATHIL ERUNTHU KUTHITHU VANTHAVARHALA. POLICE NADAVADIKAI 100 KU 100 SARI.

 3. karan சொல்கிறார்:

  Thank you so much.My sentiments and you have recorded it nicely.A few weeks ago the students of a law college had set a brilliant example in how to behave in public.Now the elders have reiterated how to behave in public.One lady and two gentlemen ( i regret to call them like this ) lawyers were parading their tirade against the police in a Jaya TV interview.At the same time i am not siding with the police either. Whatever happened to the rule of Sub Judice.It is so scary where this is going to end?

 4. nara சொல்கிறார்:

  ஏம்பா, தமிழனுக்கு கொஞ்சம் சொரணையொடு நடந்துகிட்ட உடனே நியாயம் பேசி அதை அப்பவே கிள்ளிபுடுறீங்க! சும்மா உடடுப்பா, சுன சானவுக்கு இது தேவைதான்,

 5. kumar சொல்கிறார்:

  These lawyers think they are above law.they should hav fought against the police legally.instead they behaved badly.ur comment is neutral

 6. nasar sab சொல்கிறார்:

  your answer is correct, i think all law and order and judgements is giving to lawers. Police man all go to house. ( wastely give to Salary and other benefits ) Why? the police officers all investigat the Law and crime and submit the court but some lawers acting for criminals side and released.

 7. raraja cholan சொல்கிறார்:

  நாயை விட கேவலமானவர்கள் வைக்கில் , அதான் பார்த்தோமே லா கல்லூரியில்

 8. tadfar சொல்கிறார்:

  சொல்லுறது எல்லாம் சரிங்க.

  !) இவ்வளவு கடமை உணர்ச்சி யுள்ள போலீஸ் ஏன் மிருகம் மாதிரி சட்ட கல்லுரி மாணவர்கள் அடி பட்ட போது , சட்ட கல்லுரி குள்ள போகாம வேடிக்கை பார்த்தாங்க…

  ௧) குற்றம் பாத்த கார், இரு சக்கர வாகம் எல்லாம் நொறுக்கியது அதுவும் போலீஸ் நொறுக்கியது எந்த சட்டதுல அண்ணே இருக்கு…

  வழக்கறினர்கள் ஈழ பிரச்சனைக்கு போராடியது தான் முக்கிய காரணம்.

  நீங்க சு சாமி, சோ ஆளு மாதிரி தெரியுது … சட்டம் பேசுரேலே …

  • velichathil சொல்கிறார்:

   என்னா சாரே, சு சாமியும், சோவுமா எனக்கு குடிக்க பீரு வாங்கித் தாராங்க. நீங்க வேற…வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க..

   காவல்துறையினர் 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வேண்டும். மேலதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். மேலதிகாரிகளுக்கு அடிமையாய் சேவகம் செய்யும் எத்தனியோ காவல்காரர்கள் தினமும் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கண்டவனிடமெல்லாம் நாயடி பேயடி வாங்கும் பரிதாபத்துக்குரியவர்கள் போலீஸார். வெயிலில் நின்று டிராஃபிக்கை சரிசெய்வதும் இவர்கள்தான். சாலை மறியல் நடந்தால் உடனடியாக அங்கு சென்று போராட்டம் செய்பவர்களை கெஞ்சாத குறையாக விரட்டுவதும் இவர்கள்தான். மீறினால் அடிக்கவும் செய்வார்கள். நம்மைப் போன்ற மனிதர்கள் தானய்யா போலீஸாரும். பாவப்பட்ட ஜென்மங்கள். அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிப்பதும், அவர்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெறுபவர்களும் இவர்கள் தான்.

   அன்றைக்கு நடந்தது சட்டப்படி சரி என்று தான் சொல்ல வேண்டும். லாயர்கள் சட்டத்தினை மீறினார்கள். அடி போட்டார்கள் போலீஸார். இதெல்லாம் காலம் காலமாய் நடந்து வருவது தானே. இவர்கள் லாயர்கள் அதனால் பெரிய பிரச்சினையினைக் கிளப்புகிறார்கள்.

   சட்டக் கல்லூரிக்குள் செல்லவில்லை என்று குற்றம் சுமத்துகிறீர்கள். கோர்ட்டுக்குள் சென்றதுக்கு குற்றம் சொல்கிறீர்கள். இது என்னய்யா நியாயம்… பாவம் காவல்துறை…

   நான் , அதாவது குடிகாரன் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

   ஈழப்பிரச்சினை தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் எழுதினால் வம்பு வரும். ஆதலால் நான் பிரச்சினைக்கு எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.

 9. asfar சொல்கிறார்:

  yes, you are going to think right way, we wait for such a artile…… vary sad about layers opinions and acts..

 10. KRISH சொல்கிறார்:

  என்னை போன்ற ஒத்தகருத்துக்கள் -நன்றி

 11. pukalini சொல்கிறார்:

  பெருசுக்கு புத்தி பேதலிச்சிப் போட்டுது. ஆமா அடிச்ச தண்ணியில தினகரனில எரிஞ்சவங்களின் பேய் வந்து சொன்னது மறந்து போச்சா? நாட்டில கொஞ்சக் காசக் காணமாமே அது எங்க போச்சு? ஆமா இந்த மாமாப் பயலுகளை எல்லாம் ஆரு பொலீசு எண்டு சொன்னது? எடுபிடிகளும், ரவுடிகளும் கோர்ட்டுக்க போகலாமா? அப்ப எதுக்கு கோட்டு? சு.சாமிக்கு சு எண்டா என்னண்டு தெரியுமா? அதுக்கு கோவணம் கட்டத் தெரியாதாமே? உண்மையா? அந்தப் பேய்க்கு கோட்டில என்ன வேலை?

  • velichathil சொல்கிறார்:

   குடிகாரன் மட்டும் தான் இவ்வுலகில் நல்லவன் தெரியுமா. அந்தக் குடிகாரனுக்கு சகாயம் செய்யும் அரசையும், போலீஸையும் நான் எதுக்குப்பா திட்டி எழுதனும்.

   ”சு.சாமிக்கு சு எண்டா என்னண்டு தெரியுமான்னா” என்னாப்பா அது சு????

   நான் எவருக்கும் வக்காலத்து வாங்லை. போலீஸ் ஏன் அங்கன போச்சு எண்டு தான் கேக்ரன். வக்கீலுவ ரகளை பண்ணாவுக. அதனால தானே போலீஸு அங்கன போச்சுது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: