சில கேள்விகளுக்கு காரணமான ஆஸ்கார் அவார்டு

சிலம்டாக் மில்லியனர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் அவார்டு கிடைத்துள்ளது பற்றி சினிமா உலகம் ஆர்ப்பரிக்கிறது. இந்தியாவே மகிழ்ச்சியில் திளைக்கிறது என்கின்றன மீடியாக்கள். உங்கள் வீட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்காரிக்கு இந்த ஆஸ்கர் பற்றித் தெரியுமா என்று கேட்டால் இதெல்லாம் ஓவர் என்கிறார்கள். அந்த வேலைக்காரியை மனிதனாகவே மதிக்க மாட்டார்கள்.

சேரிகளில் வளரும் பையன்கள் எப்படி சமூகக் குற்றவாளியாய் மாற்றப்படுகிறார்கள் என்று சொல்கிறது சிலம்டாக் மில்லியனர்ஸ். இந்தப் படத்திற்கு அவார்டு கிடைத்ததும் பிரைம் மினிஸ்டர் பாராட்டுத் தெரிவிக்கிறார். பதவி புகழைப் புகழ்கிறது. ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் பிரைம் மினிஸ்டர். ஏழைகளின் படத்திற்கு இசை அமைத்து விருது பெறுகிறார் இசையமைப்பாளர். ஏழ்மையும், ஏழையும் வியாபாரப் பொருட்களாகிவிட்டன என்பது மனதைச் சுடும் உண்மை. ஏழைகள் பெரும் கோடீஸ்வரர்களின் புகழுக்கும், பொருள் வருவதற்கும் காரணமாயிருக்கிறார்கள் என்பது வேதனை.

இளையராஜாவுக்கு கிடைக்காத அவார்ட் ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது ஏன் என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்தே தீரும். காரணம் தமிழ்ச் சமூகம். மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடும், நடிகைகளில் கழுத்துக்குள்ளும், இடுப்பில் முகம் புதைக்கும், எதிர்த்து வரும் நூறு பேரை அடித்து துவைக்கும் கதா நாயகர்களின் கூச்சலில் தமிழ் சமூகத்தின் உணர்ச்சிகள் மறத்துப் போய் விட்டது. அந்தக் கதா நாயகர்களுக்கு குடைபிடிக்கும் வேலையினை இசை என்ற பெயரில் செய்து வந்த மாஸ்ட்ரோ (ஹி..ஹி…) இளையராஜாவின் இசை தமிழ் நாட்டின் குடிசைகளுக்குள் கும்மி அடிக்கிறது. இசை என்பது உலகளாவியது. அதன் வடிவங்கள் வெவ்வேறானவை. அதையெல்லாம் சிறிதும் அறியாத உலகம் தமிழ் உலகம். ஒரு காலத்தில் உலகெங்கும் கொடி கட்டிப் பறந்த தமிழனின் புகழ் இன்று விஸ்க் விஸ்க் , வச்சுக்கவா வச்சுக்கவா பாடல்களில் தடம் புரண்டு நிற்கிறது.  

இசையின் பல்வேறு வடிவங்களை தான் இசையமைத்த பாடல்களில் இழைய விட்டவர் ரஹ்மான். ஆனால் இளையராஜாவோ சிம்பனி என்ற பெயரில் தன் பழைய பாட்டுக்களின் மெட்டினை மீண்டும் திருவாசகப் பாடல்களில் ஒலிக்க வைத்து சரக்கு முடிந்து போன விஷயத்தை வெளிப்படுத்தினார். 

இளையராஜாவிற்கு ஏன் ரஹ்மான் அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு என் நண்பரின் பதில். ” இளையராஜா போதுமென்று ஆன்மீக வழியில் இறங்கி விட்டதால் இசையின் மீதான அவருக்கான தேடல் ஆன்மீகத்தின் மீது குவிந்து விட்டது. ஆனால் ரஹ்மான் இன்னும் தேடலில் இருப்பதால் அவரைத் தேடி புகழ் மாலைகள் வருகின்றன ”

ஆன்மீகம் ஒருவனுக்கான புகழையும் அழித்து விடக் காரணமாயிருக்கிறது என்பது விநோதம்.

சிலம்டாக் மில்லியனர்ஸ் குழுவிற்குப் பாராட்டுக்கள். 

6 Responses to சில கேள்விகளுக்கு காரணமான ஆஸ்கார் அவார்டு

 1. madrasthamizhan சொல்கிறார்:

  நல்ல பதிவு. விடை கிடைக்காத சில கேள்விகள்:

  1. இந்த படத்தை ஒரு இந்தியர் எடுத்திருந்தால் அதற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்குமா?

  2. “நல்ல” இசை என்பதன் விளக்கம் என்ன? வெள்ளைக்காரன் விருது கொடுத்தால் தான் அந்த இசைக்கு “நல்ல” இசை என்று பெயரா?

  3. நமது பத்திரிகைகள் இந்த விருதுக்கு ஏன் இப்படி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைகிறார்கள்? வெள்ளைக்காரன் விருது கொடுத்ததால்தான் அதற்கு மதிப்பா?

  4. இளையராஜாவின் ‘பிச்சை பாத்திரம்’ பாடல் மனதை உருக்குவதாக இருக்கிறதே அதை நமது பத்திரிகைகள் ஏன் பாராட்டவில்லை?

  • velichathil சொல்கிறார்:

   மிக நல்ல கேள்வி. ஒரு இந்தியர் எடுத்திருந்தால் நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது.
   நல்ல இசை என்பது என்ன ? என்பதற்கு ஏகப்பட்ட விளக்கங்கள் இருக்கின்றன சென்னைதமிழன். இடத்துக்கு இடம் மாறுபடக்கூடிய அந்த விளக்கங்களும் என்னைப் போலவே குடிகாரனாய் இருக்கின்றன.

   பத்திரிக்கை தர்மம் அய்யா ? என்றைக்குமே வெள்ளைத் தோலுக்கு மதிப்பு அதிகமய்யா. தெரியாதா உங்களுக்கு… நமீதா நினைவுக்கு வருகிறார்.

   நான் கடவுள் படத்தின் பாடல்களை இன்னும் கேட்கவில்லை. படத்தையும் பார்த்து விட்டு எழுதுகிறேன்…

   மறந்துட்டேன்….. உங்க பதிலுக்கு நன்றி…

 2. Nilofer Anbarasu சொல்கிறார்:

  //ஆன்மீகம் ஒருவனுக்கான புகழையும் அழித்து விடக் காரணமாயிருக்கிறது என்பது விநோதம்.//
  ஆன்மீகம் என்றைக்கும் யாரையும் அழிவு பாதைக்கு அழைத்து செல்லாது. விருது வாங்கிய ரஹ்மான் சொன்ன வார்த்தை “எல்லா புகழும் இறைவனுக்கே” என்பதுதான். இதுக்கு தான் குடி போதையில் இருக்கும் போது பதிவு போடக்கூடாதுன்னு சொல்லுறது.

  • velichathil சொல்கிறார்:

   நல்லா யோசித்துப் பாருங்க நிலோஃபர் அன்பரசு… நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எனது இந்தக் கருத்தில் எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பது விளங்கும்…

   நன்றிப்பா…

  • velichathil சொல்கிறார்:

   புருனோ… ஹி.. ஹி.. இன்னும் தெளியவில்லையா…. இருக்கட்டும் இருக்கட்டும்…

   படித்து விட்டேன். படித்து விட்டேன்… நிச்சயம் அப்படித்தானோ… இருக்குமோ இருக்காதோ.. என்ன எழவுடா இது.. எவனோ என்னவோ செய்துட்டுப் போறானுவ. நமக்கு என்னா ? அது எப்படி… பேசாம இருக்கிறது.. பேசித்தானே ஆகனும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: