கலாச்சாரக் காவலர்கள்

 

 

கர்நாடகாவில் அம்னீசியா ரெஸ்ட்டாரென்டில் நடந்தது பற்றி ஆங்கிலச் செய்தி சானல்களும், தமிழ் சானல்களும் கருத்துரைகள் பெற்றும் கருத்துரைத்தும் தனது பதற்றத்தை சமூகத்தின் பதற்றமாக வெளிப்படுத்துகின்றன.

 

டிவி பார்க்கிறவன் எல்லாம் முட்டாள் என்று எண்ணிக் கொண்ட மீடியாக்களில் கருத்துச் சொல்லும் மஹாத்மாக்கள் மேற்படி நிகழ்ச்சி தனி மனித சுதந்திரத்தில் தலை இடுவதாக கூப்பாடு போட்டார்கள். நீ சந்தோஷமாக இரு. தவறில்லை. அடுத்தவன் மகளுடன் பொது இடத்தில் உனக்கு என்னடா கூத்து வேண்டியிருக்கிறது. ஏன் நீ உன் அம்மாவையோ, தங்கையையோ, அக்காவையோ பப்புக்கு அழைத்துப் போயேன். அவர்களுக்கும் எல்லாமும் இருக்கிறது தானே. உன் குடும்பத்தினர் மட்டும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் அப்படித்தானே.

 

உனது சுதந்திரமென்பது உன் வரையில் தான். நீ செய்வது அயோக்கியத்தனம். தேவடியாத்தனம். இதை வேடிக்கை பார்ப்பது கையாலாகாத் தனம். பட்டப்பகலில் இருட்டாக்கப்பட்ட அறையினுள் குடியும், கூத்தும் கும்மாளமும் போட்டால் சமூகத்திலிருப்போர் கேட்கத்தான் செய்வார்கள். தனி ஒருவனாக வந்து கேட்டால் நீ அவனை சும்மாவா விடுவாய். கட்டுப்பாடு மிக்க சமூகத்தில் நீயும் ஒரு உறுப்பினர். உனக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை எப்படி நீ மீற இயலும். மீறினால் அடி விழத்தான் செய்யும்.

 

காலையில் விடிகிறது. மாலையில் இருளுகிறது. பூமி தனது சுழற்சியினை நேரம் தவறாமல் செய்து வருகிறது. பருவங்களும் அப்படியே. தனக்கென ஒழுங்கமைவில் இயங்கும் பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு கட்டுப்பாடு தேவையில்லை என்று பேசுவது கேலிக் கூத்து. உணவிற்கும் ஒழுங்கு விதிகளைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள். அதன்படி வாழவில்லை என்றால் சுகவீனமேற்படுகிறது. இல்லை என்று உன்னால் மறுக்க இயலுமா? இப்படித்தான் வாழவேண்டுமென்ற சமூகத்தில் இருக்கும் நீ சமூகக் கட்டுப்பாட்டினைக் கடை பிடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் எழும் விபரீதங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும். எல்லோரும் எல்லா நாட்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். குழந்தையாக இருக்கும் போது நடப்பதற்கும், பேசுவதற்க்கும், சாப்பிடுவதற்கும் தாய் தந்தையர் சொல்லுவது போல் தானே நடக்கிறாய். தானாக இயங்கும் தன்மை வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

 

ஸ்ரீ ராம் சேனாவின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். போராட்டம் செய்தால் கேட்டு விடுவாயா ? வேறு வழியின்றி அத்துமீறுகிறார்கள். நீ முதலில் மீறுகிறாய். அதனால் மற்றவனும் மீறுகிறான். சட்டப்படி தவறென்றாலும் சட்டங்கள் என்றும் கலாச்சாரத்தைக் காவல் காப்பதில்லை. சட்டத்தின் காவலர்கள் செய்ய வேண்டியதை ஸ்ரீ ராம் சேனா செய்கிறது. ஆனால் சேனாவின் வன்முறை தவறானது. உயிர்ப்பலி ஏதாவது ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது. வன்முறையினை விட்டு ஒவ்வொருவரின் வீட்டுக்கு முன்னாலும் போராட்டம் செய்திருக்க வேண்டும். பிட் நோட்டீஸ் அடித்து பொது மக்களை திரட்டி எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்.

 

பஃப் வைத்து நடத்துபவனையும், நடத்த அனுமதி கொடுப்பவனையும் சரி செய்ய வேண்டும் என்கிறார்கள். பிள்ளைக் கறி சாப்பிட நீதானே ஆசைப்பட்டாய். அதனால் தான் கடை விரிக்கின்றார்கள். பிள்ளைக்கறி சாப்பிடவில்லை என்றால் கடை ஏன் வருகிறது.

 

ஆகையால் நீ திருந்த வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தின் பிராணியான நீ, ஒழுங்கு முறைகளோடு வாழ வேண்டும். அது தான் மனித சமூகத்திற்கு நல்லது.

 

One Response to கலாச்சாரக் காவலர்கள்

  1. Sriram சொல்கிறார்:

    // ஸ்ரீ ராம் சேனாவின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். போராட்டம் செய்தால் கேட்டு விடுவாயா ? வேறு வழியின்றி அத்துமீறுகிறார்கள். நீ முதலில் மீறுகிறாய். அதனால் மற்றவனும் மீறுகிறான். சட்டப்படி தவறென்றாலும் சட்டங்கள் என்றும் கலாச்சாரத்தைக் காவல் காப்பதில்லை. //

    Mutrilum Unmai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: