தீவிரவாதிகள் யார் ?

தீவிரவாதிகள் யார் ? அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை தகர்த்தவர்களா ? இந்தியாவில் பார்லிமெண்டில் தாக்குதல் நடத்தியவர்களா ? மும்பையில் தாக்குதல் நடத்தி பலரை எமலோக பிரயாணத்துக்கு அனுப்பி வைத்தவர்களா ? ஆஃப்கானிஸ்தானில் குண்டு மழை  பொழிந்து மனிதர்களை கொல்லும் தலிபான்களா ? உலகெங்கும் அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கும் அல்கொய்தாவா ? இந்தியாவில் கொலைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் லஷ்கர் இ தொய்பாவா? இலங்கையில் தமிழினத்திற்காக ஆயும மேந்திப் போராடும் போராளிகளா? இவர்களும் தீவிரவாதிகள் தான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இவர்கள் எல்லாம் தீவிரவாத அமைப்புகள் என்றால் ஜன நாயகத்தின் பேரால் உலக நாடுகள் செய்து கொண்டிருக்கும் கொலைகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது ?

போராளிகளை கொல்லும் இலங்கையை என்னவென்று சொல்வது? இவர்கள் கொல்வது உயிர் இல்லையா? இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து மனிதர்களை கொல்லு என்று சொல்லும் சீனாவை,பாகிஸ்தானை, இஸ்ரேலை என்னவென்று சொல்வது? இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை என்ன சொல்வது? ஈராக்கை தாக்கிய அமெரிக்காவை என்னவென்று சொல்வது? ஈராக்கில் உள்ளவர்களை குண்டு வீசி கொன்றதே அமெரிக்கா, அதற்கு என்ன பெயர்? அமெரிக்காவிற்கு ஆதரவாக ராணுவ வீரர்களை அனுப்பி வைத்த மற்ற நாடுகள் எல்லாம் ஈராக்கில் அமைதி ஊர்வலமா நடத்தினார்கள்?

உலகெங்கும் ஐரோப்பிய நாடுகள் விற்கும் ஆயுதங்கள் பூமியை உழுது விவசாயத்தைப் பெருக்கவா பயன்படுத்தப்படுகின்றன. மக்களை கொல்ல ஆயுதங்களை விற்கும் நாடுகளை என்னவென்று அழைப்பது? நாடுகளின் பேரில் மனிதர்களை கொல்வது எந்த வகை தர்மம் என்று யாராவது சொல்வார்களா?

ஜனநாயகம்,சுதந்திரம் என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்று உங்களுக்குத் தெரிகிறதா? உலகினை ஆட்டிப் படைக்கும் ஆதிக்க சக்திகளின் கூட்டணிகள் பொது மக்களை முட்டாளாக்கப் பயன்படுத்தும் சொற்கள் தான் ஜனநாயகம், சுதந்திரம். இந்த ஆதிக்கச் சக்திகள் தான் மற்றவர்களை பயங்கரவாதிகள் என்று அறை கூவல் விடுப்பார்கள். மனிதர்களே! தீவிரவாதிகளால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கதறுவார்கள். விளைவு  நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் சைலென்டு கொலைகாரர்களாக மாறி உயிர்களைக் குடித்து கொண்டிருக்கிறார்கள்.

எவன் ஒருவன் நாட்டிற்காக உயிர்களைக் குடிக்கும் ஆயுதங்களை உருவாக்குகிறானோ அவன் தான் தீவிரவாதி. போராளிகள் உருவாக காரணம் அரசியல். ஆதிக்கச் சக்திகள் தானும் தன் குடும்பமும் நலமாக இருக்க அவர்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஆபத்து என்று கூப்பாடு போட்டு தன் பிடியில் இருக்கும் மீடியாக்கள் மூலம் அபாயச் சங்கு ஊதி பீதியைக் கிளப்புகிறார்கள். ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாக சங்கூதும் மீடியாக்கள் தீவிரவாத மீடியாக்கள்.

மதத்தின் பெயரால் மனிதர்களைக் கொல்லும் மதம் தீவீரவாத மதம். நாட்டின் பெயரால் மற்ற நாட்டினைக் கொல்லும் நாடு தீவிரவாத நாடு. அரசியலின் பெயரால் மற்றவர்களைக் கொல்லும் அரசியல் கட்சி தீவிரவாதக் கட்சி. ஜாதியின் பெயரால் மனிதர்களைக் கொல்லும் ஜாதி தீவிரவாத ஜாதி.

இவற்றையெல்லாம் சற்று நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள் மக்களே! உண்மை விளங்கும். வெளிச்சத்தின் கீழே இருள் அகன்றோடி விடும்.

One Response to தீவிரவாதிகள் யார் ?

  1. guru சொல்கிறார்:

    THEN TAMIL TGERS KILLED CIVILIONS IN SRI-LANKA ALMOST 30 YEARS WHAT SHOULD YOU SAY ABOUT THIS? THIS ALSO CALLING TERORISAM.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: