ஒரு ஒப்பீடு

ஒக்ரோபர் 9, 2015

PTI10_3_2015_000193B

முகேஷ் அம்பானியால் எண்ணற்றோர் வேலை செய்கிறார்கள். சம்பாதிக்கின்றார்கள். வாழ்கிறார்கள்.

நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது கொஞ்சமாவது உங்களுக்குப் புரிய வேண்டும். ஒவ்வொருத்தனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் போனால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம். இந்த நொடி உங்களிடமிருந்து போய் விட்டது. மீண்டும் கிடைக்குமா?

விஜய் டிவியில் டிடி இதை அருமையாகச் சொன்னார். ”விலையே இல்லாத அருமையான உங்களின் நேரத்தினால் தான் நாங்கள் இந்த அவார்டுகளைப் பெறுகிறோம் என”

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரம்! மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு பெரிய சொத்து. எத்தனை பேரின் மூன்று மணி நேரம்? அளவிருக்கிறதா அதற்கு? விலை இருக்கிறதா அதற்கு?

பிறருக்காக நீங்கள் காசைக் கொடுத்து செலவிடும் அந்த ஒவ்வொரு மணித்துளியையும் பலரின் பாக்கெட்டுக்குள் செல்கிறது. அந்த நன்றிக்கடனுக்காவது ஒரு வாய் தண்ணீராவது கொடுத்தார்களா? என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்பமும், நீங்களும் உருப்படுவீர்கள்.

– பஞ்சரு பலராமன்


ரிவீல்ட் – இந்தியாவின் உண்மையான பணக்காரர்

ஒக்ரோபர் 9, 2015

அம்பாணி கணக்கில் காட்டும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

கணக்கில் காட்டப்படாத இந்தியாவின் பணக்காரர் யார் தெரியுமா?

டீக்கடையில் டீ குடிக்கமாட்டார். ரோட்டுக்கடையில் சாப்பிடமாட்டார் இப்படியெல்லாம் யார் செய்கிறாரோ அவரே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்.

– ஐபோ


Reveal – பெட்ரோல் பங்க் தலைவர்

ஒக்ரோபர் 3, 2015

ஒரு கட்சியின் இணைத்தலைவர் அவர். தமிழ், தமிழ், தமிழ் என்றும் தமிழர், நலன், மது ஒழிப்பு போன்ற போராட்டங்களில் கலந்து கொள்வார். இணைத்தலை அல்லவா? கட்சியில் மரியாதைக்கும் குறைவில்லாதவர்.

அவரைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றெல்லாம் தோன்றும். அய்யாவுக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ரொம்பவும் நெருக்கமென்றால் நெருக்கம் அப்படி ஒரு நெருக்கம்.

ஒரு பீரியடில் முக்கியமான ஒரு மத்திய அமைச்சரின் ஆசியால் வேற்று மாநிலத்தில் ஏகப்பட்ட பெட்ரோல் பங்க் லைசென்சுகளைக் கத்தையாக கைப்பற்றி விட்டார்.

தமிழ் நாட்டில் பெட்ரோல் வைத்திருந்தால் தானே எல்லோருக்கும் தெரியும்? வேற்று மாநிலத்தில் இருந்தால் யாருக்கு என்ன தெரியப்போகிறது? என்று நினைத்து விட்டார் போலும்.

ஒரு பட்சி போட்டுக் கொடுத்து விட்டது.

தினம் தோறும் இலட்சங்களில் இல்லை இல்லை கோடிகளில் குவித்துக் கொண்டிருக்கிறார் இணை.

ஆனால் அரசியலிலோ ஏழைத்தமிழனுக்கு விடிவுகாலம் பிறக்க வைப்போம் என்று உரையாத்திக் கொண்டிருக்கிறார்.

ரிவீல் முடிந்தது.

இனி அடுத்த ரிவீலில் சந்திப்போம்…

– ஐபோ


ரெய்டு உண்மை என்ன?

ஒக்ரோபர் 3, 2015

சமீபத்தில் நடிகர் விஜய், சமந்தா, நயன் தாரா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கணக்கில் வராத 100 கோடி ரூபாயைப் பிடித்திருக்கின்றனர் என்று தினசரிகளில் செய்திகள் வெளிவந்திருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

பிடிபட்ட வரிகட்டா பணத்திற்கு வரியும், அபராதமும் விதிக்கப்போவதாக வருமான வரித்துறையினர் முடிவு செய்திருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

பிடிபட்ட கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு வரியும், அபராதமும் சரி! ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து, யாரால், எப்படி அவர்களுக்கு கிடைத்தது? அவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் என்ன? அப்பணம் எப்படி கொடுக்கப்பட்டவர்களால் சம்பாதிக்கப்பட்டது என்ற விபரங்களை வருமான வரித்துறையினர் விசாரிப்பார்களா?

அப்படி விசாரணை செய்ய ஆரம்பித்தால் எந்த நடிகர், நடிகையாவது பென்ஸ் காரிலோ, ஹெம்மர் காரிலோ வலம் வர முடியுமா?

சினிமா என்றால் கருப்பு பணம் என்பது வருமான வரித்துறையினருக்குத் தெரியவே தெரியாது என்று நாமெல்லாம் நம்ப வேண்டும் என்கிறதா அரசு?

இந்த ரெய்டு சொல்ல வருவது என்னவென்றால் தேர்தல் நெருங்குகிறது என்பதை யாரோ யாருக்கோச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதுதான்.

புதிய தலைமுறை டிவியில் மக்கள் மன்றத்தில் எஸ்.வி.சேகர் எங்களைக்(சினிமாக்காரர்களை) கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கிறார்.

அட மானம் கெட்ட தமிழா !

குண்டியாட்டிகளின் கூத்துக்களை ரசிப்பதுதான் கலையா? நாள் தோறும் சினிமா தியேட்டர்களுக்குப் படையெடுக்கும் வீணாய் போய்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். படம் பார்ப்பதினால் என்ன பயன் என்பதை…

– பஞ்சரு பலராமன்.


டிவிக்களில் விவாதங்கள்

செப்ரெம்பர் 15, 2015

அனாதி பிளாக்கின் ரசிகப் பெருமக்களே! இன்றைக்கும் தினமும் கிட்டத்தட்ட 600 தடவைக்கும் மேல் பார்க்கப்படும்(ஹீ…) அனாதி தளத்தினை பெருமைப்படுத்திக் கொண்டு வரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள் பலப்பல.

எவன் நல்லவன், எவன் அயோக்கியன், எவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்பதையெல்லாம் செய்தி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும். அவசியம் விவாத நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவிக்களைத் தவிர்த்து பிற டிவிக்களைப் பாருங்கள்.

நேற்று ஒரு வக்கீல் மதுரை கிரானைட் முறைகேட்டு விசாரணை செய்ய சகாயத்துக்கு உரிமையே இல்லை என்று லாஜிக் பேசினார். அதாவது குற்றம் சுமத்தியவரே விசாரணை செய்யக்கூடாதாம். எப்படியெல்லாம் இந்த வக்கீல் யோசிக்கின்றார் என்று பாருங்கள். ஒரு மாவட்ட கலெக்டர் கிரானைட் முறைகேட்டினை விசாரிக்கிறார். அறிக்கை அனுப்புகிறார். உடனடியாக அவரை மாற்றுகின்றார்கள். கோர்ட் அவரையே விசாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறது. இதற்கும் ஒரு லாஜிக்கை அந்த வக்கீல் சொல்கிறார்.

என்ன ஒரு கயவாளித்தனமான போக்குப் பாருங்கள். சகாயம் ஏன் சுடுகாட்டில் படுத்து உறங்கினார்? அரை மணி நேரம் விலகினால் தான் சுத்தமாக தடயங்களை அழித்து விடுகிறார்களே, ஒரு பெரிய மலையை காணவில்லையாம். உடனே சகாயம் புகழுக்காக அப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்கிறார் ஒரு முன்னால் அய்யேயெஸ். என்ன ஒரு சிந்தனை.

இப்படிப்பட்ட குறுக்குச் சிந்தனையாளர்களின் குறு மதியால் தமிழகம் சீர்கெட்டுக் கிடக்கிறது. அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களைத் தவிருங்கள்.

– பஞ்சரு பலராமன்.

வயிற்றுப் பிழைப்புக்காக இப்படியெல்லாம் ஈனத்தனம் செய்யும் அயோக்கிய சிகாமணிகளைக் கண்டு கொள்ளுங்கள். அவர்கள் தன்னை தாமே வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள்.


மீண்டும் ஒரே நிகழ்வு – என்ன நடக்கும்?

ஓகஸ்ட் 20, 2015

காலத்தின் போக்கில் எண்ணற்ற சிறு சம்பவங்கள் பெரும் அழிவுகளை உருவாக்கி விடுகின்றன. தமிழர்களின் வரலாற்றில் காமராஜர் மிக முக்கியமான தலைவர். அவரைப் போன்ற தலைவரை இனி எந்தக் காலத்திலும் தமிழகம் காணவே முடியாது.

ஒரு காலத்தில் திமுகவினர் கூட்டத்தில் காங்கிரஸ்ஸார் கல்லெறிவார்கள். அழுகிய முட்டையை அடிப்பார்கள். பல கலவரங்களை உருவாக்கினார்கள். அப்போது திமுக ஒரு வளர்ந்து வந்த கட்சி !

கையில் தடிகளை வைத்துக் கொண்டு காங்கிரஸ்ஸார்கள் வீடுகளுக்குள் புகுந்து அடித்த கதையெல்லாம் தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

அதே நிலை இன்று தமிழகத்தில் நடக்கிறது.

என்ன நடக்கப்போகிறது? பொறுத்திருப்போம் !

– அனாதி


எழுச்சியின் நாயகன்

ஜூலை 13, 2015

இதோ ஒரு எழுச்சியின் நாயகன் ! கண்டு களியுங்கள் !


Follow

Get every new post delivered to your Inbox.

Join 193 other followers

%d bloggers like this: