தானாட மயிலாட நிகழ்ச்சி இருக்கிறதே அதை விடச் சிறந்த ஒரு கலா நடன நிகழ்ச்சியை எந்த உலகிலும் பார்க்கவே முடியாது. தமிழக கலாச்சாரத்தை கட்டிக் காத்து, பேணி வரும் அற்புதமான நிகழ்ச்சி. தலைஞர் டிவியில் உருப்படியான ஒரு நிகழ்ச்சி எதுவென்றால் அது “தானாட மயிலாட” என்பதுதான். ஒரு சிலர் “மார்பாட மயிராட” என்றெல்லாம் இந்த நிகழ்ச்சியை விமர்சித்தாலும் அது பொறாமைக்காரர்களின் வயித்தெரிச்சலில் விளைந்த ஒன்றாகும்.
கு மாஸ்டர் போன்ற அற்புதமான பேரழகியை இனி இந்த தமிழ் உலகம் கண்ணால் கூட காண முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரின் உடையலங்காரம், நடையலங்காரம், பேச்சு, பேசும் போதே அசையும் அவரின் உடல் பாவங்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு வரலாறு. சுருக்கமாய்ச் சொன்னால், இரண்டு சதை மலைகளுக்கிடையே ஒரு அழகு மலை எனலாம். கிஷ்பூவும், குமீதாவும் குலா மாஸ்டரின் அன்பின் காரணமாய் அதிகமாய் அழகு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றுச் சொல்வதே சாலச் சிறந்தது.
குலா மாஸ்டர் உடைகள் ஒவ்வொன்றும் அழகின் அற்புதமான வடிவமைப்பு கொண்டிருக்கும். இந்த ஞாயிறு அன்று கழுத்துக்கு கீழே ஒரு அழகிய கட் செய்த உடை அணிந்திருப்பார் பாருங்கள், அதைப் பார்த்த மடோனாவிற்கு மயக்கமே வந்து விட்டதாம். அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இருந்து உடனடியாக ஒரு மெயில் வந்தது. அதில் குலா மாஸ்டரை ஆடை வடிவமைப்பின் அற்புதமான கலைஞர் என்று அம்மெயில் விளித்திருந்தது. கிஷ்பூவும், குமீதாவும் எவ்வளவு சிவப்பாக இருப்பினும் குலா மாஸ்டரின் அழகுக்கு இணையாய் அவர்களிடத்தே எதையும் காட்டவே முடியாது.
தானாட மயிலாடவில் நடனமிடும் நடன மாதுகள் ஜோடி ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க பரவசமாய் தென்படுகின்றார்கள். நான் ஏன் நடன மாதுகள் என்றுச் சொல்கிறேன் என்றால் குலா மாஸ்டர் ஆண் நடனக்காரர்களைக் கூட வாடா போடா என்றழைத்து, பெண்ணுரிமையை நிலை நாட்டி, ஆணைக்கூட பெண்ணாய் மாற்றி ஆட விடும் அற்புத சித்திகள் பல கொண்டிருப்பதால் தான் மாதுகள் என்றுச் சொல்கிறேன்.
இப்படியான கவர்ச்சியும், கலை நோக்கமும் கொண்டிருக்கும் தானாட மயிலாட நிகழ்ச்சியை எந்த இடர் வறினும் விடாது தொடர்ந்து நடத்தி வரும் தமிழக பெண்களில் தலை சிறந்த நடன கலா மஞ்சரி, நடன பூசன பூஞ்சாதிபதி, கலா சேகர, நாட்டிய தேவத, பூர்வாக புண்ணியாதபதி மாண்புமிகு குலா மாஸ்டரை நாம் ஒரு பேரழகி என்று அழைப்பது எந்த விதத்தில் தவறாகும்?
- குஷியுடன் குஞ்சாமணி
அனாதி பதிப்பித்தது. 




பஞ்சு : பாகிஸ்தானில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்காக இந்தியா வந்திருக்கின்றாராம். பார்த்தியா குஞ்சு ?
