குஞ்சின் பார்வையில் “கொலவெறி”

நவம்பர் 25, 2011

சேரில் இருந்து எழும்பிய குஞ்சு, எதிரே இருந்த போட்டோவைப் பார்த்ததும் அப்படியே உட்கார்ந்து கொண்டான். எழுந்தவன் வேலை முடிக்காமல் விடமாட்டானே, இது என்னடா கர்மம்? செவத்துல வச்சு தேய்க்கிறாப்பல என்று நினைத்த குஞ்சு அந்தப் போட்டோவை கொலவெறி பார்வையில் பார்த்தான்.

”ஏண்டா குஞ்சு, நல்லாத்தானேடா இருக்கு” என்றால், ”போடா ஒம்போது” என்றான்.  ஏம்பா வாசகா, உனக்கு அப்படியா இருக்கு?

தனுஷ் ஏன் கொலவெறி கொலவெறின்னுப் பாடினாருன்னு கேட்டா, பக்கத்துல்ல ஐஸ்வர்யாவை வச்சுக்கிட்டு வேறென்ன கான கீதமா பாடுவாருன்னு கேக்குறான் குஞ்சு.

அவனவனுக்குத்தானே தெரியும் காதல், கலைப்பு, குத்து, படுக்கையெல்லாம்னு சொம்பு தூக்கி தலைகீழா நின்னு பேசினான். யார்ரா இவன்னு கேட்டா, நாந்தாண்டா உங்கப்பன், ஊருக்கெல்லாம் சித்தன் என்கிறான் அந்தச் சொம்பு தூக்கி.

காசைப் பாத்தா, கஞ்சியைப் பத்திய கவலை என்னடான்னு கேட்கிறான் பினுஷ்சூ. காசேதான் சாமாண்டா என்கிறான் கூடச் சேர்ந்து.

கொலவெறி எதுக்கு வரனும்? அதான் வந்துடுச்சே பின்னே என்னாங்கிறானுவ மார்கெட்டுல. பினுஷ் பாடுன பாட்டைக் கேட்டா, சிரி சிரின்னு சிரிக்கிறானுவ.

வறட்டுப் பிரதேசத்துல புல்லு மொளச்சா எப்படி இருக்கும்னு கேட்டா, அதுக்கு ஏழாம் அறிவுப் பார்க்கனும்டாங்கிறானுவ. ஏழாம் அறிவு ஏதோ ஒரு கேம் அதான் வீடியோ கேம் அதைப் பார்த்து அப்படியே டப்பா அடித்தானாம் அந்த முள்ளா. பேப்பரில கூட வந்துச்சே படிக்கலையான்னு கேட்டா, நானென்ன எப்போ பார்த்தாலும் கவுச்சி வாடையடிக்கும் பேப்பரையே உத்து உத்தா பாப்பேன்னு கேட்கிறான் முள்ளா.

பயபுள்ளே, கொலவெறி கொலவெறின்னு பாடி, அனாதி பிளாக்குல கொலவெறி ஏற்படுத்தும் பதிவ எழுத வச்சுட்டானேன்னு நினைக்கிற குஞ்சின் ரசிக மகாப் பெருமக்களே, இது குஞ்சு எழுதியது. வாக்கியங்களை மாற்றி மாற்றிப் போட்டுப் படித்துப் பாருங்கள். புரியும்.

இது ஒரு அட்சரசுத்தமான இலக்கியப் பதிவு.

- குஞ்சு


குத்தியானந்தா, குஞ்சிதாவிற்குச் சவால்

ஜூலை 15, 2011

குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.

அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.

பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?

பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.

கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?

என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?

பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.

ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.

இப்படிக்கு

உங்களின் மனம் கவர்

குஞ்சாமணி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இறைவனைப் பாருங்கள் !

மே 27, 2011

அன்பு நண்பர்களே,

பஞ்சு ஆரம்பித்து விட்டான். கடந்த மாதம் வரையிலும் திமுக அரசினை திட்டிக்கொண்டிருந்தான். இப்போது அதிமுக அரசினைத் திட்டிக் கொண்டிருக்கிறான். பஞ்சு கல்வியை பொதுவுடைமையாக்கும் வேலையைப் பாருடா. எதிர்கால சந்ததிக்கு இது ஒன்றே உருப்படியாய் நீ செய்யும் காரியமாக இருக்கும். அரசியல்வாதியைத் திட்டி என்ன பலனைப் பார்க்கப் போகின்றாய் பஞ்சு?

வேசித்தனம் செய்வதை அரசியல் என்றுச் சொல்லி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் தேர்தலின் போது கூட்டணி சேரும் போது கட்சியின் தலைவர்கள் சொல்வார்களே ஒரு வார்த்தை “ கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று. இதைத் தானடா நான் வேசித்தனம் என்கிறேன்.

நண்பர்களே, இந்தப் பஞ்சுப் பயல் இருக்கின்றானே இவனுக்கு மூக்கு மேலே கோபம் வரும்.  அடக்குடா அடக்குடான்னு சொல்லிப் பார்த்தேன். கேட்க மாட்டேன் என்கிறான்.  எனது தோழி ஒருத்தி இருக்கிறாள். அவளிடம் சொல்லித்தான் இவனையெல்லாம் சரி செய்ய வேண்டும். தற்போது ஆஸ்ட்ரேலியாச் சென்றிருக்கிறாள். வரும் போது பஞ்சு சின்னா பின்னமாகப் போகின்றது. அந்தக் கதையை மேட்டர் நடந்த பிறகு எழுதுகிறேன். பஞ்சு புள்ளி வைத்து விட்டேனடா, கோலம் நிச்சயம். முடிந்தால் இப்போதே காசிப் பக்கமாய் ஓடிப் போய் விடு ராஸ்கல்.

உங்களுக்கெல்லாம் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசைப்படாதவர்கள் இந்தப் பக்கமாய் வந்து விட வேண்டாம். ஓடிப் போய் ”சாரு நிவேதிதாவின்” பிளாக்கைப் படித்துக் கொண்டிருங்கள்.

கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றால் நான் சொல்லும் சில முன்னேற்பாடுகளை நீங்கள் செய்தாக வேண்டும். முதலில் நீங்கள் இருக்கும் அறைக் கதவினை அடைத்து விடுங்கள். லைவ்வில் ஸ்பீக்கரை செட் செய்யுங்கள். 75 அளவுக்கு ஸ்பீக்கரின் சத்தத்தை அதிகப்படுத்துங்கள். செல்போனை அணைத்து விடுங்கள்(ஹீ…ஹீ.. வந்து விடுகிறது, என்ன செய்ய?).

இதோ கீழே இருக்கும் பாட்டினை மட்டும் பாருங்கள். கடவுள் இரண்டு இடங்களில் தரிசனம் தருவதை நிச்சயம் உணருவீர்கள்.

உங்களின் பிரிய குஞ்சாமணி


வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ஏன்? (18+)

April 6, 2011

அனாதியும் அரசியல் பிளாக் எழுத ஆரம்பித்து விட்டான். ஆனால் என்னால் மட்டும் திருந்தவே முடியவில்லை. அதனாலென்ன ! அனாதி பிளாக்கில் அடிக்கடி சில குட்டிகள் படத்தைப் போடுகின்றேனே(ஹீஹீ….) அதற்காவது உபயோகமாய் இருக்கின்றேனே அது போதாதா?

நாற்பது வயதுக்கு மேலே அவனவனுக்கு நுரை தள்ளி விடுகிறது. ஆனால் சில கிழட்டு மனிதர்கள் சின்ன வயசு குட்டிகளுடன் குஜாலாய் திரிகின்றார்களே எப்படி என்று யோசித்தேன். அது எப்படி சின்ன வயசுக்குட்டிகள் கிழட்டுப் பயல்களாய் பார்த்து காதலிக்கின்றார்களே என்ற எனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அந்தக் கிழட்டு ஆசாமிகள் எல்லாம் வாயாலே பிழைத்துக் கொள்கிறான்கள் என்பதைக் கண்டு கொண்டேன். இதற்கு மேலே விரிவாக எழுத நானென்ன சரோஜாதேவி எழுத்தாளரா? என்ன எழுதி இருக்கிறேன் என்று புரியாதவர்கள் பின்னூட்டம் போடக்கூட தகுதியில்லாதவர்கள். இருப்பினும் சந்தேகத்தை பின்னூட்டமாய் போடுங்கள். பதிலாவது எழுதித் தொலைக்கிறேன். ச்சே… இந்தப் பொழப்புக்கு பேசாமல் அனுஸ்காவின் பாவாடையாகவாவது பிறந்திருக்கலாம். சேசே… என்ன கொடுமையான வாழ்க்கை இது.

சில வாயுள்ள பிள்ளைகளின் படங்களும் அனுஸ்காவின் பாவாடையும் கீழே

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்களின் பிரிய குஞ்சாமணி

ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுப்பார்களா என்று குடிகாரன் தன் குடும்பத்தோடு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறான். பத்து ஓட்டுத்தேவைப்படுபவர்கள் குடிகாரனை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்யை லம்பாக அழ வேண்டும். அழகிரி வகையறாக்கள் குடிகாரனை அணுகும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

 

 

 


ஹரியுடன் நான் அபத்தம்

பெப்ரவரி 16, 2011

ஹரிஹரன் தன் சாயம் வெளுத்து, இசையுலகில் அம்மணமாய் நிற்கின்றார். ஒரு டிவி புரோகிராமை உலகம் முழுவதும் பார்க்கின்றார்கள் என்ற சிறு கவனிப்பு ஏதுமின்றி, பாடவே தெரியாதவர்களை தேர்ந்தெடுத்து, இந்த புரோகிராம் தேவைச்சார்புடையதாக இருப்பதை வெளிக்காட்டினார் ஹரிஹரன். இயக்குனருக்கு வேண்டப்பட்ட வகையிலோ அல்லது தனக்கு வேண்டப்பட்ட வகையிலோ தேர்வுகளை நடத்திய ஹரிஹரனை இசை உலக பிரம்மாக்கள் என்றைக்குமே மன்னிக்கவே மாட்டார்கள். வாசகர்கள் இது பற்றிய கண்டனங்களை கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

http://maximummedia.co.in
CONTACT US
MAXIMUM MEDIA
email : info@maximummedia.co.in

ஹரியுடன் நான் தொடர்பான பதிவுகளை கீழே படிக்கலாம்.

பதிவு 1 (ஹரியுடன் நான் திமிர்த்தனம்)

பதிவு 2 (ஹரியுடன் நான் விகடனில்)

பதிவு 3 (ஹரியுடன் நான் வாசகரின் பின்னூட்டம்)

பதிவு 4 (தொடர்ச்சி : ஹரியுடன் நான் திமிர்த்தனம் – ரமேஷ் )

பதிவு 5 (ஹரியுடன் நான் நல்ல ந(டு)வர்கள்)

முத்துக்காளையின் பேட்டியை நேற்றைக்கு ஜீ டிவியில் காண நேர்ந்தது. சாப்பாடு மீது பிரியம் இல்லாமையை கண்ணீர் முட்ட தெரிவித்தார். வாழ்க்கையில் துன்பப்பட்டவர்கள் அனைவருக்கும் அவரின் அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் விதியின் கைகளில் சிக்கும் மனிதனின் எதிர்காலம், கால ஓட்டத்தின் இடையே சில கொம்புகளை நம்மை நோக்கி நீட்டும். அப்போது அக்கொம்புகளைப் பிடிக்கும் எண்ணமிருக்குமே தவிர உடல், உணவு பற்றிய பிரக்ஞைகள் இல்லாமல் போய் விடும். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு தேடிச் செல்லுகையில் அங்கு போ, இங்கு போ என்று சொல்லுவார்களாம். சினிமாவில் இயக்குனர், ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு வகை சாப்பாடும், பிறருக்கு ஒரு வகை சாப்பாடும், அடிமட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வகை சாப்பாடும் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சாப்பாடு கொடுக்காமல், இப்படி அல்லலுற வைப்பார்கள் என்று அவர் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். எம்ஜியார் இறந்து விட்டார் என்று எனது சினிமா நண்பர் தெரிவித்தார்.

முதல்வர் கருணா நிதி தற்போது அறுவடையை ஆரம்பித்திருக்கின்றார் என்று செய்திகள் சொல்கின்றன. காங்கிரஸ் திமுகவை அடியோடு முடித்துக் கட்ட முடிவெடுத்து விட்டார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் எதுவும் நம்பும்படியாக இல்லை என்பதுதான் இதில் விசேஷம். முதல்வர் மஞ்சள் துண்டை நம்பினார் என்றால் விதி விளையாடுவது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். மொத்தத்தில் பார்த்தோமென்றால் இவரால் பயனடைந்தவர்களுக்கு எல்லாம் பாவங்கள் இல்லை என்று முன்னோர்கள் நூல்களில் சொல்லி இருக்கின்றார்கள். மொத்த பிரதிபலனும் இனி படையெடுத்து வரிசையாய் வாசலில் நிற்கும் போலும்.

- குஞ்சாமணி

 


அண்டங்காக்கை கொண்டைக்காரி விரைவில்

ஜனவரி 2, 2011

குஞ்சாமணியின் அடுத்த இலக்கிய படைப்பாக மலர விருக்கும் ‘அண்டங்காக்கை கொண்டைக்காரி’ விரைவில் பதிவேற்றப்பட இருக்கிறது.

தமிழகத்தில் ஆள்வோர் சரியில்லை என்பதை பல நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கட்டியம் கூறி வருகின்றன. கோடீஸ்வரர்களுக்கு சட்டம், ஒழுங்கு இவைகள் வெற்றுக் காகிதங்களாய் தெரியும் அளவுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது.

இதே ஒழுங்கு இலக்கியத்திலும் பரிமளிக்கின்றன. இலக்கிய உலகில் சட்டாம்பிள்ளையாக மாற இரண்டு அணிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. பிற சைலண்ட் படைப்பாளிகள் தங்களின் அரிய பணியை செவ்வனே செய்து வருகின்றார்கள். அவர்களைப் பற்றியது இல்லை இந்தப் பதிவு. இது நானும் இலக்கியவாதி என்றுச் சொல்லிக் கொண்டு திரியும் ‘காலி பெருங்காய டப்பாக்களைப் ‘ பற்றியது.

விரைவில் ரகளையான ‘குஞ்சின்’ இலக்கியப் பதிவுகள் தொடர்ந்து வரும். வழமை போல ஆதரவு தெரிவித்து நல்கவும்.

-அனாதியும் அவனது நண்பர்கள் குழாமும்


ஹரியுடன் நான் – நல்ல ந(டு)வர்கள்

நவம்பர் 27, 2010

நமது பிளாக்கில் பஞ்சரு பலராமனின் ”ஹரியுடன் நான் திமிர்த்தனம்” என்ற பதிவைப் படித்து விட்டு வாரா வாரம் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. பாலா எழுதியது போல நடுவர்கள் நடந்து கொண்டாலும், பாடகர்களின் குறையினை சுட்டி, பாடுவதை மெருகேற்றி வந்ததை அறிந்தேன். ஆகையால் நடுவர்களின் மரியாதை இன்மை என்பது பற்றி பெரிதாக கருத வேண்டியதில்லை என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நேற்றைய நிகழ்ச்சியைக் கண்ட போது எனக்குள் தோன்றிய வெறுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. திறமையை விட அழகு முக்கியமானதாகிப் போனது.

இசையுலகின் முன்னே ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் மூவரும் ஆடை அவிழ்ந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கின்றார்கள். இது போல வெட்கம் கெட்ட செயலை ஏன் செய்கின்றார்கள் இவர்கள் என்பதை வார்த்தையால் சொல்லவே நா கூசுகிறது. இப்பிளாக்கை ரசித்துப் படிப்பது எண்ணற்ற பெண்கள் என்பதால் அவ்வார்த்தைகளை எழுதவே கூசுகிறது. அந்தளவுக்கு கோபம் வருகிறது.

அயோக்கிய சிகாமணிகள் நீண்ட நாட்கள் வேஷம் போட முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியில் இம்மூவரின் நடத்தையை வைத்து அறிந்து கொள்ளலாம்.

லட்சுமி என்ற பாடகியின் பாடலைக் கேளுங்கள். இப்பாடலுக்கு இந்த நடுவர்கள் வழங்கிய மார்க்குகளையும் பாருங்கள். கீச்சுக் குரலில் கத்திய பெண்ணுக்கு ஏன் இவர்கள் இவ்வளவு அதிக மார்க்குகளை வழங்குகினார்கள் என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். எனக்கு வரும் கோபத்தில் மூவரையும் வார்த்தைகளால் நார் நாராய் கிழித்து தொங்க விட்டு விடுவேன். வார்த்தைகள் மிகக் கடுமையாய் வெளி வரத் துடித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண ஆர்கெஸ்ட்ரா மேடைப்பாடகியின் தரத்தை விடவும் படு கேவலமாய் பாடிய லட்சுமிக்கு இவர்கள் ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?  திறமையை விட அந்தப் பெண்ணின் அழகு ந(டு)வர்கள் மூவரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. அவனவன் உயிரை விட்டு சாதகம் செய்து தன்னை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கையில் கழுதைக் குரலில் கத்திய லட்சுமிக்கு இந்த மூன்று ந(டு)வர்களும் ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் லட்சுமியின் அழகை விட வேறு எதைச் சொல்ல முடியும்?

நல்ல திறமைசாலிகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட முயலும் தயாரிப்பாளர் எண்ணத்தை இம்மூவரும் சொல்லி வைத்தாற்போல கேவலப்படுத்துகிறார்கள். பேசாமல் அந்தப் பெண்ணுக்கே முதல் பரிசை வழங்கி விடலாமே? ஏன் மற்ற திறமைசாலிகளை கேவலப்படுத்துகின்றீர்கள்?

ஹரியுடன் நான் படு கேவலமான இசையுலகத்தைக் கேவலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி.

சரி ஏன் அனாதி இந்தளவுக்கு அனாதி கோபப்பட என்ன காரணம் என்பதை நீங்களே கீழ்க்கண்ட இணைப்பை கிளிக்கி புரிந்து கொள்ளவும்.

நடுவர்கள் நன்றாகவே ந(டு) நிலைமையாய் நடந்து கொள்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க நிகழ்ச்சியும்.

- அனாதி

 

 

 

 

 


தொட்டுக்கொள்ள 24.11.2010

நவம்பர் 24, 2010

முதல்வர் கருணா நிதியும், முன்னாள் மந்திரி ராஜாவும் ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அனைத்தும் விதிப்படிதான் நடந்தது என்கிறார்கள். ஆனால் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணையை வேண்டாமென்கின்றார்கள். ஏனோ??  கேக்குறவன் கேனப்பயல்கள் என்றால் கேழ்வரகில் கலர் டிவி வருதுன்னு சொல்லுவாங்க போல.

நயன் தாரா / பிரபுதேவா – மூன்றாவது சம்மனும் அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.  அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதா? இந்து மதக் கோட்பாடுகளை முன்னிறுத்தும் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விஷயத்தில் கண்டு கொள்ளாதது ஏனோ???

பாலசந்தர் ரஜினியிடம் நீ இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்றுச் சொன்னார் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. எதில் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எந்திரன் எந்திரிக்காமல் குப்புற விழுந்தது. பாலச்சந்தருக்கு ரஜினி மேல் என்ன கோபமோ.

கல்மாடி மீது 450 கோடி ரூபாய் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இன்னும் என்னென்ன கிளம்புமோ? காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சியாய் மாறி சிரிப்பாய் சிரிக்கிறது.

சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெறுகிறார் பெரியார், அண்ணா வழியில் வருகின்ற எதிர்கால முதலமைச்சர் திரு ஸ்டாலின். நாத்திகம் ஆத்தீகமாயிற்று. இனி ஆரிய எதிர்ப்பு எடுபடாது. தலித் பிரச்சினை வேண்டுமானால் வேலைக்காகலாம்.

பிரசார் பாரதி மீது ஊழல் குற்றச்சாட்டு. ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸின் அடுத்த ஊழல் காட்சிகள் ஆரம்பம்.

நாடாளுமன்றத்தில் இன்னும் பிரச்சினை தீரவில்லை. ஸ்பெக்டரம் விசாரணை நிச்சயம் முடக்கப்படும். க்வாட்ரோச்சி வழக்கு போல, இதுவும் காணாமலே போய் விடும். காங்கிரஸ் இந்தியாவை அடிக்கும் கொள்ளைக்கு எல்லையே இல்லை என்றாகி விட்டது.

என் பெயர் மீனாட்சி விஜய் டிவி தொடரில் நடிக்கும் பழ கருப்பையா, துக்ளக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டார். காசே தான் கடவுளடா. அது கடவுளுக்கும் பொருந்துமடா என்கிறார் போலும். மீனாட்சியை கடத்தி விட்டான் வில்லன். தொங்கு மீசை ஹீரோ மனசு வலிக்கிறது என்று பேசுகிறார். மிஸ்டர் ஜெரால்டு உங்களுக்கு டைரக்‌ஷன் தெரியவில்லை என்றால் தெரிந்த ஆட்களிடம் கொடுத்து விடுங்களேன். அழகான கதையை ஏன் இப்படிக் கொத்துக்கறி ஆக்கி வருகின்றீர்கள்???

விஜய் டிவி சிங்கர்ஸ்ஸில் வரும் காம்பியருக்கு “ முக்கி முனகி” பட்டத்தினை அனாதி நண்பர்கள் குழாம் வழங்கிச் சிறப்பிக்கிறது.

மன்மதன் அம்பு படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சொன்னது. இப்படம் ஒரு கப்பலில் சூட் செய்யப்படுகிறது. திரிஷாவைக் காதலிப்பது கமலா? மாதவனா என்பது தான் ஒன்லைன் கதையாம். திரிஷாவைப் பார்த்தாலே வெற்றுச் சுவர் தான் நினைவுக்கு வருகிறது. கிழவியைக் கமல் தான் காதலிப்பார். இதில் என்ன சஸ்பென்ஸ் இருக்கிறது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் கதையின் சஸ்பென்ஸை உடைத்து விட்டார்.  கமல் ஜோக்கராகி விட்டார்.

இப்போதைக்கு இது போதும். நாளை குஞ்சாமணியின் குட்டியுடன் கும்மாளம் பதிவு வெளி வருகிறது. வாசகர்கள் தவறாமல் படித்து விடவும்.

- அனாதி


குஞ்சுவின் அயிட்டம் சாங் – இரண்டு

செப்டம்பர் 23, 2010

ஒரு முறை மாதுரி தீக்சித்தைப் பார்க்க மும்பைக்குச் சென்றிருந்தேன். எனது நண்பரின் ஹோட்டில் தங்கியிருந்தேன். என் நண்பர் பிரபல குட்கா தயாரிப்பாளர். வயதானவர். அவரின் பியே இருக்கின்றாளே அவளைப் பார்த்ததும், கிறுகிறுத்துப் போய் விட்டேன். அடேயப்பா என்னா ஒரு ட்ரெஸ் கோடு. சாதிக்க விரும்புவர்கள் என்றைக்குள் இளமையாய் இருக்க வேண்டும் குஞ்சு என்பார்.  அவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் தன்னை அவ்வாறு வைத்துக் கொள்வதுதான். வாரம் தோறும் டிஸ்கொதே, கிளப்புகள் என்று கிளம்பி விடுவார். இப்படியெல்லாம் எழுதினால் கலாச்சாரம் அது இதுவென்று விடுதலையும், சுதந்திரம், அரச்சான் ஆரம்பித்து விடுவார்கள்.

எனக்குப் பிடித்த அடுத்த அயிட்டம் சாங் இது. அனில் கபூர் எனக்குப் பிடித்த பிளே பாய் நடிகர். மாதுரியின் ஆரம்ப பெருமூச்சில் எரிந்தே போய் விட்டேன். பார்த்து ரசியுங்கள்.

- எரிந்து கொண்டிருக்கும் உங்கள் குஞ்சு.


குஞ்சுவின் அயிட்டம் சாங் – ஒன்று

செப்டம்பர் 23, 2010

உங்களது மனம் கவர்ந்த குஞ்சு, தன் வாசகர்களுக்கு தனக்குப் பிடித்த அயிட்டம் சாங்குகளை டெடிகேட் செய்கிறான். வாசக உள்ளங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறான் குஞ்சு.

குஞ்சின் ரசிகத்தன்மை பெரும்பாலானோரின் ரசிகத்தன்மையோடு ஒத்துபோவதால் தான், தனக்குப் பிடித்த அயிட்டம் சாங்குகளைப் பற்றி எழுதுகிறான். பார்த்து விட்டு, உங்கள் குஞ்சை அதாவது என் ரசனையைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்து புல்லரித்து விடுங்கள் போதும்.

இப்போது இந்த அயிட்டம் சாங்கைப் பற்றிய ஒரு பார்வை.

சின்னஞ்சிறு உதடுகள் கொண்ட பெண்கள் தான் மேட்டருக்கு சரியான ஒத்துழைப்பைத் தருவார்கள் என்று அனாதி சொல்வான். அவனுக்கு ஆயிரம் கேர்ள் பிரண்டுகள். ஆனால் எனக்கோ ஒன்றோ இரண்டோதான் இருக்கின்றது. குத்து திவ்யா எனக்குப் பிடித்த நடிகை. ஏனென்றால் அவர் நடித்த படம் பெயர் குத்து. குத்து என்றாலும் சரியான குத்து போடுவார் இந்த ரம்யா. இந்தப் பாடலைப் பார்த்து விட்டு, இரவு முழுவதும் திவ்யாவின் நினைப்பிலேயே ஓடி விட்டது.

ரம்யாவின் முக பாவனைகள் இருக்கிறதே அது தான் மன்மதனின் ஆயிரம் அம்புகள் போலும். உடல் வளைவுகள் இருக்கிறதே அது மனிதனைக் கொல்லும் அணுகுண்டை விட வீரியம் மிக்கது. ரம்யாவை கட்டிக்கப்போறவன் செத்தான். கிட்டக்கப் போகும் போதே கிறுகிறுத்துப் போய் விடுவான். அப்புறம் எங்கே மேட்டரு நடக்கப்போவுது. தனுஷைப் பாருங்கள். ஒரு மாதிரியாய் இருக்கிறார் அல்லவா? ரம்யாவைத் தொட்டதுமே ஒரு மாதிரியாகி விட்டார் போல. தனுஷ் உங்கப்பா ரொம்ப நல்லவர். எங்கனுப்பனுவனும் தான் இருக்கிறாங்கோ? எவ கூடவாவது பேசியதை பார்த்தா, வீட்டுல பொங்கல வச்சுட்டுதான் மறு வேலை பார்ப்பாரு எங்கப்பா.

அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும். ரம்யா இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்படிப் புலம்ப விட்டுடீங்களே? அடுத்த அயிட்டம் சாங் பட வரிசை விரைவில். ராத்திரி விசிட்டுகள் அடிக்கடி இருப்பதால் மொத்தமாக எழுதுகிறேன். அதுவரை அயிட்டம் சாங்குகளை பார்த்துக் கொண்டு காலம் தள்ளுங்கள் வாசகர்களே.

- புலம்பலுடன் குஞ்சு


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers