நித்தியானந்தா மதுரை ஆதீனம் பற்றி

மே 23, 2012

சார்,

நித்தியானந்தா, மதுரை ஆதீனம் பற்றி உங்களின் கருத்து என்ன? வித்தியாசமான பார்வையில் பதிலை எதிர்பார்க்கிறேன்.- கல்பனா

கல்பனா, கேள்விக்கு நன்றி.

முதலில் தற்போது இருக்கும் மதுரை ஆதீனம் திரு அருணகிரி நாதர் பற்றிப் பார்க்கலாம். தற்போது இருக்கும் அருணாசலம் என்கிற ஆதீனம் ஆரம்பகாலத்தில் திமுகவின் இளைஞரணியில் ஏதோ ஒரு பதவியில் இருந்தார். திமுக ஆட்சிக் காலத்தில் சட்ட அமைச்சர் எஸ்.மாதவன் திட்டமிடலில், ஆதீனங்களுக்குள் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் நன்மை என்பதால் இவர் ஏதோ ஒரு பதவியில் மதுரை ஆதீனத்திற்குள் சென்றார். அதைத் தொடர்ந்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று, திமுக கட்சியின் ஆதரவில் தற்போதைய 292 ஆதீனமான அருணகிரி பதவியில் அமர்ந்தார். ஆக இவரின் நியமனமே கட்சியின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதால் இவர் ஆதீனத்திற்கு பொறுத்தமில்லாதவர் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல ஏகப்பட்ட சினிமா விழாக்களில், அரசியல் களங்களில் மேடைகளில் நேரத்திற்கு தக்கவாறு இவர் பேசிக் கொண்டிருந்தார். அதை இவ்வுலகம் கண்டிருக்கிறது. தகுதியற்ற ஒருவர்  ஆன்மீகப் பதவிக்கு வந்தால் என்னென்ன செய்வாரோ அதையெல்லாம் இவர் செய்து கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது அக்மார்க் ஆன்மீக கார்ப்பொரேட் கம்பெனி விஷயமாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆன்மீக பிசினஸ் செய்யும் நித்தியானந்தா ஒரு சிறந்த நிர்வாகி. இவருக்கும் மதுரை ஆதீனத்திற்கும் எந்த வித சம்பந்தமும் ஆன்மீக ரீதியில் இல்லவே இல்லை. மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட சொத்துக்களாய் மாற்றி அதை வைத்து மேலும் மேலும் பெரிய கார்ப்பொரேட் ஆன்மீக நிறுவனத்தை உருவாக்க முனைகிறார் நித்தியானந்தா. இவருக்கு மக்கள் மீதெல்லாம் அன்பும் இல்லை, அபிமானமும் இல்லை. நித்தியானந்தாவைச் சந்திக்க வேண்டுமெனில் ஒன்று அவர் பணக்காரராக இருக்க வேண்டும், இல்லை அவர் சமூகத்தின் பிரபலமானவராக இருத்தல் வேண்டும். சாதாரண மக்களும் சந்திக்கலாம்.சாதாரண மக்கள் பொதுத்தொண்டு, சேவை என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டு காசில்லாத வேலைக்காரர்களாக ஆக்கப்படுவார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மீக மடங்களிலும், மத்களிலும், ஆதீனங்களிலும், ஆசிரமங்களிலும் இதைத்தான் செய்து வருகின்றார்கள்.

ரஞ்சிதாவால் நித்தியானந்தா பிரச்சினை ஆனது பெரிய அரசியல் மர்மம். பாலியல் வழக்கு பற்றி ஒரே ஒரு வார்த்தை என்னவென்றால் ஆணும் பெண்ணும் ஓரிடத்தில் இருந்தால் பாலியல் எண்ணங்கள் வராமல் என்ன செய்யும்? நூறாண்டுகாலம் தவம் இயற்றியவர்களே பெண்ணின் மடியில் விழுந்த வரலாற்றுக் கதைகளைக் கொண்டது இந்து மதம். காமத்தின் முன்னால் நித்தியானந்தாவின் யோகமும்,தவமும் தூசு. ரஞ்சிதாவிற்கும் நித்தியாந்தாவிற்கு உடலுறவு இருந்தால் யாருக்கு என்ன பிரச்சினை என்று எனக்குப் புரியவே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. இவர் மீதான பாலியல் வழக்கு கோர்ட்டில் நிற்கவே நிற்காது. ஏனென்றால் வழக்குத் தொடுத்தவர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்கிறபோது பொதுவாய் தண்டனை கொடுக்க இந்திய அரசியல் சட்ட விதிகளில் இடம் இல்லை.

காலத்தின் போக்கில் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பெரிய தலைவர்கள் எல்லாம் காணாமலே போய் விடுவர். அதே போல பலரின் வயிற்றெரிச்சலில் விழும் நித்தியானந்தாவும், யாருக்கும் உபயோகமே படாத ஆதீனமும் கால வெள்ளத்தின் போக்கில் அழிந்து போகும் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

கல்பனா, இது போன்ற ஆன்மீக அரசியல்வியாதிகள் பற்றியோ, மடங்களைப் பற்றியோ சாதாரண மக்களான நாம் பேசுவதால் நன்மை ஏதும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை.

- அனாதி


இன்பரசத்தில் முதல் இன்பம் அறிமுகம்

பெப்ரவரி 10, 2012

என்னை ப்ராடு என்று குறிப்பிட்ட பிரச்சனா என்ற வாசகருக்கு நன்றியோ நன்றி. கருணாநிதியை திட்டாதவர்கள் பாவம் செய்தவர்கள், இத்தனை பேர் திட்டி அவர் என்ன கெட்டா போய் விட்டார். பாராட்டத்தான் முடியவில்லை, திட்டவாவது செய்தால் தான் நான் மகிழ்வேன் (அவர் பெயர் எழுதினாலே இப்படியெல்லாம் வார்த்தை வருகிறது).

அதுமட்டுமல்ல நானென்ன சாரு மாதிரி விமர்சனத்தை ஏற்காமல் எதிர்த்துப் பேசுவேன் என்றா நினைக்கின்றீர்கள்? மேலும் பிறருக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைப் பற்றி வயிறெரிந்து பேசுவேன் என்றா நினைத்தீர்கள். நிச்சயம் இல்லவே இல்லை.

நானே ஒத்துக் கொள்ளுகிறேன், “ நானொரு அக்மார்க் நல்லவன்”. என்னைப் போல நல்லவனை இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கவே முடியாது. நான் நடந்து செல்லும் பாதையின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசினீர்கள் என்றால் பூலோக சொர்க்கமே உங்களுக்கு கிடைக்கும். அந்தளவுக்கு நான் நல்லவன் (டேய் குஞ்சு… என்னடா என்னடா இது? : மனச்சாட்சியின் குரல்) அய்யய்யோ தவறாக எழுதி விட்டேன் நல்லவன் என்றச் சொல்லை அக்மார்க் அயோக்கியன் என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சோ இனிமேல் (இது ஆகையால் என்பதைக் குறிக்கும் சோ) நீங்கள் என்னவேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. மேலும் ஒன்று நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்ளவில்லை என்றால் கொடுக்க விரும்பிய பொருள் உங்களிடம் தானே இருக்கும்? ஆகவே… வேண்டாம் எனக்குள் அழுது விடுவேன் இப்படித் தொடர்ந்து எழுதினால்.

இனி இன்பரசம் பற்றிப் பார்ப்போம்.

அவன் ஒரு மாபெரும் போர் வீரன். அவன் வாளில் பட்டு உருண்டோடிய தலைகள் கோடானு கோடி. அவன் வந்தானென்றால் மன்னரும் எழுந்து நின்று தலை குனியும் அளவுக்கு வீரன். உலகையே புரட்டி வரும் காற்றுக் கூட அவன் அருகில் நெருங்கப் பயப்பட்டு அந்தப்பக்கமாய் ஓடி ஒளிந்து விடும். அப்பேர்ப்பட்ட மாவீரனுக்கு போர், சண்டைகளில் வெறுப்பு வந்து விட அவன் மனது சொர்க்கம், நரகம் என்பது பற்றி உள் விசாரணை செய்து கொண்டிருந்தது.

குதிரையின் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தவன் கண்களில் ஒரு பிக்கு தென்பட்டார். ஏனோ அவரைப் பார்த்ததும் பேச வேண்டுமென தோன்றியதால் குதிரையிலிருந்து இறங்கினான்.

”சொர்க்கம், நரகம் போக வாசல் எங்கிருக்கிறது என்பது பற்றி எனக்குச் சொல்லுங்கள்?” என்றான் மாவீரன்.

“உன்னைப் பார்த்தால் வீரனாக தெரியவில்லையே, பிச்சைக்காரன் போலிருக்கிறாய்?” “ என்றார் பிக்கு.

கோபம் கொண்டவன் அவரை வெட்ட வாளை உருவ, “அட அட்டைக்கத்தியை வைத்தா என்னைக் கொல்லப்போகின்றாய்?” என்று பிக்கு நக்கல் செய்ய, கோபத்தின் உச்சிக்கே சென்றான் மாவீரன். வாளால் அவரைக் கொல்ல நெருங்கும் போது,

”இப்போது பார்த்தாயா நரகத்தின் கதவு உனக்கு திறக்கப் போவதை” என்றார் பிக்கு.

சட்டென்று உள் மனது உடைய வாளைக் கீழே போட்டான் மாவீரன். அப்போதும்  பிக்கு அவனைப் பார்த்துச் சொன்னார் “ இப்போது உனக்குச் சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது”.

அன்பு நண்பர்களே,இக்கதையை நீங்கள் படித்து முடித்த போது நிச்சயம் உங்களுக்குள் ஒன்று அது ஏதோ ஒன்று தோன்றியிருக்கும். அது தான் நான் தலைப்பிட்ட “இன்பரசம்”. அடுத்த அடுத்த இன்ப ரசங்கள் நம் தளத்தில் பெருக வேண்டும் என ஆவல்.

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

குஞ்சாமணி


இன்பரசம் – குஞ்சாமணியின் புதிய பகுதி

பெப்ரவரி 9, 2012

அன்பு நண்பர்களே,

விரைவில் தமிழகத்தின் தமிழர்கள் அகதிகளாய் மாற இருக்கின்றார்கள். வேறு வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நிலையில், காய்ந்து போன வறட்டு எலும்புகளாய் குத்தும் நினைவுகளில் குளிர்ச்சி பொறுந்திய பசுமை நினைவுகளாய், தகிக்கும் கோடையில் வீசும் தென்றலாய் இருக்கும் படியாய், குஞ்சாமணியாகிய உங்களின் மனம் கவர் நண்பன், உங்களுக்காக புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்து எழுத இருக்கிறேன். இது எத்தனை நாள் தொடரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இன்பரசம் – பக்தி பரவசம் சொட்டும் அருமையான ஆஆஆஆஆன்மீக பதிவுகளாய் மலர இருக்கிறது.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ரசிகர்களுக்காய் எழுதப்பட்டும் இந்த இன்பரசம் உங்கள் கனவினை விட்டு விலகவே விலகாது என்று அறிவிக்கின்றேன்.

- தொடர்ந்து இணைந்திருங்கள்

உங்கள் மனம் கவர்

குஞ்சாமணி


குத்தியானந்தா, குஞ்சிதாவிற்குச் சவால்

ஜூலை 15, 2011

குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.

அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.

பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?

பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.

கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?

என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?

பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.

ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.

இப்படிக்கு

உங்களின் மனம் கவர்

குஞ்சாமணி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ஏன்? (18+)

April 6, 2011

அனாதியும் அரசியல் பிளாக் எழுத ஆரம்பித்து விட்டான். ஆனால் என்னால் மட்டும் திருந்தவே முடியவில்லை. அதனாலென்ன ! அனாதி பிளாக்கில் அடிக்கடி சில குட்டிகள் படத்தைப் போடுகின்றேனே(ஹீஹீ….) அதற்காவது உபயோகமாய் இருக்கின்றேனே அது போதாதா?

நாற்பது வயதுக்கு மேலே அவனவனுக்கு நுரை தள்ளி விடுகிறது. ஆனால் சில கிழட்டு மனிதர்கள் சின்ன வயசு குட்டிகளுடன் குஜாலாய் திரிகின்றார்களே எப்படி என்று யோசித்தேன். அது எப்படி சின்ன வயசுக்குட்டிகள் கிழட்டுப் பயல்களாய் பார்த்து காதலிக்கின்றார்களே என்ற எனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அந்தக் கிழட்டு ஆசாமிகள் எல்லாம் வாயாலே பிழைத்துக் கொள்கிறான்கள் என்பதைக் கண்டு கொண்டேன். இதற்கு மேலே விரிவாக எழுத நானென்ன சரோஜாதேவி எழுத்தாளரா? என்ன எழுதி இருக்கிறேன் என்று புரியாதவர்கள் பின்னூட்டம் போடக்கூட தகுதியில்லாதவர்கள். இருப்பினும் சந்தேகத்தை பின்னூட்டமாய் போடுங்கள். பதிலாவது எழுதித் தொலைக்கிறேன். ச்சே… இந்தப் பொழப்புக்கு பேசாமல் அனுஸ்காவின் பாவாடையாகவாவது பிறந்திருக்கலாம். சேசே… என்ன கொடுமையான வாழ்க்கை இது.

சில வாயுள்ள பிள்ளைகளின் படங்களும் அனுஸ்காவின் பாவாடையும் கீழே

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்களின் பிரிய குஞ்சாமணி

ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுப்பார்களா என்று குடிகாரன் தன் குடும்பத்தோடு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறான். பத்து ஓட்டுத்தேவைப்படுபவர்கள் குடிகாரனை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்யை லம்பாக அழ வேண்டும். அழகிரி வகையறாக்கள் குடிகாரனை அணுகும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

 

 

 


திருப்பதி வெங்கடாஜல பெருமாள் மகிமை

ஜனவரி 12, 2011

சில காலம் முன்பு தற்போது திமுக பத்திரிக்கையாக மாறிய ‘நக்கீரன்’ பத்திரிக்கையில் ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற ஒரு தொடரை ‘திரு அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார்’ எழுதியிருந்தார். அக்கட்டுரையைப் படித்த பிறகு பல நம்பிக்கைகள் எப்படி மாற்றப்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவிலேயே மிகப் பெரும் கோடீஸ்வரக் கடவுளாய் இருக்கும் ‘திருமலை வெங்கடேச பெருமாள்’ கோவிலைப் பற்றி இவர் எழுதியிருக்கும் அந்தப் பதிவை சிரமம் பாராமல் படித்துப் பாருங்கள். அவசியம் படித்துப் பாருங்கள். அதற்கு முன்னால் உங்களால் பெரிதும் விரும்பப்படும் திரு குஞ்சாமணியின் ‘சதா வெரி ஹாட்’ படித்து விடுங்கள்.

வெங்கடாஜலப் பெருமானைப் பற்றிய அந்தப் பதிவு கீழே

http://thathachariyar.blogspot.com/2011/01/76-to-82-1.html

 

- பஞ்சரு பலராமன்


அண்டங்காக்கை கொண்டைக்காரி விரைவில்

ஜனவரி 2, 2011

குஞ்சாமணியின் அடுத்த இலக்கிய படைப்பாக மலர விருக்கும் ‘அண்டங்காக்கை கொண்டைக்காரி’ விரைவில் பதிவேற்றப்பட இருக்கிறது.

தமிழகத்தில் ஆள்வோர் சரியில்லை என்பதை பல நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கட்டியம் கூறி வருகின்றன. கோடீஸ்வரர்களுக்கு சட்டம், ஒழுங்கு இவைகள் வெற்றுக் காகிதங்களாய் தெரியும் அளவுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது.

இதே ஒழுங்கு இலக்கியத்திலும் பரிமளிக்கின்றன. இலக்கிய உலகில் சட்டாம்பிள்ளையாக மாற இரண்டு அணிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. பிற சைலண்ட் படைப்பாளிகள் தங்களின் அரிய பணியை செவ்வனே செய்து வருகின்றார்கள். அவர்களைப் பற்றியது இல்லை இந்தப் பதிவு. இது நானும் இலக்கியவாதி என்றுச் சொல்லிக் கொண்டு திரியும் ‘காலி பெருங்காய டப்பாக்களைப் ‘ பற்றியது.

விரைவில் ரகளையான ‘குஞ்சின்’ இலக்கியப் பதிவுகள் தொடர்ந்து வரும். வழமை போல ஆதரவு தெரிவித்து நல்கவும்.

-அனாதியும் அவனது நண்பர்கள் குழாமும்


மனநோய் இலவசம் – உடம்பு ஸ்பெஷல்

December 19, 2010

என்னடா பூனைக்குட்டி இன்னும் தலையைக் காட்டவில்லையே என்று நினைத்தேன். அது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டது.

செக்ஸ் சாமியார் குத்தியானந்தா (காப்பி ரைட் : அனாதி பிளாக்) பற்றி தொடர் எழுதி கல்லா கட்டியாச்சு.செக்ஸ் சாமியாரின் லீலைகளை எழுதியவுடன், இண்டர்னெட் பிச்சைக்காரர்கள் (ஓசியில் படித்தால் பிச்சைதானே) புல்லரித்து, புல்லடித்து சாமியாரைத் தேடி ஓடினர். ”காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் வந்த காரில் செக்ஸ் சாமியார் இருந்தார். நண்பரும் அதைப் பார்த்தார். உடனே ஆஸ்ரமத்திற்கு போன் போட்டால் சாமி ஆஸ்ரமத்தில் தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். என் நண்பர் மிரண்டு விட்டார்” இப்படி எழுதியவர்தன் பிற்பாடு சாமியார், சரசம், சல்லாபம் என்று எழுதி தள்ளினார். அதையும் படித்தார்கள் கொஞ்சம் கூட அறிவில்லாத மடையர்கள். அதற்கு முன்பு திருவண்ணாமலைச் சித்தர் என்று ஆரம்பித்து வாசகர்களுக்கு வயாக்ரா மாத்திரை விற்றார். வசூல் சரியில்லை என்பதற்காக அவரையும் எதிர்த்தார்.

அடுத்து குஷ்கின். எத்தனை நாளைக்குச் செல்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தேன். நடந்தே விட்டது. சினிமா என்றால் குடியும், குட்டியும்தான் என்று அனைவருக்கும் தெரியும். இவர் என்ன எழுதப்போகிறார்? பரபர தொடர் ஒன்றினை எழுத எந்தப் பத்திரிக்கையாவது நம்மைக் கேட்க மாட்டார்களா என்று குஷ்கினுடன் பிரச்சினையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இவரை உரையாற்ற அழைக்கும் பிற எழுத்தாளர்களின் நூலை சரமாரியாக விமர்சிப்பாராம். ஆனால் இவர் நூலை பிறர் விமர்சித்தால் விமர்சிப்பவரைப் பற்றி இவர் காரண காரியத்தோடு திட்டுவாராம். என்னாங்கடா இது அலப்பரை???

பல சொரியல்கள் இணையத்தில் பரவிக் கிடக்கிறது. எந்த வித தகுதியும் இல்லாத நூல்களை, சிறந்த நூல் என்று சொரிந்து விடக்கூடிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது.

செக்ஸ் – மனித சமூகம் பெருக, இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு உணர்ச்சி. அதையே உடம்பின் பிரதானமாக்கி காசு பார்ப்பதில் சினிமாவுக்கு நிகர் சினிமா தான். அடுத்து பத்திரிக்கைகள். அடுத்து சில எழுத்தாளர்கள். அவர்களில் இவர் ஒரு ஸ்பெஷல்.

இவரின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிப்பவர்களின் சொத்தை அவர்கள் அறியாமலே உறிஞ்சி விடுவதும், அவர்களை செக்ஸ் வக்கிரம் பிடித்தவர்களாய் மாற்ற வைப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். அடுத்து நண்பர்களுடன் சண்டையிடுவதிலும், பிரயோஜனம் இல்லாதவர்களை கேவலபப்டுத்துவதும், அதை எழுதுவதும் தான் இலக்கியம் என்று சொல்வார். மொத்தத்தில் இணையத்தில் இலவசமாய் மன நோய் வினியோகப்பத்தில் இவருக்கு நிகர் இவர் தான். புரிந்தவர்கள் விலகி விட்டார்கள். புரியாதவர்கள் … பாவம்.

- பஞ்சரு பலராமன்

குறிப்பு : இது ஒரு சிறுகதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை


கேளிக்கை சார்ந்தவை அதிகம் விரும்பப்படுவது ஏன்?

நவம்பர் 26, 2010

என்னுடைய நண்பர் ஒருவர் அரசியல்,சமூகம் சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல், எப்பொழுதும் கேளிக்கை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். செய்தி சேனல்களின் பக்கமே அவர் திரும்புவதில்லை, சதா சன் மியூசிக், எஸ்.எஸ் மியூசிக் போன்ற சேனல்களே அவர் பார்த்து வருகிறார். அவரை போலவே என் நண்பர்கள் பலரும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இவரை போன்ற மனிதர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன?-சீனிவாசன்.

 

சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

”அண்டமா முனிவரெல்லாம் அடங்கினார் யோனிக்குள்ளே” என்ற பழமொழியினை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் அதிகம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை விரும்பக்காரணம் அவர்களின் பாலியல் தேவைகளுக்கான வடிகாலாகவும், தூண்டுகோலாகவும் அவை இருப்பதால் தான். பாலியல் நம் தமிழ் சமூகத்தில் மறைமுக பொருளாய் இருக்கிறது. காரணம் ஒழுங்கமைந்த வாழ்வியல் நெறிமுறைகள் பாலியல் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாழ்க்கை முறைதான் உலக மாந்தருக்கு நன்மை பயக்கும். ஆனால் சுயச்சார்புடையவர்கள் இம்மாதிரி கட்டுப்பாடுகளால் வெறுப்படைவர். இவர்களால் மனித சமூக ஒழுங்கு முறை வாழ்க்கைக்கு சிறிய அச்சுறுத்தல் உண்டாகும்.

செய்திகளில் விருப்பமின்மை என்பது அவர் விட்டேத்தியான போக்குடையவர் என்று காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒரு அரசியல்வாதியால் ஜன நாயகம் என்ற பெயரால் ஏமாற்றும் மன்னராட்சியினால் அவன் சூழப்பட்டிருக்கிறான். அதுவுமின்றி அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பிறரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிக்கை சுதந்திரத்தில் வெளிவரும் செய்திகளை அவன் நிச்சயம் கவனித்தே ஆக வேண்டும். அன்றாட நிகழ்வுகளுக்கேற்ப அவரது வாழ்க்கை முறை அமைக்கப்படுவதை அறிந்தும் கண்டு கொள்ளாதவாறு இருக்கிறார் என்றால், ரோட்டோரத்தில் உண்டு, உறங்கி, உறவு கொள்ளும் மனிதனின் மனப்பான்மையை உங்களின் நண்பர் பெற்றிருக்கிறார் என்று அவதானிக்கலாம். சாலையோரம் வசிக்கும் மனிதனுக்கு செய்தியும் தேவையில்லை, பிற எது மீதும் கவனமும் இருக்காது. ஆனால் தொடை தெரியும் சினிமா போஸ்டரை உற்றுப் பார்க்கும் ஆர்வமிருக்கும். அதைப் போலத்தான் மனிதர்களின் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களால் எவருக்கும் பிரயோசனமே கிடையாது என்பதை விட உபத்திரவம் அதிகம் என்றும் சொல்லலாம். ஏன் இவ்வாறு கடுமையாகச் சொல்கிறேன் என்றால் அழகியலைச் சார்ந்து வாழ்க்கை நடத்தும் எவரும் மன சந்தோஷத்துடன் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. இவர்களைப் போன்றோர் முதலாளிகளாய் இருந்தால், எண்ணிப் பார்க்கவே கொடூரமாய் இருக்கிறது.

இன்றைய உலகம் செயற்கைத் தன்மை வாய்ந்த பொருட்களின் மீதான ஈர்ப்பை, வாழ்வியலின் முக்கிய சந்தோஷமாகக் கருதுகின்றன. விளைவாக மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. இவையெல்லாம் ஒரு வாழ்க்கை முறையே என்று வியாபாரிகள் மக்களுக்கு போதித்து வருகின்றனர். இம்மாயையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

இது போல நடப்பது காலத்தின் கட்டாயம். மனிதர்கள் விலங்கு மனப்பான்மையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களின் நண்பர்களின் செய்கை நமக்குச் சொல்லும் செய்தி.

உங்கள் நண்பர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை : வாழும் வரை பிறருக்கு உபயோகமாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் என்பதுதான். ஏனென்றால் நாம் பிறரோடு வாழ்கிறோம் என்பதால்.

- அனாதி

 


தொட்டுக்கொள்ள 24.11.2010

நவம்பர் 24, 2010

முதல்வர் கருணா நிதியும், முன்னாள் மந்திரி ராஜாவும் ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அனைத்தும் விதிப்படிதான் நடந்தது என்கிறார்கள். ஆனால் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணையை வேண்டாமென்கின்றார்கள். ஏனோ??  கேக்குறவன் கேனப்பயல்கள் என்றால் கேழ்வரகில் கலர் டிவி வருதுன்னு சொல்லுவாங்க போல.

நயன் தாரா / பிரபுதேவா – மூன்றாவது சம்மனும் அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.  அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதா? இந்து மதக் கோட்பாடுகளை முன்னிறுத்தும் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விஷயத்தில் கண்டு கொள்ளாதது ஏனோ???

பாலசந்தர் ரஜினியிடம் நீ இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்றுச் சொன்னார் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. எதில் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எந்திரன் எந்திரிக்காமல் குப்புற விழுந்தது. பாலச்சந்தருக்கு ரஜினி மேல் என்ன கோபமோ.

கல்மாடி மீது 450 கோடி ரூபாய் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இன்னும் என்னென்ன கிளம்புமோ? காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சியாய் மாறி சிரிப்பாய் சிரிக்கிறது.

சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெறுகிறார் பெரியார், அண்ணா வழியில் வருகின்ற எதிர்கால முதலமைச்சர் திரு ஸ்டாலின். நாத்திகம் ஆத்தீகமாயிற்று. இனி ஆரிய எதிர்ப்பு எடுபடாது. தலித் பிரச்சினை வேண்டுமானால் வேலைக்காகலாம்.

பிரசார் பாரதி மீது ஊழல் குற்றச்சாட்டு. ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸின் அடுத்த ஊழல் காட்சிகள் ஆரம்பம்.

நாடாளுமன்றத்தில் இன்னும் பிரச்சினை தீரவில்லை. ஸ்பெக்டரம் விசாரணை நிச்சயம் முடக்கப்படும். க்வாட்ரோச்சி வழக்கு போல, இதுவும் காணாமலே போய் விடும். காங்கிரஸ் இந்தியாவை அடிக்கும் கொள்ளைக்கு எல்லையே இல்லை என்றாகி விட்டது.

என் பெயர் மீனாட்சி விஜய் டிவி தொடரில் நடிக்கும் பழ கருப்பையா, துக்ளக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டார். காசே தான் கடவுளடா. அது கடவுளுக்கும் பொருந்துமடா என்கிறார் போலும். மீனாட்சியை கடத்தி விட்டான் வில்லன். தொங்கு மீசை ஹீரோ மனசு வலிக்கிறது என்று பேசுகிறார். மிஸ்டர் ஜெரால்டு உங்களுக்கு டைரக்‌ஷன் தெரியவில்லை என்றால் தெரிந்த ஆட்களிடம் கொடுத்து விடுங்களேன். அழகான கதையை ஏன் இப்படிக் கொத்துக்கறி ஆக்கி வருகின்றீர்கள்???

விஜய் டிவி சிங்கர்ஸ்ஸில் வரும் காம்பியருக்கு “ முக்கி முனகி” பட்டத்தினை அனாதி நண்பர்கள் குழாம் வழங்கிச் சிறப்பிக்கிறது.

மன்மதன் அம்பு படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சொன்னது. இப்படம் ஒரு கப்பலில் சூட் செய்யப்படுகிறது. திரிஷாவைக் காதலிப்பது கமலா? மாதவனா என்பது தான் ஒன்லைன் கதையாம். திரிஷாவைப் பார்த்தாலே வெற்றுச் சுவர் தான் நினைவுக்கு வருகிறது. கிழவியைக் கமல் தான் காதலிப்பார். இதில் என்ன சஸ்பென்ஸ் இருக்கிறது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் கதையின் சஸ்பென்ஸை உடைத்து விட்டார்.  கமல் ஜோக்கராகி விட்டார்.

இப்போதைக்கு இது போதும். நாளை குஞ்சாமணியின் குட்டியுடன் கும்மாளம் பதிவு வெளி வருகிறது. வாசகர்கள் தவறாமல் படித்து விடவும்.

- அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers