கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


உங்கள் குஞ்சுவின் ஸ்பெஷல் தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 1, 2013

Diwali-sexy-images

 

அன்பு நண்பர்களே !

அதிக வேலைப்பளுவினால் அனாதியும் நண்பர்களும் பிளாக் எழுத முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறோம்.

உங்களின் மனம் கவர் குஞ்சான அடியேனின்  தீபஒளி  நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தீபாவளிக்குள் ஆண்கள் அதாவது அனாதி பிளாக்கின் ரசிகர்களின் சீக்ரெட் லிஸ்ட்டில் மேலே படத்தில் இருக்கும் மேட்டர் போன்ற சிலபல பெயர்கள் ஏறட்டும் என வாழ்த்துகிறேன்.

- குஞ்சு


பெங்களூர் வழக்கு என்ன ஆகும்?

ஓகஸ்ட் 16, 2013

தமிழ் பத்திரிக்கைகளில் சில முதலமைச்சர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டுள்ள பெங்களூர் வழக்கை காரணமாக வைத்துப் பல்வேறு ஹேஸ்யங்களை உருவாக்கி வாசகர்களை ஏமாற்றி வருகிறது. இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பது பலருக்கு நன்கு தெரியும்.

டான்ஸி வழக்கில் தீர்ப்பில் ”த செண்டன்ஸ்டு ஹேஸ் பீன் சஸ்பெண்டட்” என்று எழுதப்பட்டது. அந்த நீதிபதிக்குத் தெரியும் “முதலமைச்சர்” என்றால் என்ன என்பதற்குரிய அர்த்தம்.  கோர்ட்டைப் பற்றியும், நீதிபதிகளின் ஸ்பெஷல் பவர் பற்றியும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். அதனால் அப்படிப்பட்ட தீர்ப்பு வெளியானது. ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பொலிட்டிக்கல் வெஞ்சன்ஸ் காரணமாய் மேடத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதே வெஞ்சன்ஸ் அவருக்கே திரும்பிய போது “அய்யோ கொல்றாங்களே” என்று கதறினார்.

அவருக்கும் தெரியும், இவருக்கும் தெரியும். முன்னாள் முதலமைச்சர்கள் என்றால் என்ன என்பதற்குரிய அர்த்தம். எதையுமே வித்தியாசமாய்ச் செய்ய முற்படும் கலைஞர் அந்த இமாலயத்தவறைச் செய்தார். அதன் பலனை அனுபவித்தார்.

முதலமைச்சர் என்பதன் ப்ரோட்டாகால் என்னவென்று தெரியாதவர்கள் வேண்டுமென்றால் தத்துப் பித்தென்று உளறலாம். அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் எவரும் ஒரு சொல் பேசமாட்டார்கள்.

இப்படியான போலிச் செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கிப் படித்து ஏமாறாதீர்கள்.

- அனாதி


தமிழகத்தில் 2000 ஆயிரம் கோடி கருப்புபணம்

ஜூன் 24, 2011

இன்றைய செய்தி தாளைத் திறந்தவுடனே 2ஜிக்கும் இணையான ஊழல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை ஒன்றினைப் பார்த்தேன். கருப்புப் பண முதலைகள் யார் என்று அரசுக்குத் தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது மக்களை ஏமாற்றும் அரசியல் அல்லவா என்று நினைத்தேன். இதோ அந்தச் செய்தியும் அதன் தொடர்பான சில கருத்துக்களும்.

தமிழத்தில் மொத்தம் 11 மெடிக்கல் காலேஜ்கள் இருக்கின்றன. அதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் ஒன்றிற்கு 35 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு காலேஜ்ஜிலும் 35 லிருந்து 53 சீட்டுக்கள் இருக்கின்றன என்றால் மொத்தம் இந்த 11 கல்லூரிகளும் வசூலிப்பது 210 கோடி கருப்புப் பணம். இது அத்தனையும் அன்னக்கவுண்டட் மணி.

7 டீம்டு பல்கலைகழங்கள் அரசுக்கு எந்த வித சீட்டுகளும் ஒதுக்க வேண்டியதில்லை. ஆக இவர்கள் அடிக்கும் கொள்ளைப் பணம் 280 கோடி. இதுவும் கருப்புப் பணம்.

மெடிக்கல் கல்லூரிகள் வருடம் தோறும் மொத்தமாய் மக்களிடமிருந்து உருவும் பணம் ரூபாய் 500 கோடி என்று வைத்துக் கொண்டால் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியிருக்கும் தனியார் டிரஸ்ட் மொதலாளிகளின் கருப்புப் பணத்தின் அளவினை எண்ணிப் பாருங்கள். இது ஸ்பெக்ட்ரம் பணத்தினை விட அதிகமல்லவா????

அடுத்து, இஞ்னியரிங் கல்லூரிக் கணக்கு.

தமிழகத்தில் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் 494. இக்கல்லூரிகளில் 100 கல்லூரிக்கும் மேலே உயர்ந்த தரம் கொண்டவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அரசு கோட்டா தவிர மீதமுள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு ஆவரேஜாக 10 லட்சம் வைத்தால் மொத்தமாக 1500 – 2000 கோடி ரூபாயை மேற்படிக் கல்லூரிகள் கருப்புப் பணமாக வசூலிக்கின்றன.

இவ்வளவு பணமும் மொத்தமாய் 500 பேருக்கு மட்டுமே பங்கிடப்படுகின்றன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழைகளிடம் இருக்கும் பணம் கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி நிறுவனங்கள் கருப்புப் பணமாகப் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டால், இந்தியாவெங்கும் கணக்கெடுத்தால் தலையைச் சுற்றும் அல்லவா?

கல்லூரிகளில் மட்டும் இத்தனை கருப்புப் பணம் என்றால் ஆரம்ப கல்வி நிலையங்களில் எத்தனை கருப்புப் பணம் சேரும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.  தனியார் கலைக்கல்லூரிக் கணக்குகள் என்பது வேறு. ஆசிரியர் கல்வி, பட்டயப்படிப்புகள் கல்விக் கணக்குகள் வேறு தனியாக இருக்கின்றன.

இவ்வளவு கருப்புப் பணம் விளையாடுவது அமலாக்கத்துறைக்கு தெரியாது என்றா நினைக்கின்றீர்கள்??? இல்லை சிபிஐக்குத்தான் தெரியாதா? இல்லை நீதிமன்றங்களுக்குத்தான் தெரியாதா? அரசுக்கு தெரியாதா? அனைவருக்கும் நன்றாகத் தெரியும் இந்த பிசினசை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை? காரணம் அரசுகளும், அரசு அமைப்புகளும் மக்களை ஏமாற்றுகின்றன.

அன்னா ஹசாராவிற்கு இது தெரியாதா? ஏன் அன்னா ஹசாரே இந்தியாவிலிருக்கும் தனியார் பள்ளி நிறுவனங்களை அரசுடைமையாக்கப் போராடவில்லை. இங்கிருந்துதானே கருப்புப் பணம் சேர ஆரம்பிக்கின்றது? இந்தியாவில் கருப்புப் பணமுதலைகள் என்போர் தனியார் கல்வி நிறுவன அதிபர்களே. இவர்களிடமிருந்து கல்வி பிடுங்கப்பட்டால் அதுவே கருப்புப் பணத்திற்கான போராட்டத்தின் முதல் ஆரம்பமாய் இருக்கும்.

ஆனால் யார் செய்வார்கள்????

தனியார் பிராந்திக்கடை நடத்திக் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காக, அரசே மதுக்கடைகளை நடத்தச் செய்த அம்மா, தனியார் கல்விக் கூடங்களையும் அரசுடமையாக்குவாரா? கேபிள் டிவியை அரசுடைமையாக்கினால், அது போல கல்வித் துறையையும் அரசுடைமையாக்கினால் என்ன?? யாராவது வழக்குப் போடுவார்களா? யார் செய்வார்கள் இந்த நற்காரியத்தை?????

மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது ! கருப்புப் பண ஒழிப்புப் போராட்டம், ஊழல் ஒழிப்பு போராட்டத்துடன், தனியார் கல்வி ஒழிப்புப் போராட்டமும் ஆரம்பிக்கப் பட வேண்டிய சரியான தருணம் இது

இந்திய அரசு மட்டுமல்லாமல் மா நில அரசுகளும் கல்வியில் தனியாரை உடனடியாக நீக்கி, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும் அரசுடமையாக்கப்படல் வேண்டும். அதை விடுத்து, ஊழல், கருப்புப் பணம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலாய் முடியும்.

செய்தி ஆதாரம்:

http://timesofindia.indiatimes.com/home/education/Seat-sale-in-TNs-pvt-colleges-may-fetch-Rs-2000cr/articleshow/8971032.cms

- பஞ்சரு பலராமன்


ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் விஜய் ஏன்?

ஏப்ரல் 23, 2011

அன்பு நண்பர்களே,

ஊழல், செக்ஸ் டார்ச்சர் பிற குற்றங்களை நாம் வெகு எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மிக நல்ல புத்திசாலிகளுக்கு கூட புரியாத பல விஷயங்களை பெரிய இடங்களில் நடக்கும். அவர்கள் நடத்துவார்கள். அந்த விஷயங்களைத்தான் அனாதி பிளாக் இலைமறைக்காயாக வெளிப்படுத்தி வருகிறது. அதனால் யாரும் பலனடைய வேண்டுமென்பதல்ல நோக்கம். உஷாராகி விட வேண்டுமென்பதுதான் நோக்கம்.

அதே போல இன்னும் எண்ணிலடங்கா விஷயங்களை மீடியாக்களும், பத்திரிக்கைகளும் உங்களிடமிருந்து மறைத்தே வந்து கொண்டிருக்கின்றன. இது அத்தனையும் மீடியா, பத்திரிக்கைகளில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி மூச்சே காட்ட மாட்டார்கள். ஏனென்றால் வியாபாரம் படுத்து விடும். பின்னர் நீங்களா சோறு போடுவீர்கள். ஆகவே வியாபார நுணுக்கங்களை நாம் விட்டு விடலாம். விஷயங்கள் என்னவென்று மட்டும் எழுதுகிறோம். படித்து மனதில் வாங்கிக் கொண்டு, உஷாராகி விடுங்கள். மேட்டர் முடிந்தது.

ஓகே.

ஆலுக்காஸின் விளம்பரத்தில் ஏன் விஜய்க்கு வாய்ப்புக் கொடுக்கின்றார்கள்? ஏன் என்பதை நீங்கள் இன்னேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதை நான் சொல்ல வேண்டியதில்லை. தெரியாதவர்கள் மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள். புரிந்து விடும். கொஞ்சூண்டு யோசிக்க வேண்டும். விடை கிடைத்து விடும். ஓகே..

ஏன் விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற காரணத்தால் தான், இன்றைய மனித குலம் மிகப் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. அது என்ன? அது அப்பேர்ப்பட்ட ஒரு விஷயமா என்பதை வரக்கூடிய பதிவுகளில் வெளிப்படுத்துவோம். புரிந்து கொள்ள முயலுங்கள்.

குறிப்பு : இப்படி நாங்கள் எழுதுவதற்காக, யாரும் எவரும் விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டியதில்லை. வங்கி அக்கவுண்டில் பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போது இத்தளத்தைப் படித்தால் போதும். உங்களின் நேரம் வெகு பொன்னானது. போனால் கிடைக்காது. எப்போதெல்லாம் மனதுக்கு ஒரு மாற்று எண்ணம் தேவைப்படுகிறதோ அப்போது எங்களின் பிளாக்கிற்கு வந்தால் போதும். ஓகே வா.

விரைவில் அடுத்த பதிவு

- அனாதி


கருப்புபணம் வைத்திருப்போர் பட்டியல்

பிப்ரவரி 7, 2011

அரசை ஏமாற்றி, திருட்டுத்தனமாக, முறையற்ற வழிகளில், சட்டத்திற்குப் புறம்பான வழியில் வெளி நாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் லிஸ்ட்டுகளை பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு அப்பட்டியலை வெளியிட மறுத்திருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

மேற்கண்ட குற்றம் தேசத்துரோகத்திற்கு மேலானது. நாட்டினை ஏமாற்றத்துணிபவர்களுக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும். ஏனென்றால் அரசுக்கு வரிக்கட்டாமல், ஏமாற்றி அப்பணத்தை சட்டத்திற்கு புறம்பான வழியில் வேறு நாடுகளில் பதுக்கியவர்கள், பிறர் கட்டும் வரிப்பணத்தில் அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர். சாலை மற்றும் இன்னபிற பொதுச்சொத்துக்களை இப்பிறவிகள் அனுபவிக்கின்றனர். பிற மக்களின் வரிப்பணத்தினை அனுபவிக்க நினைக்கும் இவர்கள், இந்திய நாட்டில் வாழவே தகுதியற்ற என்றும் சொல்லலாம்.

இப்படிப்பட்ட தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களின் பட்டியலை ஒரு பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. அதை கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம். இது பற்றிய எந்த ஒரு செய்தியையும் நமது தமிழக செய்தி பத்திரிக்கைகள் வெளியிடவில்லை என்பதை இவ்விடத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் செய்திகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாய் வெளியிடப்படுகிறது என்பதையும் இச்செய்தி மறைக்கப்பட்ட சம்பவத்தின் மூலமாய் அறியலாம். குற்றவாளிகளுக்கு ஆதரவாய் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என்பதைக் கீழே இருக்கும் செய்தி சொல்ல வருகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இந்தியாவின் அவலம் என்று கருத நேரிடுவதை தவிர்க்க முடியவில்லை

கருப்புபண முதலாளிகளின் பெயர்கள்

- பஞ்சரு பலராமன்


ஒரு பெண்ணின் அந்தரங்கம் (20+)

பிப்ரவரி 1, 2011

 

இந்தக்கால இளம் ஐடிப் பெண் ஒருத்தி, தன் லவ்வரை விட அதிக அழகும், பணமும் இருக்கும் மற்றொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டு, முன்பே காதலித்த காதலனை கழட்டி விட, ஐடியா சொல்வதை கீழே படியுங்கள்.

“இருவரும் மோதிரம் மாற்றி காந்தர்வ மணம் செய்து கொள்வோம். போலி ஹனிமூன் டிரிப் மேற்கொண்டு, ஒரு வாரம் அலுக்க அலுக்க தாம்பத்யம் நுகர்வோம். குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் மிலிட்டரி டாக்டர் மூலம்தான். திருமணத்திற்கு பின்னும் நம் தொடர்பு தொடரும். என் மரணம் வரை எனக்கு இரு கணவன்கள். ஒரு காந்தர்வ கணவன்; ஒரு தாலி கட்டிய கணவன். எதாவது ஒரு கட்டத்தில், நீ திருமணம் செய்து, என்னை விட்டு விலக விரும்பினால், தாராளமாக நீ விலகலாம். காந்தர்வ மணம், ஹனிமூன் ட்ரிப் வேண்டாம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருகிறேன்; வாங்கிக் கொள். இப்பணம் நீ காதல் தோல்வியால் தற்கொலை செய்யாமலிருக்க அல்லது நீ என்னை எதிர்காலத்தில் பிளாக்-மெயில் பண்ணா திருக்க. சொன்ன இரு யோசனைகளில் உனக்கு எது பிடித்திருந்தாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தயாரித்து, கையெழுத்து இட்டுக் கொள்வோம்…’ என்றேன்

மேற்படி பத்தி வாரமலரில் வெளியாகி இருக்கிறது.

அன்பார்ந்த வாசகர்களே அனாதி பிளாக்கில் இதுவரை நீங்கள் படித்து வந்த அந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கும் மேற்படி பத்தியை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் வாசிக்கும் தினசரியில் வெளிவந்திருப்பதை சற்றுக் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இப்படியும் ஒரு பெண் யோசிப்பாளா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள். இதற்கும் மேலே யோசிக்கும் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கின்றார்கள்.

சரி இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்படி யோசனை தெரிவித்த பெண் கிடைத்தால் நம் வாசகர்களில் எவராவது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றீர்களா என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். (யார் யாரைக் கல்யாணம் பண்ணா குஞ்சுக்கு என்னா வந்தது? அதுக்கு அது கிடச்சா போதுமேன்னு குடிகாரக் கம்னாட்டி கத்துரான்)

ஆனால் உங்களின் பிரிய குஞ்சாமணியாகிய நான், இப்பெண்ணை மிகுந்த ஆவலுடன் திருமணம் செய்வேன். ஏனென்றால் எனக்கு அடங்காத குதிரை மேல் ஒரு பிரியம் இருக்கிறது. ஒரு கிக் இருக்கிறது இம்மாதிரிப் பெண்களோடு வாழ்வதில். வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் வேண்டுமல்லவா? ஆனால் என் பிரியத்துக்குரிய அன்பான வாசகர்களே, வாழ்க்கை என்பது இதுவல்ல.

ஏன் இந்தப் பெண் இம்மாதிரி யோசித்தது? இப்படிப்பட்ட சிந்தனை ஏன் வந்தது? அதற்கு காரணம் “வாரமலர்”. ஏன் என்று யோசியுங்கள்.

பெண்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவர்கள். அவர்கள் திசைமாறிச் செல்வது எந்தச் சமூகத்திற்கும் நல்லதல்ல.  (போடாங்.. சாத்தான் வேதம் ஓதுதான்னு கேக்குறான் குடிகாரன்)

- குஷியுடன், குஷாலுடன் உங்கள் பிரிய குஞ்சாமணி

 

 


இரக்கமற்ற வங்கிகளும் அதன் கொள்ளைகளும்

திசெம்பர் 29, 2010

அன்பார்ந்த அனாதி வாசகர்களே,

இதோ ஒரு பதிவர் எழுதிய ஒரு கட்டுரையை படித்துப் பாருங்கள். மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல், தனி மனிதனின் பொருளாதாரத்தை மட்டுமே உயர்த்தக்கூடிய வங்கிகள் செய்யும் அக்கிரமச் செயல்களை உதாரணத்துடன் பட்டியலிட்டுள்ளார் இந்த வாசகர். உலகத்திற்கே அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த வங்கிகளை உலக நாடுகள் உடனடியாக மூட வேண்டும். மக்கள் பணத்தை திரும்ப ஒப்படைத்து, வங்கிகள் நடத்தும் இந்த வகையான பிசினஸ்ஸை இழுத்து மூட வேண்டும். செய்யுமா உலக நாடுகள் ????? மக்களா இல்லை தனி மனிதனா என்பதை உலக நாட்டுகளின் தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்.

http://tamilfuser.blogspot.com/2010/12/blog-post_27.html

- பஞ்சரு பலராமன்


சாரு – மிஷ்கின் – கிக்கிபுக்கி

திசெம்பர் 15, 2010

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி நண்பர் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பனின் துரோகம் என்று மிஷ்கினை திட்டி இருக்கிறார் சாரு என்றார் நண்பர். அப்படியா என்றேன். இதில் பெரிய ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஏனென்றால் சாருவின் இயல்பு அது. சாரு தன் தளத்தில் எழுதிய நண்பர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பாருங்கள். தற்போது அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும் அரைகுறைகள் மட்டுமே அவருடன் திரிவார்கள். பழைய நண்பர்கள் எவரும் அவருடன் இருக்கமாட்டார்கள். ஏன் தெரியுமா? சாருவிற்கு வாங்கத்தான் தெரியும். கொடுக்கத் தெரியாது. அன்பினைக் கூட.

இவரின் எழுத்தை ஆரம்பகால வாசகன் வேண்டுமானால் வாசித்து மிரட்சியடையலாம். இவரின் எழுத்தை சற்றே மதி நுட்பத்துடன் தொடர்ந்து வாசித்தால், அவரின் குணம் பளிச்செனத் தெரியும்.

சாரு ஒரு புரட்சி எழுத்தாளர், சமரசமற்றவர் என்று மனுஷ்யபுத்திரன் சாருவின் புத்தக முன்னுரையில் எழுதுவார். மேற்படி வார்த்தைகளின் அருகில் செல்லக்கூட இவருக்கு தகுதி இல்லை என்பதை சாருவே தனது பத்தியில் எழுதியிருப்பதைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

அதற்கு ஒரு உதாரணம் : மிஷ்கினுடன் உரையாடலைத் தொடர்ந்து அவரின் பத்தியில் இளையராஜா பற்றிய செய்தியை நீக்கப்பட்டதாய் சாரு சொல்கிறார். அதற்கு ஒரு சப்பைக்காரணம் : நந்தலாலா ஒரு நல்ல படமாம். இப்போது சொல்லுங்கள் சாரு சமரசமற்ற எழுத்தாளரா?

மிஷ்கின் சாருவின் தேகம் பற்றிய புத்தக விமர்சனமாய் சொன்னது : “ சரோஜா தேவி”. அவ்வளவுதான் அதில் இருக்கிறது போலும். ஆனால் சாரு அவர் அப்படிச் சொன்னதற்காக இல்லாத புனைவுகளை எடுத்து எழுதி புலம்புகிறார். சரோஜா தேவி புத்தகத்தை அப்படித்தானே சொல்ல வேண்டும்? இவரின் எழுத்தைப் புகழ்ந்திருந்தால் மிஷ்கினைப் போல மனிதனே இல்லை என்பார். புகழவில்லை என்பதற்காக துரோகம் என்ற வார்த்தையினைப் பயன்படுத்துகிறார். ஆனால் உண்மையில் யார் துரோகம் செய்வது என்பதை சாருவை நன்கு அறிந்த அவரின் வாசகர்களே அறிந்து கொள்வார்கள்.

குறிப்பு : நீங்கள் ஒரு சமகாலக் கவிஞர் ஆக வேண்டுமென்றால் சாருவின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஒரு ஐந்து லட்சம் செலவு செய்தால் “ அறிவார்ந்த “ பதிவர்களால் ‘சமகாலக் கவிஞர்’ என்ற பட்டத்தினைப் பெறலாம். 100 புத்தகங்கள் மட்டுமே ஆசிரியருக்கு என்ற உடன்பாட்டின் படி, இக்காலத்தில் எவர் வேண்டுமானாலும் புத்தகம் வெளியிடலாம் என்பதால் எழுத்தாளர்கள் என்பவர்கள் இன்றைக்கு சாலையோரம் வைத்திருக்கும் இட்லிக்கடைகள் போல பெருகி விட்டார்கள்.

- பஞ்சரு பலராமன்

மேலும் ஒரு குறிப்பு : சாரு அனாதி தளத்தை ஒரு பயங்கரமான பிளாக் என்று தனது தளத்தில் இணைப்புக் கொடுத்திருந்தார். அந்த வகையில் நாங்கள் சாருவை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பல வாசகர்கள் நினைக்க கூடும். எங்களால் அது முடியாது. தனி மனித தாக்குதல்களை பெரும்பாலும் தவிர்த்து வந்த நாங்கள், சாருவின் அலப்பரையினால் இப்படி எழுத நேரிட்டு விட்டது.


நம்பினால் நம்புங்கள்

திசெம்பர் 2, 2010

நாமெல்லாம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. நடப்பது கனவா, நனவா என்பதும் புரியவில்லை. நாம் புத்திசாலித்தனத்துடன் இருக்கின்றோமா என்று கூட அடிக்கடி சந்தேகம் வேறு வந்து விடுகிறது.ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது. ஆனால் நம் முதல்வரோ கீழே இருக்கும் அறிக்கையை செய்தி தாள்களுக்கு கொடுக்கிறார். செய்தி தாளின் ஆசிரியருக்கு ஒன்று நட்டு கழண்டு இருக்கணும். இல்லை பைத்தியமாக இருக்க வேண்டும். வேறு என்ன முதல்வரின் அறிக்கையை போட்டு விட்டு, அதன் பக்கத்திலேயே ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கட்டிங்கை வெளியிட்டு இருந்தால் என்ன அழகாய் இருந்திருக்கும்? ஆனால் தினமலர் அதையெல்லாம் செய்யாது. தினமலர் ரகசியங்களைப் பற்றி இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம். செய்தியைப் படித்து விட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள்.  நம்பினால் நம்புங்கள். அவருக்கு இவ்வாறு அறிக்கை விட உரிமை இருக்கும் போது, நமக்குள் நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=137638.

இனி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் செய்தியைக் கீழே படித்து விடுங்கள்.

South Indian media baron, caused stir with acquisition of 37% stake in low-cost domestic airline SpiceJet in June, for $160 (ரூபாய் 720,00,00,000) million. Shares of his regional broadcaster Sun TV Network have jumped 47% in past year. Its 20 television channels reach 95 million households. Also has 45 FM radio stations, two daily newspapers and four magazines. Malaysian billionaire Ananda Krishnan’s Astro Group partner in Sun Direct, a direct-to-home television service with 6 million subscribers. Network 18, Forbes’ licensee in India, is partner in new distribution venture. Grand uncle M.Karunanidhi is chief minister of Tamil Nadu, his home state. Younger brother Dayanidhi is federal minister of textiles

http://www.forbes.com/lists/2010/77/india-rich-10_Kalanithi-Maran_DWSG.html

உலகம் போகிற போக்கைப் பாருங்க வாசகர்களே ! இதையெல்லாம் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் நாம் எப்படி இருக்கின்றோமோ அதே போலத்தானே நம்மை ஆளும் தலைவர்களும் இருப்பார்கள் ?

சரி, இப்போதைக்குப் போதும்.

கொசுறாய் ஒரு செய்தி : கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் வசூல் வந்ததாம் ஒரு அரசகட்டளைக்கு. உங்களுக்கு தெரியுமா?

இதெல்லாம் நமக்கெதற்கு? பேசாமல் சதாவின் முலையிலும், பிரியாமணியின் கீழ் போர்ஷனிலும் கவனத்தைச் செலுத்தினால் சற்று நேரம் கிளுகிளுப்பாய் இருக்கலாம். எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நமக்குத்தான் சதாவும், ப்ரியாமணியும் இருக்கின்றார்களே? ஓகே…

- பஞ்சரு பலராமன்

நன்றி : தினமலர் மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை


Follow

Get every new post delivered to your Inbox.

Join 154 other followers

%d bloggers like this: