சவுக்கு பற்றி

மார்ச் 15, 2014

அனாதி சவுக்கு இணையதள பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன? – விமலாதித்தன், சிங்கப்பூர்

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு ஒரு சாட்சியாய் நிற்பது சவுக்கு இணையதளம். தமிழ்நாட்டில் சுத்தமாக மக்களாட்சி, ஜனநாயகம் என்பது இல்லவே இல்லை என்று கட்டியம் கூறுகிறது சவுக்கு இணையதளம்.

இதற்கு பலவித காரணங்கள் உண்டு.

நீதிபதிகளின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குட்பட்டாலொழிய இந்தியாவில் ஜன நாயகச் செயல்பாடுகள் இன்றைக்கு இருப்பது போல இனிமேலும் முடங்கிக் கிடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாத நீதிபதிகளையும், வக்கீல்களையும் சட்டத்திற்கு உட்படுத்த வேண்டும். அவர்களை கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் எழுதும் தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தவறான தீர்ப்பெழுதினால் தண்டனை இருக்கிறது என்பதை நீதிபதிகள் கவனத்தில் இருத்தல் வேண்டும்.

இதைச் செய்தாலே ஜன்லோக்பால் எல்லாம் தேவையே இல்லை. சட்டம் கடுமையானதாக்கப்படல் வேண்டும். அது ஜனாதிபதியையும் கேள்வி கேட்க வேண்டும். இது நடக்காத பட்சத்தில் இந்தியாவில் இருக்கும் ஜன நாயகம் என்பதெல்லாம் போலியானது.

பத்திரிக்கைகள் அனைத்தும் காசுக்காக இயங்குகின்றன. அவைகள் ஆளும் அரசியல் வர்க்கத்துக்கு ஆதரவாய் மட்டுமே இருக்கும். பேனா முனை அது இதெல்லாம் எவளாவது நடிகை எந்த நடிகனோடு படுத்தாள் என்பதை பற்றி எழுதத்தான் இருக்கின்றன. அவர்களிடம் தான் பேனா முனையின் சக்தியைப் பற்றிப் பேசலாம்.

அரசியல்வாதியிடம் பேசினால் பேனா வைத்திருப்பவன் கை கால்கள் முறிந்து விடும். கட்சி என்ற பெயரில் ரவுடித்தனம் செய்கின்றார்கள். போராட்டம் என்றுச் சொல்லி அடித்து உடைக்கின்றார்கள். மக்களைத் துன்பப்படுத்துகின்றார்கள் அரசியல் கட்சிகள். மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்றுச் சொல்லி ரவுடி கேங்க் நடத்துகின்றார்கள் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும். இல்லையென்று யாராலும் சொல்ல முடியுமா? லோக்கல் தலைவருக்கு கட்சியில் சீட் இல்லையென்றால் ரோட்டில் இறங்குகின்றார்கள். அவர் மக்கள் சேவை செய்கின்றாராம். இப்படிப்பட்டவர்களை மக்கள் ஓட்டுக் கேட்டு வரும் போது கேள்வி கேட்க வேண்டும். உனக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்றுச் சொல்ல வேண்டும். ஆனால் எவராவது செய்கின்றார்களா? இல்லையே? ஆரத்தி தட்டில் காசு விழுகிறதா, கவரில் காசு கிடைக்குமா என்று ஆலாய்ப் பறக்கின்றார்கள். படித்தவன் முதல் பாமரன் வரை இதே நிலை. காசு காசு என்று பறக்கின்றார்கள்.

பொதுவாழ்க்கைக்கு வரும் எவராயிருந்தாலும் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் விமர்சனத்துக்குட்படுத்தல் அவசியம்.

ஆனால் அப்படி விமர்சித்தால் வழக்கு போடுகின்றார்கள். அவ்வழக்குகளை நீதிமன்றங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். ரோட்டில் போகும் சாமானியனைப் பற்றி எவரும் பேசுவதில்லை. மக்கள் சேவைக்கு வருபவர்களைத் தான் பேசுகின்றார்கள். விமர்சிக்கின்றார்கள். எவர் தவறு செய்கிறாரகளோ அவர்களை விமர்சிக்கின்றார்கள். அது இவர்களுக்கு ஏற்கவில்லை. வழக்குகள் போடுகின்றார்கள். இவர்கள் என்ன மாதிரியானவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரின் பணத்திலும் பெறக்கூடிய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றார்கள். ஏசி காரில் பயணிக்கின்றார்கள். ஹெலிகாப்டர்களில் பறக்கின்றார்கள். சாப்பிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றி விமர்சித்தால் கோபப்படுகின்றார்கள். வேலைக்காரர்கள் எஜமானர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார்கள்.

இப்படிப்பட்டவர்களை கேள்வி கேட்கும் விமர்சிக்கும் இணையதளத்தை சும்மா விடுவார்களா?

இந்திய மக்களின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். கருத்துரிமைக்கு எதிரானவர்களின் சதிச்செயல். சுய நலவாதிகளின் தடித்தனம். உண்மையை உரக்கச் சொல்பவனை சட்டத்தைக் காட்டி மிரட்டு. அவனை அடக்கு என்பதுதான் இவர்கள் நடத்தும் செயல்கள்.

ஆனானப்பட்ட ஹிட்லரே காணாமல் போய் விட்டான். இவர்கள் எல்லாம் காலத்தின் முன்பே “தூசுக்கும்” சமமானவர்கள்.

உண்மை என்றும் நிலைத்து நிற்கும்.

- அனாதி


இது சுதிர்வேலன் காதல் அல்ல – ஜாக்கெட் கதைகள்

மார்ச் 14, 2014

ஜாக்கெட் கதை – 1

நம்மாள முடியாததை நம்ம மகனாவது செய்யணும்?

என்ன பண்ணலாம்.இதைப் பற்றி பயலுக்கிட்டே பேசமுடியாது. அப்பன் அல்லவா? (எத்தனை பேருக்கோ????)

ஐடியா… ஐடியா…

நம்ம காலைக் கழுவிக் குடிக்கிறவனுங்களுக்கிட்டே கேட்டுப் பார்ப்போம்.

”குண்ணே, படம் எடுக்கலாம்னே ! பொச்சு பொச்சா பாக்கலாம்ல” ஒரு கழுவிக் குடிக்கிற பயல் குடித்தான்.

ஹீரோ ஹீரோயினை மேட்டர் செய்வது தானே சினிமாவின் கதைக் கரு. அது இல்லேன்னா எவண்டா சினிமா எடுக்க வரான்.

கதையோடு கருவையும் சேர்த்து செலுத்தி விடுவான்கள்.

சரி. இது தான் சரி..

படமெடுக்கிறாயாப்பா, பணம் தான் கொட்டிக் கிடக்கே. மச்சுக் கிச்சு போயிடும்.

எப்போடா இப்படி சொல்வாரேன்னு காத்துக் கிடந்தவன் துள்ளிக்கிட்டு எழுந்தான். (குஞ்சுன்னு நினைக்கக்கூடாது)

ஹீரோயினை மேயனும்.மாமா மிமிக்கிரி பயலுவ கூடவே சொத்தனும். இதுதானே கதை.

இதைத் தவிர வேறெதையும் எடுக்கவும் மாட்டானுவ. காட்டவும் மாட்டானுவ.

- மாண்புமிகு குஞ்சு அவர்களின் சிஷ்யன்

ஸ்ரீலஸ்ரீ குத்துக்கே குத்து விட்டு குஞ்சானந்தா (அறிமுகம்)


கற்பு என்றால் என்ன?

திசெம்பர் 27, 2013

தற்போதைய நவநாகரீக (கேடுகெட்ட) காலத்தில் பலருக்குள் கேள்வியாய் இருக்கும் ஒரு விஷயம் “கற்பு” தேவையா? இதைப் பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்கள் வைத்திருப்பார்கள்.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கற்பு பற்றிச் சொன்னது கீழே.

“பெண்ணானவள் முதன் முதலில் தன்னை புணருகின்றவனை மறக்கமாட்டாளாம். (சில பெண்கள் விதிவிலக்கு)நாம் பெரும்பான்மையானவர்களைப் பற்றிப் பேசலாம். அந்த முதன் முதல் புணரும் ஆண்மகன் மீது அவள் எல்லையற்ற காதலையும் வைத்திருப்பாளாம். குடும்பம் என்ற கலைக்கு இந்த பெண் உணர்ச்சி அவசியமென்பதால் கற்பு என்பது வந்தது. அந்தப் பிடிப்பு, உடல்முழுதும் பரவிய உணர்ச்சி அந்த ஆண்மகனின் மீது என்றைக்குமே மாறாத அன்பை உருவாக்கும். அதன் காரணமாய்தான் இன்றைக்கும் சில பெண்கள் கணவன் குடித்து விட்டு என்ன அடி அடித்தாலும் அவன் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது அவனைச் சகித்துக் கொள்வர். இது ஒரு உளவியல் காரணம்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

குறுக்கு குத்து:

”போடா நாயே அந்தப் பக்கம்” என்று திட்டும் பொண்டாட்டிகளை வைத்திருக்கும் சமூகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகளை எழுதும் முன் நவீனத்துவ இலக்கியவியாதிகளுக்கு டென் டியில் குண்டி அடித்தல் தான் நவீன கலாச்சாரம். இல்லையென்றால் கொடைக்கானல், ஊட்டி, இமயமலைக்குச் சென்று குண்டியடித்தல் தான் இலக்கியம். அது அவர்களின் இச்சையைப் பொருத்தது என்றாலும் இச்சையை இலக்கியமென்கிறார்கள் அதை ஒரு கூட்டம் ஹீ ஹீ கூகூ என்று கூவிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 உபயம் : குடிகாரன்


பாருவின் கேள்வி பதில்

திசெம்பர் 11, 2013

இத்தனை காலமும் ஒவ்வொரு ஆர்ட்டிக்கிளுக்கும் தன் வாசகர்களிடமிருந்தோ அல்லது வெஸ்ட் மினிஸ்டர் பாரில் ஓசி தண்ணீர் கொடுக்கும் அதிபரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று எழுதிக் கொண்டிருக்கும் அட்டமகாப் பொய்திலகம் பாருவிற்கு ஒரு கேள்வி.

முலை இலக்கியமா?

- குஞ்சு


உங்கள் குஞ்சுவின் ஸ்பெஷல் தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 1, 2013

Diwali-sexy-images

 

அன்பு நண்பர்களே !

அதிக வேலைப்பளுவினால் அனாதியும் நண்பர்களும் பிளாக் எழுத முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறோம்.

உங்களின் மனம் கவர் குஞ்சான அடியேனின்  தீபஒளி  நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தீபாவளிக்குள் ஆண்கள் அதாவது அனாதி பிளாக்கின் ரசிகர்களின் சீக்ரெட் லிஸ்ட்டில் மேலே படத்தில் இருக்கும் மேட்டர் போன்ற சிலபல பெயர்கள் ஏறட்டும் என வாழ்த்துகிறேன்.

- குஞ்சு


காங்கிரஸ் இந்தியாவை அழிக்கிறதா?

செப்ரெம்பர் 3, 2013

என்றுமில்லாதவாறு இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.  அன்னிய நிறுவன முதலீடுகளை கட்டுக்கடங்காமல், எந்த வித கட்டுப்பாடும் இன்றி காங்கிரஸ் அரசு அனுமதித்த காரணத்தால் தான் இந்தச் சூழல் உருவாகி இருக்கிறது.

பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தால், அவர்கள் லாபம் கிடைத்த பிறகு முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழியும் என்று பொருளாதாரப் புலிகளான பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரியாதா என்ற கேள்வியை எழுப்பினால் இருவர் மீதும் சந்தேகம் எழாமல் இருக்க முடியாது.

இதற்குப் பின்னால் பெரும் சதி வேலை இருக்கிறது என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள். அன்னிய மூலதனத்தை அவ்வளவு எளிதில் திரும்ப எடுத்துக் கொண்டு போக முடியாது. அது கம்பெனிகளாகவோ அல்லது வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளாகவோ  இருக்கும். ஆனால் நேரடி அன்னிய முதலீடுகள் அப்படி அல்ல.

ஏன் இப்படியான முதலீடுகளை இவர்கள் அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் படுபாதாளத்தில் விழுந்த அமெரிக்கப் பொருளாதாரம் இன்று மீண்டிருக்கிறது என்பதுதான்.

இனி தலைப்புக்கான காரணத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

- பஞ்சரு பலராமன்


காமக் கட்டழகிகளின் கதை – 1

ஓகஸ்ட் 12, 2013

அந்த வீடு கூரை வேய்ந்து இருந்தது. இயக்குனரை அழைத்துச் சென்ற புரடக்‌ஷன் மேனேஜர் வீட்டின் வாசலில் நின்று கொண்டு யாரையோ அழைத்தார்.

ஒரு வயதான பெண்மணி வாசலுக்கு வந்து வாயெல்லாம் பல்லாக இளித்தார். பு,மே அவரிடம் ஏதோ சொல்ல மாலையும் வந்து விட இருள் குவியத் தொடங்கியது.

வீட்டிற்குள் சிம்னி வெளிச்சம் ஏற்றப்பட்டது. இயக்குனரை வந்து அழைத்த பு.மேனேஜரிடம் இருட்டுக்குள் என்னத்தைப் பார்க்கிறது என்று இயக்குனர் புலம்ப, காரின் ஹெட் லைட் வெளிச்சத்தின் முன்பு வந்து நின்றார் ஒரு பெண்.

அவளை உற்று நோக்கிய இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை. உதட்டைப் பிதுக்கினார்.

பு.மே அப்பெண்ணின் தாயாரிடம் சென்று ஏதோ ரகசியமாய்ப் பேசினார்.

பின்னர் பு.மேனேஜர் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது. காரின் பின் புறமிருந்த சிகப்பு லைட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவள் யார்?

- குஞ்சு

இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. இது ஒரு நாவல். தொடராக வெளிவர இருக்கிறது.


பாரதப் பிரதமர் மோடி இலங்கையில் மலரபோகும் சுயாட்சி

ஏப்ரல் 14, 2013

எனது நண்பரொருவர் மெட்டீரியல் வாழ்க்கையினின்று தனியே தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்பவர். அவரைக் காணச் செல்வதுண்டு. இப்படியான ஒரு நாளில் அவர் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாரதி ஒரு சித்தன். அவனைப் போல சிவனைப் பற்றி எவரும் விவரித்திருக்க முடியாது என்றார். இதோ பாடல்

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

- பாரதியின் இப்பாடலை ஒரு நிமிடம் படித்துப் பாருங்கள். சிவனைப் பற்றி அவனின் பாடல் புல்லரிக்க வைக்கிறது இல்லையா?

அடுத்து அவர் சொன்னது தான் ரகளை.

மோடி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆவார். அவரின் ஆட்சியில் இலங்களையில் மா நில சுயாட்சி மலரும் என்றார். இதற்கு கொஞ்ச நாள் ஆகும் என்றாரவர்.

பொறுத்திருப்போம். காத்திருப்போம்.

- அனாதி


வெகு விரைவில் பதிவுகள் தொடரும்

ஜனவரி 28, 2013

அனாதியும் நண்பர்கள் வட்டாரமும் வேலைகளில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால் பதிவு எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்து கொண்டு, நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், நேரமின்மை தடுக்கிறது. விரைவில் எழுதுகிறோம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

- அனாதி மற்றும் நண்பர்கள்.


கலைஞரின் வாழ்க்கை குறிப்பு

ஓகஸ்ட் 18, 2012

விடிகாலையில் போன் அழைத்தது. யாரென்று பார்த்தால் நண்பர்.

“டேய் சப்ளையரு, ஆர் பி ராஜ நாயஹம் எழுத ஆரம்பித்திருக்கிறார்” என்றார் நண்பர். ( என் பெயரைச் சொல்லுவதில் உனக்கு என்னடா அவ்வளவு காண்டு? சப்ளையர் சப்ளையருன்னு காய்ச்சி எடுக்கிறாயே நீ – இது எனது நண்பருக்கு )

”அட ! அப்படியா?”

இப்பதிவு எழுதக் காரணம் ஆர்பிராஜநாயஹம் அவர்கள் மட்டுமே ! சுவாரசியமான எழுத்துக்கும், ஏகப்பட்ட சரக்குக்கும் சொந்தக்காரர் அவர் ஒருவர் தான் இருக்கிறார்.

ஆர்பிரா எழுத வந்து விட்டால் எழுத்துலகில் ஒருத்தன் கூட தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள். ஓடியே போவார்கள். எழுத்து என்ன பிராந்திக் கடையில் கிடைக்கும் சரக்கா? சரக்கு அடிக்கிறதைப் பற்றி எழுதியே “ஏய் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிட்டு திரிவதற்கு”.

ஆர்பிரா சார் ! முதலில் உங்களுக்கு ஒரு சலாம்

கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவினைப் படித்தேன். இதோ அதற்கான இணைப்பு கீழே. கலைஞர் தன் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டார். அதன் முழு உண்மையும் கீழே இருக்கிறது.

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html

அன்பு நண்பர்களே எனது தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் வருகின்றீர்கள். அப்படியே ஆர்பி. ராஜநாயஹம் சார் தளத்திற்கும் சென்று படித்து விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தகவல் பெட்டகமாய் கொட்டும் அவரின் எழுத்தை வாசிப்பது மட்டுமின்றி பின்னூட்டமும் இட்டு அவரை மேலும் மேலும் எழுத தூண்டுங்கள். அதன் பலன் கிடைப்பது நமக்கு மட்டுமே !

- அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 154 other followers

%d bloggers like this: