விஜய் டிவியில் கையில் ஒரு கோடி புரமோ பார்த்தேன். அச்சு அசல் ஒரு அட்டகாசமான பெண் ஒன்று பேசிக் கொண்டிருந்தது. சூர்யாவிடம் சொல்கிறாள் ”கனவில் மட்டும் தான் ஆடிக் கொண்டிருக்கிறேன், நான் எப்பொழுது உங்களுடன் ஆடுவது?”. உடனே சூர்யா அவருடன் ஆட்டம் போடுகின்றார்.
இவள் தான் நவீன பெண்மணி !
சினிமாக்காரனுடன், சினிமாக்காரியுடன் ஆடுவது தான் வாழ்க்கையின் நோக்கம் என்கின்ற இளைய தலைமுறை மாறும் வரை, தமிழகம் உருப்படப் போவதே இல்லை.
உங்களுக்குத் தெரியுமா? மிஸ் த்ரிஷா 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்து இருக்கின்றாராம். இப்போது ஒன்னே கால் கோடிக்கு பென்ஸ் கார் வாங்கி இருக்கின்றாராம்.
எப்படி இது சாத்தியம் என்று நினைத்துப் பாருங்கள்.
நாம் நம்மை இழந்து கொண்டிருக்கிறோம். நம் உழைப்பில் பலர் சுகமாய் வாழ்கின்றார்கள். நம் குடும்பமோ அல்லற்படுகிறது.
- அனாதி
10 வருடத்திற்கு தமிழ் சினிமாவை தடைசெய்தால் மட்டுமே…. அடுத்ததலைமுறையை காப்பாற்ற முடியும்.