அகில உலக திராவிட முன்னேற்றக் கழக உலகத் தமிழர்களின் தலைவர் மாபெரும் கலைஞர், கதையாசிரியர் திரு கலைஞர் நினைத்தால், தன் பேனா முனையினால் பொங்கி வரும் சுனாமியை நிறுத்தி விட முடியும்.
கோடி கோடியாய் கொள்ளை அடித்து, வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் ஊழல் மன்னன் ராஜா நினைத்தால் சுனாமிக்கே சுனாமி வந்து விடும்.
அகில உலக காங்கிரஸ் கட்சியின் அகில உலகத் தலைவி சோனியா காந்தியின் சுட்டு விரல் அசைவுக்கு சுனாமி அப்படியே நின்று விடும்.
அகில உலக தீவிரவாத நாடான அமெரிக்காவில் வசிக்கும் அக்மார்க் அயோக்கிய சிகாமணி அமெரிக்கன் ஒருவன் சுனாமி என்று சத்தமிட்டாலே, வாலைச் சுருட்டிக் கொண்டு சுனாமி கடலுக்குள் ஓடி விடும்.
சிங்கள வெறியன், கொலைகார பாதகன், கேடிகளில் எல்லாம் கேடி, எமனுக்கே எமனான ராஜ பக்ஷே முன்னால் சுனாமி வெறும் வேட்டுச் சத்தம்.
அதுமட்டுமா, ஆசியப் பணக்காரர் நேர்மையின் சிகரமான மாறன் சகோதரர்கள் நினைத்தால் தங்களின் சித்து விளையாட்டுக்களினாலே சுனாமியைக் கூட சன் டிவிக்குள் அடக்கி ஒடுக்கி, தமன்னாவின் கவட்டி வழியாக மெரீனா பீச்சில் வழிந்தோடச் செய்வார்கள்.
அதையெல்லாம் விட அம்மா முகத்தை உயர்த்தினாலே சுனாமி ஒன்றுக்குப் போய் விடும்.
இத்தனை மக்கள் சுனாமியை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும் திறமையுடன் இருக்க உலக மக்கள் ஏன் பயப்பட வேண்டும்.
ஆகவே பயமற்று இருங்கள் உலக மக்களே !
-
பஞ்சு