இன்றொரு பிளாக்கினைப் படிக்க நேர்ந்தது. படித்து முடித்ததும் கிர்ரென்று ஆகி விட்டது. எத்தனையோ நண்பர்கள் ஷேர்மார்க்கெட்டில் பணம் போயிடுச்சு, போயிடுச்சு என்று கதறுவார்கள். இதையெல்லாம் தடுக்க முடியாதா அரசாங்கம் என்று நான் யோசித்தது உண்டு. பணக்கார கம்பெனிகளுக்காகத்தானே அரசாங்கம் நடைபெறுகிறது. மக்களிடமிருந்து பணத்தை உருவும் அயோக்கிய சிகாமணிகளுக்குத்தானே சட்டம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
எனக்கு ஷேர்மார்க்கெட் பிடிக்கவே பிடிக்காது. இதோ ஷேர் மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் அடிக்கப்படும் கொள்ளையை ஒருவர் விரிவாக பதிவெழுதி இருக்கிறார். உடனடியாக ஷேர்மார்க்கெட்டில் பணம் போட்டிருப்போர் அதை திரும்பப் பெற்று ஏதாவது நிலத்தில் முதலீடு செய்து வையுங்கள். உங்கள் பெயருக்கு ஒரு நிலமாவது இருக்கட்டும். கூட்டுக் கொள்ளைக்காரர்களிடமிருந்து உங்களது உழைப்பை பாதுகாத்திடுங்கள்.
http://anindianviews.blogspot.in/2012/02/2g_14.html
- பஞ்சு
