தலைப்பு தற்போதைய நிகழ்விற்கு வெகு பொறுத்தமாய் அமைந்து விட்டது. அம்மா, கேப்டன் பிரச்சினைக்கும் நயன், பிரபுதேவா பிரச்சினைக்கும் ஒரே தலைப்பாய் ஆகி விட்டது பாருங்கள்.
துரோகம் ஒன்றே அரசியலில் பெரிய மாற்றங்கள் உருவானதற்கான அடிக்காரணமாய் இதுவரையிலும் இருந்திருக்கின்றன. யாரோ ஒருவரின் துரோகம் மாபெரும் புரட்சிக்கு வித்திடுகின்றன. இலக்கியத்தில் துரோகத்தின் வழி தான் படைப்புகள் உருவாகின்றன. ஆன்மீகத்தில் கூட துரோகத்தின் வெளிப்பாடகவே கடவுள்கள் வருகின்றார்கள். மனிதர்களுக்குள் அவரவர் தகுதிக்கேற்ப துரோகங்களை சந்தித்திருக்கின்றார்கள்.
இந்திய மக்களுக்கு ராஜா செய்த துரோகம் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் கபில் சிபல், கருணா நிதிக்களுக்கு ராஜா எதுவும் செய்யவே இல்லை என்று தோன்றி இருக்கிறது. இன்றும் சப்பைக் கட்டு கட்டி வருகிறார் கபில் சிபல். இது என்ன விதமான அரசியல் என்று அவருக்கே தெரியவில்லை போலும். இத்தனைக்கும் அவர் ஒரு வக்கீல்.
பிரபு தேவா, நயன் பிரச்சினை என்பதும் ஒரு வகை துரோகம் தான். நயன் வருந்துவதில் பயனில்லை. அவர் நடிக்க மட்டுமே செய்திருந்தால், அவருக்கான இந்த வலி வந்திருக்காது. ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து மாங்கல்யத்தை இறக்கி விட்டு, அந்த மாங்கல்யத்தை தான் சூட நினைத்த பலன் தான் நயனுக்கான வலிக்கு காரணம்.
ஹீரோயினுக்கும், ஹீரோவிற்கும் பிரச்சினை வரவில்லை என்றால் சினிமாவில் சுவாரசியம் இருக்காது. நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று ஹீரோவை திட்டும் ஹீரோயின், வேறு வழி இன்று ஹீரோவை மன்னித்து விடுவாள். முடிவில் ஹீரோவிற்கே வெற்றி கிடைக்கும். அது உண்மையில் நடக்குமா என்பது தான் கேள்வி. விடை எப்போது கிடைக்கும். பொறுத்திருப்போம்.
- பஞ்சு
