எந்தச் செய்தி உண்மை? Hot Macheee !

பிப்ரவரி 29, 2012

இது ஹாட் மச்சி ! இப்படியெல்லாமா நடக்கும் என்று யோசிப்பவர்கள் உடனடியாக அனாதியின் பிளாக்கை விட்டு விலகி ஃபோர்னோ சைட்டுக்களுக்குச் சென்று விடுங்கள்.  சராசரி மனிதர்களுக்கான ப்ளாக் அல்ல அனாதி !

“ஆரம்பம் இல்லாதவன், என்றுமிருப்பவன் அனாதி” – அப்படியென்றால் உண்மை ! அதற்காகத்தான் வெளிச்சத்தில் என்று பெயர் வைத்திருக்கின்றோம். புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயலுங்கள். புரிந்து கொண்டவர்கள் சந்தோசமாய் உணருங்கள். அனாதி உங்களுடன் பயணிக்கும் அற்புதத்தின் அற்புதமான உண்மையின் நிழல் ! இனி செய்தி,

இணையதளங்களில் பலப்பல செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செய்திக்கும் மறுப்பும் உண்மை போலவே தொனிக்கும் பதிவுகளையும் படித்து பெரும்பான்மையானோர் குழம்பிப் போய் இருப்பீர்கள்.

உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாட்டையும் நடத்தி வருவது அரசியல்வாதிகள் அல்ல என்பது. பின் யார் நடத்துகின்றார்கள் என்று கேட்கத் தோன்றும். ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையினரால் மட்டுமே நாடுகள் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. அவ்வாறு பல நாட்டு உளவுத்துறைகளுக்கிடையே நடக்கும் பிரச்சினைகள்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்சினையாக வெளிவரும். பத்திரிக்கைகள் வழங்கும் செய்திகள் அனைத்தும் ஃபில்டர் செய்யப்பட்டவை. அடங்காத பத்திரிக்கைகள் அடக்கப்படும்.

தற்போதைய ட்ரெண்ட் இணையதளங்களில் உளவுத்துறையினரின் கட்டுக்கதைகளும், கண்ணைக் கட்டும் பொய் புரட்டுகளும் உலா வருகின்றன என்பது தான். இவற்றில் எந்தச் செய்தி உண்மை என்று கண்டுபிடித்து புரிந்து கொள்வது இமாலயப் பிரச்சினை. அதை எப்படி உணர்வது என்பதையும், எந்தச் செய்தி உண்மையானது என்பதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அனாதியில் தொடர்ந்து எழுதுவோம். அதுவரை படிப்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளவும் முயலுங்கள்.

- பஞ்சு


குஞ்சாமணியின் குதூகலம் – அமலாபால்

பிப்ரவரி 28, 2012

காதல் படம் வெளி வந்த போது டிவி சானல்களில் மட்டுமல்ல ஒவ்வொரு தினசரி, வார, மாத இதழ்களில் “காதல் சந்தியா”வின் பேட்டிகள், புகைப்படங்கள் என்று அதகளப்பட்டன. காதல் சந்தியா நல்ல நடிகையாக வருவார் என்று ஆரூடமெல்லாம் எழுதினார்கள். டிவியில் பார்த்தால் சானல் தோறும் சந்தியாவின் விதவிதமான பேட்டிகள். அட அட என்ன ஒரு கவனிப்பு நடந்தது தெரியுமா அப்பெண்ணுக்கு? இப்போது காதல் சந்தியா எங்கே போனார் என்று யாருக்காவது தெரியுமா?

உப்புக்கும் பெறாத டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாய் உட்கார்ந்து கொண்டு ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் சந்தியா. ஜட்ஜ் என்ற பெயரை டிவிக்கள் எவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றார்கள் பாருங்கள்.

சினிமாவில் புதிதாய் வரக்கூடிய ஹீரோயினுக்கு ஸ்பெஷல் மார்க்கெட் எப்போதும் உண்டு. மார்க்கெட்டில் புதுச்சரக்கு அல்லவா? ஹாட்டாகத்தானே இருக்கும்? ஆனால் மாமனாருடன் படுக்கையைப் பகிரும் “சாரு நிவேதிதா” ஸ்பெஷல் படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபாலிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்று புரியாமல் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். ஒருவழியாய் இந்தக் காரணமாய்த்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டேன். நான் அவதானித்த முடிவு சரிதானா என்று கிளாரிபிகேஷன் செய்ய ஒரு ப்ரட்யூசரிடம் அமலாபாலிடம் என்ன ஸ்பெஷல் என்று கேட்டேன்.

“அட குஞ்சு இது கூட உனக்குத் தெரியவில்லையா? அமலாவிடம் இரண்டு இருக்கு? “ – என்றார்.

“ரெண்டா?” – என்றேன்.

“அட ஆமாப்பா எல்லோருக்கும் ஒன்னுதானே இருக்கும், அமலாவிடம் இரண்டு இருக்குப்பா? “ என்றார்.

எனக்கு புல்லரித்து புல்லடித்தது போல ஆகி விட்டது.

அன்பு ரசிகப் பெருமக்களே, உங்களுக்கும் தெரிந்திருக்கும். அமலாவிடம் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு இருக்கிறது. அது என்ன ஒன்னு??? கேள்வி கேட்பவர்கள் உடனே அனாதியின் பிளாக்கை படிப்பதிலிருந்து ஓடி விடுங்கள். இல்லையென்றால் நடப்பதே வேறு….

- குஞ்சு


தெ டுக் ஆல் ஃப்ரம் மீ !

பிப்ரவரி 27, 2012

 அனாதி,

எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் ஹோட்டல் தொழில் எப்படி இருக்கிறது? அடிக்கடி அல்ல எப்போதெல்லாம் நெட்டுக்கு வருவேனோ அப்போதெல்லாம் அனாதியை திறந்து பார்த்து விடுவேன். அப்படி ஒரு க்ரேஸ் !

பெண்களைப் பற்றிய உங்களின் பல பதிவுகள் என்னை வருத்தமடையச் செய்தாலும், திரு குஞ்சாமணியின் பதிவுகள் என்னை மேலும் மேலும் புண்படுத்தும். இவரைப் போன்றோரால் தான் என்னைப் போன்றவர்கள் படுகுழியில் விழுகிறோம். குஞ்சாமணிக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்.

நான் ஒரு முன்னாள் ஹீரோயின். தற்போது என் குடும்பத்தாருடன் அமைதியாய் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து பெற்றோர் மனவேதனை அடைந்து கொண்டு வருகின்றனர். நானும் எத்தனையோ முறை எனக்கு திருமணமே வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இத்தனைக்கும் நான் நடித்தது கொஞ்சமான படங்கள் தான். ஒவ்வொரு படத்திலும் நான் பெற்ற சம்பளத்தை விட, இழந்தது கொஞ்சமல்ல. அதற்கு நான் மட்டுமே காரணமாய் இருக்கிறேனே ஒழிய வேறு எவரையும் குறை சொல்ல முடியாது. ஆணாதிக்க உலகில் பெண்கள் என்றும் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தின் ஹீரோவிடம் சில நாட்கள், இயக்குனர்களுடன் சில நாட்கள் என்று என் நாட்கள் கழிந்தன அதன் பின் விளைவுகள் பற்றித் தெரியாமலே. தான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டுமென்ற ஆசை இருப்பவர்கள் சினிமாக்காரர்கள். இப்படியே ஒவ்வொரு நடிகனின் நண்பர்களிடமும் சில நாட்கள், சில படங்கள், சில பல லட்சங்கள் என்று நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இத்தனைக்கும் ஒரு நடிகன் என்னைத் திருமணம் செய்து கொள்ள உறுதி அளித்து “காதல்” என்ற பெயரில் மாயவலை விரித்து, அவ்வப்போது கிடைத்து வந்த பட வாய்ப்புகளையும் கெடுத்தான். அவனின் எதிரி நடிகன் என் மீது கண் வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சினிமாக்காதலன், அவனுக்கு என்னைக் கிடைக்க விடாமல் செய்த தந்திரம் தான் “காதல்” என்று அவன் வாயாலே சொல்லக் கேட்டேன். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். காதல் என்ற பெயராலே என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் கிடைத்து வந்த பொருளைக்கூட தடுத்து விட்டான். அவன் இப்போது பெரிய நடிகன், கோடிகளில் சம்பளம் வாங்குகின்றான்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், சினிமாவில் பிழைக்க வரும் பெண்களை “ருசித்துக்” கொண்டிருக்கிறான்.  நடிகன் என்று மட்டுமல்ல இயக்குனர்கள் என்ற நச்சுக்கிருமிகள் இருக்கின்றார்களே, அவர்கள் செய்யும் செயல்தான் கொடுமையிலும் கொடுமை. நீங்கள் அது பற்றி பல பதிவுகளை எழுதி இருக்கின்றீர்கள். அதற்கும் மேல் அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தவரைக்கும் பெண்களின் இளமையின் அனுபவிப்பார்கள். அதன்பிறகு அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு தெருவோரம் கிடக்கும் காய்ந்து போன மனிதனின் கழிவு போலக் கிடப்போம். சினிமாவில் பெண்களின் சதையைத் தின்கின்றார்கள். காசு இருப்போர் காசைக் கொட்டி தின்கின்றார்கள். காசில்லாத ரசிகர்கள் கண்களாலே தின்கின்றார்கள்.

இன்றைக்கு என்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை. எதுவுமே இல்லை. எதைக் கொடுப்பது? யாருக்குக் கொடுப்பது? எதுவும் புரியவில்லை. கண் கெட்டுப் போய், மூளையும் சிந்திக்கவும் மறுக்கிறது. அடிக்கடி தற்கொலைக்கான எண்ணம் தலை தூக்குகின்றது. அப்படிச் செய்தால் அதையும் செய்தியாக்கி “பணம்” செய்து விடுவார்கள் பத்திரிக்கை ஜாம்பவான்கள். எனக்கு மனதில் உறைக்கும் ஒரே ஒரு வரி சொல்லுங்கள். நான் எப்படி இந்த எண்ணத்திலிருந்து வெளி வருவது ? உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

- அனு

மேற்படி கடிதம் வந்தவுடன் அவரின் ரிட்டர்ன் சம்மதத்துடன் அவரின் கடிதம் எடிட்டிங் செய்து வெளியிடப்படுகிறது.

பதில் :

இந்த உலகில் எவரும் யோக்கியமில்லை. யோக்கியமற்றவர்களால் மனதும், உடலும் பாதிக்கப்படும் போது அதன் காரணம் நீயாக இருக்க முடியாது. நேர்மையற்றவர்கள் இருக்கும் உலகிலே உன்னைப் போல மனவருத்தப்படுவோர் ஏன் சாக வேண்டும்? உலகிற்கு நல்லவன் தேவையே இல்லை. தீயவர்கள் தான் தேவை. நல்லவர்களால் நிரம்பிய உலகத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? உலகம் எப்படித்தான் இயங்க முடியும்? தீயவர்களால் தான் உலகம் இயங்கும். நீ ஒரு தவறும் செய்யவில்லை. பின் ஏன் மன சஞ்சலப்படுகின்றாய்? பிறருடன் படுப்பது தவறென்றால் ஆண், பெண் இனமே இருக்கக்கூடாது அனு. இது நாள் வரை அனுபவம் பெற்றாய் என்று வைத்துக்கொள். இனி எப்படி வாழ வேண்டுமென்று “ சாமியார்களோ, போதனையாளர்களோ” உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. உனக்குத் தெரியும் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று. அதன்படி வாழ். வாழ்த்துக்கள் ! டேக் கேர் !

- அனாதி


சுடப்படும் மனிதப் பறவைகள்

பிப்ரவரி 20, 2012

அனாதியில் முன்பே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு அரசால் நீக்கப்பட்டு, அணு உலை செயல்படுத்தப்படும் என்று எழுதி இருந்தோம். தேடிப்பிடித்து படித்துக் கொள்ளுங்கள்.

எத்தனை போராட்டம் நடந்தாலும், எத்தனை எத்தனையோ தற்கொலைகள் நடந்தாலும், லட்சக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா? இல்லாத மக்களுக்கா அரசாங்கங்கள் இயங்குகின்றன? ஓட்டுப் போட ஏழைகளுக்கு அனுமதியில்லை என்று ஒரு சட்டம் வந்தால் தெரியும், மொத்தமாய் ஏழைகளைக் கொன்று குவித்து விடுவார்கள் அரசாங்கங்கள்.

ஓட்டுப் போடுவதற்காக ஜன நாயகம் இருக்கிறது. ஓட்டுப் போடுகின்றார்கள் என்பதற்காக ஏழைகள் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பணத்தின் முன்னே கடவுள் கூட சல்யூட் அடிக்கும். திருப்பதிகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏழைகளுக்கு இந்தியாவில் வாழ அனுமதிக்க காரணம்ஐந்தாண்டுகளுக்கு ஓட்டுப் போடுவது”. அதைத் தவிர அவர்கள் வேறு எதையும் சிந்தித்துப் பார்ப்பது தவறு என்று அவர்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது. எத்தனைதான் சொன்னாலும் புரியாத மக்களுக்கு என்னதான் சொல்லிக் கொண்டிருப்பது.

தமிழகத்தின் பிற பகுதி மக்கள் மின்சார வெட்டினால் பாதிக்கப்பட்டு, கூடங்குளம் அணு உலையை இயங்க வை என்று போராட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதைத்தான் அடுத்து நடக்கப் போகும் நிகழ்வாக நாங்கள் அறிந்தோம். விரைவில் அணு உலை இயங்கப்போகின்றது. எத்தனை போராட்டம் வந்தாலும் பணத்தின் முன்னே தோற்றுப் போய் விடும். பார்த்துக் கொண்டே இருங்கள். நாங்கள் சொல்வதுதான் நடக்கப்போகின்றது.

அரசியல் என்றால் என்ன என்று நினைக்கின்றீர்கள்? அரசியல் என்றால் அழிப்பது. அழித்துக் கொண்டே இருப்பது அரசியல். யாரை அழிப்பது என்கின்றீர்களா? காசுக்காக, பதவிக்காக மக்களை மட்டுமல்ல தன் மக்களையும், நண்பர்களையும் கூட அழிக்கலாம். அதுதான் அரசியல்.

தாய் நாடும், தாய் மண்ணும், பிறந்த மண்ணும் எந்த ஒரு மனிதப் பிறவிக்கும் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத சுவடுகள். பெற்ற தாயை அவமதிப்பவனாக இருந்தாலும் சரி, பிறந்த மண்ணை அழிக்க நினைப்பவனாக இருந்தாலும் அவனை எதிரியாகத்தான் நினைப்பார்கள். ஆனால் கூடங்குளம் பகுதி மக்கள் தங்கள் தாய் மண்ணை இழந்து விட்டு, பிறருக்கு மின்சாரம் கொடுக்க வேண்டுமாம். எவனாவது நடு வீட்டிற்குள் அணு குண்டினை வைத்துக் கொண்டு வாழ விரும்புவானா?

கூடங்குளத்தை அழிக்க முனையும் அணு உலை மின்சாரம் தேவை என்று போராடுபவர்கள், பேசாமல் தங்கள் இல்லங்களையும், பிசினஸ்ஸுகளையும் கூடங்குளத்திற்கு மாற்றி விடலாம். முடிந்தால் தன் மனைவி மக்களோடு கூடங்குளத்தின் அணு உலை ரியாக்டருக்குள்ளே குடியே இருக்கலாம். கூடங்குளத்தினை பிறந்த மண்ணாக கொண்டவர்களுடன் அணு உலை வேண்டும் என போராடுபவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளலாம். மின்சாரம் தேவைப்படுபவர்கள் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்குள்ளேயே சென்று குடியிருக்கலாம். அரசு அணு உலையை நடத்தியே தீரும். மக்கள் வெந்து வெதும்பி அணுக்கதிருக்குள் சுருண்டு சாக வேண்டியதுதான் விதி. லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த டவ் கெமிக்கல் ஒலிம்பிக்கில் ஸ்பான்சர். தன்னால் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு காசு கொடுக்க மறுக்கும் டவ், விளையாட்டு வீரர்களுக்கு செலவு செய்கிறது.  அதை ஏற்றுக் கொள்ளும் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு.

கூடங்குளம் பகுதி மக்களுக்கு இது ஒன்றுதான் தீர்வு.

– அனாதி


2ஜியை விட கொள்ளையோ கொள்ளை ! மக்களே ஜாக்கிரதை

பிப்ரவரி 15, 2012

இன்றொரு பிளாக்கினைப் படிக்க நேர்ந்தது. படித்து முடித்ததும் கிர்ரென்று ஆகி விட்டது. எத்தனையோ நண்பர்கள் ஷேர்மார்க்கெட்டில் பணம் போயிடுச்சு, போயிடுச்சு என்று கதறுவார்கள். இதையெல்லாம் தடுக்க முடியாதா அரசாங்கம் என்று நான் யோசித்தது உண்டு. பணக்கார கம்பெனிகளுக்காகத்தானே அரசாங்கம் நடைபெறுகிறது. மக்களிடமிருந்து பணத்தை உருவும் அயோக்கிய சிகாமணிகளுக்குத்தானே சட்டம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.

எனக்கு ஷேர்மார்க்கெட் பிடிக்கவே பிடிக்காது. இதோ ஷேர் மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் அடிக்கப்படும் கொள்ளையை ஒருவர் விரிவாக பதிவெழுதி இருக்கிறார். உடனடியாக ஷேர்மார்க்கெட்டில் பணம் போட்டிருப்போர் அதை திரும்பப் பெற்று ஏதாவது நிலத்தில் முதலீடு செய்து வையுங்கள். உங்கள் பெயருக்கு ஒரு நிலமாவது இருக்கட்டும். கூட்டுக் கொள்ளைக்காரர்களிடமிருந்து உங்களது உழைப்பை பாதுகாத்திடுங்கள்.

http://anindianviews.blogspot.in/2012/02/2g_14.html

- பஞ்சு


இன்பரசத்தில் முதல் இன்பம் அறிமுகம்

பிப்ரவரி 10, 2012

என்னை ப்ராடு என்று குறிப்பிட்ட பிரச்சனா என்ற வாசகருக்கு நன்றியோ நன்றி. கருணாநிதியை திட்டாதவர்கள் பாவம் செய்தவர்கள், இத்தனை பேர் திட்டி அவர் என்ன கெட்டா போய் விட்டார். பாராட்டத்தான் முடியவில்லை, திட்டவாவது செய்தால் தான் நான் மகிழ்வேன் (அவர் பெயர் எழுதினாலே இப்படியெல்லாம் வார்த்தை வருகிறது).

அதுமட்டுமல்ல நானென்ன சாரு மாதிரி விமர்சனத்தை ஏற்காமல் எதிர்த்துப் பேசுவேன் என்றா நினைக்கின்றீர்கள்? மேலும் பிறருக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைப் பற்றி வயிறெரிந்து பேசுவேன் என்றா நினைத்தீர்கள். நிச்சயம் இல்லவே இல்லை.

நானே ஒத்துக் கொள்ளுகிறேன், “ நானொரு அக்மார்க் நல்லவன்”. என்னைப் போல நல்லவனை இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கவே முடியாது. நான் நடந்து செல்லும் பாதையின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசினீர்கள் என்றால் பூலோக சொர்க்கமே உங்களுக்கு கிடைக்கும். அந்தளவுக்கு நான் நல்லவன் (டேய் குஞ்சு… என்னடா என்னடா இது? : மனச்சாட்சியின் குரல்) அய்யய்யோ தவறாக எழுதி விட்டேன் நல்லவன் என்றச் சொல்லை அக்மார்க் அயோக்கியன் என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சோ இனிமேல் (இது ஆகையால் என்பதைக் குறிக்கும் சோ) நீங்கள் என்னவேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. மேலும் ஒன்று நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்ளவில்லை என்றால் கொடுக்க விரும்பிய பொருள் உங்களிடம் தானே இருக்கும்? ஆகவே… வேண்டாம் எனக்குள் அழுது விடுவேன் இப்படித் தொடர்ந்து எழுதினால்.

இனி இன்பரசம் பற்றிப் பார்ப்போம்.

அவன் ஒரு மாபெரும் போர் வீரன். அவன் வாளில் பட்டு உருண்டோடிய தலைகள் கோடானு கோடி. அவன் வந்தானென்றால் மன்னரும் எழுந்து நின்று தலை குனியும் அளவுக்கு வீரன். உலகையே புரட்டி வரும் காற்றுக் கூட அவன் அருகில் நெருங்கப் பயப்பட்டு அந்தப்பக்கமாய் ஓடி ஒளிந்து விடும். அப்பேர்ப்பட்ட மாவீரனுக்கு போர், சண்டைகளில் வெறுப்பு வந்து விட அவன் மனது சொர்க்கம், நரகம் என்பது பற்றி உள் விசாரணை செய்து கொண்டிருந்தது.

குதிரையின் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தவன் கண்களில் ஒரு பிக்கு தென்பட்டார். ஏனோ அவரைப் பார்த்ததும் பேச வேண்டுமென தோன்றியதால் குதிரையிலிருந்து இறங்கினான்.

”சொர்க்கம், நரகம் போக வாசல் எங்கிருக்கிறது என்பது பற்றி எனக்குச் சொல்லுங்கள்?” என்றான் மாவீரன்.

“உன்னைப் பார்த்தால் வீரனாக தெரியவில்லையே, பிச்சைக்காரன் போலிருக்கிறாய்?” “ என்றார் பிக்கு.

கோபம் கொண்டவன் அவரை வெட்ட வாளை உருவ, “அட அட்டைக்கத்தியை வைத்தா என்னைக் கொல்லப்போகின்றாய்?” என்று பிக்கு நக்கல் செய்ய, கோபத்தின் உச்சிக்கே சென்றான் மாவீரன். வாளால் அவரைக் கொல்ல நெருங்கும் போது,

”இப்போது பார்த்தாயா நரகத்தின் கதவு உனக்கு திறக்கப் போவதை” என்றார் பிக்கு.

சட்டென்று உள் மனது உடைய வாளைக் கீழே போட்டான் மாவீரன். அப்போதும்  பிக்கு அவனைப் பார்த்துச் சொன்னார் “ இப்போது உனக்குச் சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது”.

அன்பு நண்பர்களே,இக்கதையை நீங்கள் படித்து முடித்த போது நிச்சயம் உங்களுக்குள் ஒன்று அது ஏதோ ஒன்று தோன்றியிருக்கும். அது தான் நான் தலைப்பிட்ட “இன்பரசம்”. அடுத்த அடுத்த இன்ப ரசங்கள் நம் தளத்தில் பெருக வேண்டும் என ஆவல்.

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

குஞ்சாமணி


இன்பரசம் – குஞ்சாமணியின் புதிய பகுதி

பிப்ரவரி 9, 2012

அன்பு நண்பர்களே,

விரைவில் தமிழகத்தின் தமிழர்கள் அகதிகளாய் மாற இருக்கின்றார்கள். வேறு வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நிலையில், காய்ந்து போன வறட்டு எலும்புகளாய் குத்தும் நினைவுகளில் குளிர்ச்சி பொறுந்திய பசுமை நினைவுகளாய், தகிக்கும் கோடையில் வீசும் தென்றலாய் இருக்கும் படியாய், குஞ்சாமணியாகிய உங்களின் மனம் கவர் நண்பன், உங்களுக்காக புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்து எழுத இருக்கிறேன். இது எத்தனை நாள் தொடரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இன்பரசம் – பக்தி பரவசம் சொட்டும் அருமையான ஆஆஆஆஆன்மீக பதிவுகளாய் மலர இருக்கிறது.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ரசிகர்களுக்காய் எழுதப்பட்டும் இந்த இன்பரசம் உங்கள் கனவினை விட்டு விலகவே விலகாது என்று அறிவிக்கின்றேன்.

- தொடர்ந்து இணைந்திருங்கள்

உங்கள் மனம் கவர்

குஞ்சாமணி


தமிழகம் ஒழிர்கிறது

பிப்ரவரி 8, 2012

அனாதிக்கு, இத்தனை நாளாக உடல் உழைப்பால் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாங்கிய அரைகிரவுண்ட் வீட்டினை அடகு வைத்து வங்கியில் லோன் வாங்கி கம்பெனி ஒன்றினை உருவாக்கினேன். காலை 9 மணியிலிருந்து 12 மணி வரையிலும் கரண்ட் இல்லை. மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கரண்ட் இல்லை. இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை கரண்ட் இல்லை. இரவு 9 மணியிலிருந்து 10 மணி வரை கரண்ட் இல்லை. ஆக மொத்தம் எட்டு மணி நேரம் கரண்ட் இல்லை. ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை மொத்தம் 13 மணி நேரத்தில் எட்டு மணி நேரம் கரண்ட் இல்லை என்றால் எப்படி தொழில் செய்வது? வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்கவாவது வேலை செய்ய வேண்டுமே அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

நான் பட்டினியாய்க் கிடக்கலாம், எனக்குப் பிறந்த கொடுமைக்காக குழந்தைகள் பட்டினி கிடக்கலாம், நன்றாக வாழ வைப்பார் என்று நம்பி வந்த மனைவியைக் கூட பட்டினி போடலாம். ஆனால் என்னை நம்பி வந்திருக்கும் வேலைக்காரர்களை பட்டினி போடலாமா? மாதம் ஐந்து தேதிக்குள் வங்கியில் இருந்து வசூல் செய்ய வந்து விடுவார்கள். வாடகை கட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். நான் என்ன செய்வேன்? தொழில் நடந்தால் அல்லவா பிழைக்க முடியும். அதற்கு கரண்ட் வேண்டுமில்லையா? அதைத் தரவே முடியாது, உன்னால் ஆனால் உயிரோடு இரு, இல்லையென்றால் குடும்பத்தோடு செத்துப் போ என்கிறதே இன்றைய அரசாங்கம்?

நான் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் கட் இல்லாமல் செய்வேன் என்று புரட்சி முழக்கம் செய்தார்களே, ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் பவர் கட் செய்தவர்கள் இன்றைக்கு அதை எட்டு மணி நேரமாக மாற்றியது தான் அவர்களுக்கு ஓட்டு போட்ட என் போன்ற மக்களுக்கு அவர்கள் காட்டும் செய்நன்றிக் கடனா? சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம் பவர் கட், ஆனால் பிற பகுதிகளில் எட்டு மணி நேரம் பவர் கட் என்பது தான் சமதர்மத்தைச் சொல்லும் ஜன நாயக ஆட்சியா?

சென்னைக்காரர்கள் ஏசியில் உறங்கி உல்லாசத்தில் மகிழ்கின்றார்கள். அவர்களுக்கு நன்கு உரக்கம் வர கரண்ட் கொடுக்கும் அரசு, பிழைக்க உயிர் நாடியாக இருப்போருக்கு, தவிப்போருக்கு கரண்ட் கொடுக்க மறுப்பது ஏன்? இப்படியே சென்று கொண்டிருந்தால் நான் என் குடும்பத்தோடு தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். அதைத்தான் இன்றைய அரசு விரும்புகிறதா? ஆட்சிக்கு வந்த உடனே கரண்ட் கொடுக்கிறேன் என்று பேசியதெல்லாம் மக்களை ஏமாற்றத்தானா? இது தான் ஆட்சியா? இது தான் நீதியா? இதுதான் தர்மமா? சென்னை மட்டும் வாழ வேண்டும். பிற பகுதியினர் எல்லாம் கரண்ட் இல்லாமல் துன்பப்பட வேண்டுமென்று இந்த அரசு நினைக்கிறதா?

இது பற்றி நீங்கள் ஏதும் எழுதுவது இல்லையே ஏன்? அதிகாரத்திற்கு பயந்து போய் விட்டீர்களா? ”வெளிச்சத்தில்” என்று பெயர் வைத்துக் கொண்டு இது நாள் வரையிலும் இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றி ஏதும் எழுதாமல் இருக்கின்றீர்களே ஏன்? உங்கள் மீதான நம்பிக்கை அவ நம்பிக்கையாய் மாறி விட்டது அனாதி.

-திருப்பூரிலிருந்து சுதர்சன்

———————- 000 ——————–

திரு சுதர்சன், உங்களின் கடிதத்தை அப்படியே பதிவேற்றி விட்டேன். மக்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ அனுமதிக்கவும், அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்பதும் ஒரு அரசின் வேலை. ஆனால் தமிழகத்தினை ஆண்டு வந்த அரசுகள் எதுவும் அப்படியான வேலை எதையும் இதுகாறும் செய்யவே இல்லை என்பதுதான் வேதனை. அதற்காக தற்கொலை என்பதெல்லாம் தேவையில்லை. தமிழகத்தில் வாழவே முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் மனதில் இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையின்மை கோடாய் விரிய ஆரம்பித்திருக்கின்றது. இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சியே பரவாயில்லை என்று பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். முக்கிய காரணம் “மின்வெட்டு”. இது குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கின்றது. இந்தச் சூழலில் மின்சாரக்கட்டணம் அதிகமாகின்றது என்றுச் சொல்கின்றார்கள். இது மேலும் மேலும் ஆட்சியின் மீதான அவ நம்பிக்கையை அதிகப்படுத்தி விடும். பால் விலை, பஸ் கட்டணம் விலை உயர்வு வெகு சாதாரணமானது. மின்சாரம் கொடுக்க மாட்டோம், ஆனால் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்பது “எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போலாகும்”.

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே எட்டு மணி நேரம் பவர் கட் என்றால் கோடை காலத்தில் நிச்சயம் பத்து மணி நேரம் பவர் கட்டாக சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் இந்த அரசு மட்டுமல்ல, பத்தாண்டுகள் ஆண்ட திமுக அரசு தான் முதற்காரணம். மத்திய அரசு மாநில அரசை வதைக்கின்றது என்றுச் சொல்கின்றார்கள். அல்லது திமுகவினரின் சதியாக கூட இருக்கலாம்.

சினிமாக்காரர்கள் தற்போதைய முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் விழா நடத்துகிறோம் பேர்வழி என்று அனுமதி கேட்டார்கள். எத்தனை ஆயிரம் வாட்ஸ் கரண்ட் செலவாகும், தமிழகமே இருளில் தவிக்கும் போது விழாவாது ஒன்றாவது என்று அப்படிப்பட்ட எந்த ஒரு விழாவையும் நடத்தவே கூடாது என்று மறுத்து விட்டார்கள் இன்றைய முதல்வர் என்று முக்கியப் பொறுப்பில் இருக்கும் சினிமா இயக்குனர் ஒருவர் என்னிடம் சொன்னார். பேருக்கும் புகழுரைக்கும் ஆசைப்படும் அரசியல்வாதியில் தற்போதைய முதல்வர் வித்தியாசப்படுகின்றார். ஆகையால் மின்சாரம் இருந்தும் மின்சாரம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது. எங்கிருந்து மின்சாரம் கொடுப்பது? இருந்தால் அல்லவா கொடுப்பதற்கு? இருப்பதை முடிந்த அளவு பகிர்ந்து கொடுக்கின்றார்கள்.

இருப்பினும் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம் மின்வெட்டு என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். தமிழகமெங்கும் ஒரே மாதிரி பவர் கட் செய்வதுதான் சரியானது. சென்னைக்கு மட்டும் ஸ்பெஷல் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. கோர்ட் படி ஏறினால் இதற்கொரு வழி பிறக்கும். உங்களூர் மக்கள் ஒன்று சேர்ந்து அத்தகைய ஒரு செயலைச் செய்யலாம். சென்னையில் அதிகப்படியான மின் உபயோகம் செய்கின்றார்கள். அங்கும் ஒரே அளவு நேரம் மின் வெட்டினை அமல் படுத்தினால் கிடைக்கும் மின்சாரத்தில் தமிழகமெங்கும் ஓரளவு மின்வெட்டினைக் குறைக்கலாம்.

இந்த ஆட்சியில் பலவித சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதுபற்றி விரிவாக விரைவில் எழுதுவோம். அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?அதிகாரத்திற்கு பயப்பட நாங்கள் திருட்டுத்தனமா செய்து வருகின்றோம். மடியில் கனம் இருந்தால் வழியில் பயமிருக்கும். அப்படியான எந்த ஒரு கனமும் எங்களிடத்தில் இல்லை.

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இத்தகைய பிரச்சினைக்கு நான் ஆட்சிக்கு வந்ததும் சரி செய்வேன் என்றுச் சொல்லி ஓட்டு வாங்கினார்கள் தான். நான் இல்லையென்றுச் சொல்லவில்லை. ஆனால் எங்கிருந்து கரண்ட் வாங்குவது என்பதுதான் பிரச்சினை. கூடங்குளம் அணு உலையின் பிரச்சினை உங்களுக்குத் தெரியும். மத்திய அரசாங்கத்தின் “கண்ணை விற்று சித்திரம் வாங்கும்” இத்தகைய அணு உலைகளின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பற்றி எனக்கு எதுவும் எழுத தோன்றவில்லை.

நீங்கள் எழுதி இருப்பதை வைத்துப் பார்த்தால், நிலைமை இப்படியே சென்றால் விரைவில் தமிழர்கள் தமிழகத்திலிருந்து அண்டிப் பிழைக்க வேறு மாநிலங்களுக்கு அகதிகளாய் செல்லத்தான் நேரிடும். சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு விடும். அக்குடும்பங்கள் கடனாளி ஆகும். கடன் கட்ட முடியாமல் தற்கொலைகள் அதிகமாகும். இதைத் தமிழர்களின் விதி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்று குவித்த போது நாமெல்லாம் செம்மொழி விழாவில் ஆட்டம் பாட்டங்களை பார்த்து ரசித்தவர்கள் தமிழ் நாட்டவர்கள். இப்படியான எண்ணப் போக்குதான் தமிழர்களுக்கு என்ன துன்பமிழைத்தாலும் சகித்துக் கொள்வார்கள் என்று பிறர் நினைக்கும்படி ஆகி விட்டது. ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றால் ஆட்சி செய்பவர்களுக்குப் பயமிருக்கும். அந்தக் காலத்தில் ஐந்து பைசா பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்காக, தெருவில் இறங்கிப் போராடினார்கள் மக்கள். அரண்டு போன ஆட்சியாளர்கள் உடனடியாக கட்டணத்தைக் குறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு மக்களை போராட்டத்திற்கு அழையுங்கள் பார்ப்போம். போடா போடா என்பார்கள்.

தமிழர்கள் ஆட்டு மந்தைக் கூட்டமாய் மாறி சினிமாக்காரர்களின் பெண்டாட்டிகள் வைர ஒட்டியாணம் போட தங்கள் காசுகளை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மின்வெட்டு உங்கள் பிரச்சினை மட்டுமல்ல, மொத்த தமிழகத்திற்கும் மன்னிக்க சென்னை தவிர்த்த தமிழகத்திற்கும் பிரச்சினை. கூடிய விரைவில் சரி செய்வோம் என்கிறார்கள். அதுவரை பொறுத்து இருங்கள் சுதர்சன். என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம். “இதுவும் கடந்து போம்” என்று எண்ணிக் கொள்ளுங்கள். விரைவில் தமிழக அரசு மின்வெட்டினை முற்றிலுமாய் நீக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை சுதர்சன்.

- அன்புடன் அனாதி


naked lies (6) – கற்பு – பணம் – குடும்பம்

பிப்ரவரி 5, 2012

அவர் ஒரு பிரபல நடிகை. ஆரம்பகால படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சோர்வுற்ற அவரின் எண்ணங்கள் காசை நோக்கித் திரும்பியது. டிவியிலோ அல்லது பேப்பரிலோ ஒரே ஒரு படம் வந்தால் கூட போதும், அதை வைத்து பிரபல்யம் என்றுச் சொல்லி காசு செய்யும் கூட்டத்தினரைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் ஏற்பட, காசுக்கான ஆற்றுப் பாதை அவரின் வீட்டினை நோக்கி திருப்பி விடப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மையான பணக்காரர்களின் பார்வையில் பதிந்த அந்த நடிகையை அப்ரோச் செய்ய அனைவரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஒருவன் தான் தான் அவருக்கு எல்லாம் என்று தினசரி ஒன்றில் செய்தி வரும்படிச் செய்தான். தினமும் அழைப்புகள் என்று நடிகை பிசியாக மாற ஆரம்பித்தார்.

நடிகையிடம் ஒரு விஷேசம் என்னவென்றால், அதை நடிகையிடம் நட்பு கொண்டவர் சொல்வதையே இங்குச் சொல்கிறேன்.

”அவர் என்ன செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்து, வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும் கலையைக் கற்று வைத்திருக்கிறார். மனைவியிடம் கூட கேட்கத் தயங்கும் சிலவற்றை அவரிடம் கேட்டால் உடனே செய்வார். அதன் காரணமாய் அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்கள் ‘காசால் அவரைக் குளிப்பாட்டினார்கள்’. சிலர் ஒரு படி மேலே சென்று பங்களாக்கள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் என்று வாங்கிக் கொடுத்தார்கள். ஏதோ ஒன்றினை வாங்க வேண்டுமெனில் போன் செய்தால் போதும், மறு நிமிடம் அந்த விஷயம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அளவிற்கு அவரின் நண்பர்களுக்கு படுக்கையில் சேவகம் செய்வார்”. அவர் மனைவியை விட ஒரு படி மேலானவர்” என்றார் எனது நண்பர்.

கேட்ட எனக்கே அவருடன் ஒரு நாளைச் செலவழிக்கலாமா என்று தோன்றியது. நண்பர் அவருக்கு காரொன்றினைப் பரிசாக வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் அவர் சமூகத்தில் ஆன்மீக சிம்பலாக காட்டப்படுபவர்.

அவரிடமிருந்து நடிகையின் தனி போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டேன். நண்பர் நான் அவரின் நம்பரை வாங்கியதை நடிகையிடம் போட்டுக் கொடுத்து விட்டார் போல.

ஓய்வான ஒரு நேரத்தில் அவரை அழைத்தேன். “அனாதி, நீங்களா? “ என்று கத்திய கத்து என் காதின் செவிப்பறையைக் கிழித்தது.

”நேரில் வருகின்றீர்களா?” என்றழைத்தார். அதன்படி சந்தித்தேன்.

கற்பு பற்றி அவர் ஒரு வித்தியாசமான விளக்கம் சொன்னார். கற்பு வாழ்க்கை என்பதெல்லாம் காசைப் பற்றி ஆசைப்படாத கணவனுக்கும், சுற்றதாருக்கும் ப்ரியமாய் இருக்கும் பெண்ணுக்கு வேண்டுமானால் ஒத்து வரும். வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு கற்பு என்பது காசு சம்பாதிக்கும் பொருள் என்றார்.

”இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன ?” என்றேன்.

காசுக்கு மட்டுமே ஆசைப்படும் ஆண்களில் எவராவது ஒருவன் எனக்கு தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் “காதலிக்கிறேன்” என்றுச் சொல்லி என்னிடம் நிச்சயம் வருவான். அவனிடம் நான் தாலி கட்டிக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாய் வாழ்வேன் என்றார் நடிகை.

உலகத்தில் இப்படியும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. எத்தனையோ விளங்கிக் கொள்ள முடியவே முடியாத மனித மனங்களின் ரகசியத்தில் இதுவும் ஒரு வகையான வாழ்க்கை போலும் என்று நினைத்துக் கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

- அனாதி.


ஹீரோயினுக்கும் ஹீரோவிற்கும் சண்டை

பிப்ரவரி 2, 2012

தலைப்பு தற்போதைய நிகழ்விற்கு வெகு பொறுத்தமாய் அமைந்து விட்டது. அம்மா, கேப்டன் பிரச்சினைக்கும் நயன், பிரபுதேவா பிரச்சினைக்கும் ஒரே தலைப்பாய் ஆகி விட்டது பாருங்கள்.

துரோகம் ஒன்றே அரசியலில் பெரிய மாற்றங்கள் உருவானதற்கான அடிக்காரணமாய் இதுவரையிலும் இருந்திருக்கின்றன. யாரோ ஒருவரின் துரோகம் மாபெரும் புரட்சிக்கு வித்திடுகின்றன.  இலக்கியத்தில் துரோகத்தின் வழி தான் படைப்புகள் உருவாகின்றன. ஆன்மீகத்தில் கூட துரோகத்தின் வெளிப்பாடகவே கடவுள்கள் வருகின்றார்கள். மனிதர்களுக்குள் அவரவர் தகுதிக்கேற்ப துரோகங்களை சந்தித்திருக்கின்றார்கள்.

இந்திய மக்களுக்கு ராஜா செய்த துரோகம் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் கபில் சிபல், கருணா நிதிக்களுக்கு ராஜா எதுவும் செய்யவே இல்லை என்று தோன்றி இருக்கிறது. இன்றும் சப்பைக் கட்டு கட்டி வருகிறார் கபில் சிபல். இது என்ன விதமான அரசியல் என்று அவருக்கே தெரியவில்லை போலும். இத்தனைக்கும் அவர் ஒரு வக்கீல்.

பிரபு தேவா, நயன் பிரச்சினை என்பதும் ஒரு வகை துரோகம் தான். நயன் வருந்துவதில் பயனில்லை. அவர் நடிக்க மட்டுமே செய்திருந்தால், அவருக்கான இந்த வலி வந்திருக்காது. ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து மாங்கல்யத்தை இறக்கி விட்டு, அந்த மாங்கல்யத்தை தான் சூட நினைத்த பலன் தான் நயனுக்கான வலிக்கு காரணம்.

ஹீரோயினுக்கும், ஹீரோவிற்கும் பிரச்சினை வரவில்லை என்றால் சினிமாவில் சுவாரசியம் இருக்காது. நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று ஹீரோவை திட்டும் ஹீரோயின், வேறு வழி இன்று ஹீரோவை மன்னித்து விடுவாள். முடிவில் ஹீரோவிற்கே வெற்றி கிடைக்கும். அது உண்மையில் நடக்குமா என்பது தான் கேள்வி. விடை எப்போது கிடைக்கும். பொறுத்திருப்போம்.

- பஞ்சு


Follow

Get every new post delivered to your Inbox.

Join 154 other followers

%d bloggers like this: