நக்கீரன் பத்திரிக்கை செய்திகளை உட்டாலக்கடி செய்து திரித்து வெளியிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. நக்கீரன் காமராஜ் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை சவுக்கு தளம் விரிவாக எழுதி இருந்தது. மீடியா மாஃபியாவில் நம்பர் ஒன் நக்கீரன் என்று அது தொடர்ந்து எழுதி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திமுக தலைவருக்கு நெருக்கமான பத்திரிக்கை என்று பல கதைகள் சொல்லுகின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நக்கீரன் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் கட்டுரை ஒன்று “ மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் – விவரிக்கும் ஜெயலலிதா” என்ற தலைப்பிடப்பட்டு அச்செய்தி வெளியாகி இருக்கிறது. அதை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள்.
மீடியாக்கள் தற்போது முதல்வர் செய்து வரும் சில அட்டகாசமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து, அதுபற்றிய செய்திகளை வெளிச்சமிடுவது எதிர்பார்ட்டியினருக்கு “வயித்தெரிச்சலை” உண்டாக்கி இருக்கிறது. அதை எப்படியாவது கெடுக்க வேண்டுமென்பதற்காக நக்கீரனை வைத்து, இது போன்ற கட்டுரையை எழுத வைத்திருக்கிறார்கள் என்று 100000% அடித்துச் சொல்லலாம். இன்றைய முதல்வரின் இயல்பு பட்டென்று ஒரு விஷயத்தினை கையாள்வது. சிலரின் இயல்பு அது. அந்த இயல்பை மனதில் வைத்துக் கொண்டு, இப்படியான செய்திகளை உருவாக்கி, அவரைச் சிக்க வைத்திருக்கின்றார்கள். நேற்று வெகு விரிவாக நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது பற்றி கவரேஜ் வெளியானது. சில பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதையெல்லாம் செய்ய வைத்து, அதிமுக அரசின் மீதான எரிச்சலை ஏற்படுத்த முனைந்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். நக்கீரன் கோபாலை பெரிய மனிதராக கொண்டு வர இச்செயல் உதவும். கண்டு கொள்ளாமல் விட்டும், நக்கீரன் பத்திரிக்கையை முற்றிலுமாய் ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இப்படி பட்டவர்த்தனமாக அடிதடியில் ஈடுபடுவது நக்கீரன் கோபாலுக்கு நன்மையைத்தான் செய்யும். ஆள்பவர்களுக்கு தீமையாகத்தான் முடியும். முதல் கோணல்.. இனி கோணலாகவே தொடரும்.
பால், பஸ் டிக்கெட் விலையை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். இதை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே இப்படியான சதிச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இனி மீடியாக்கள் தன் எரிச்சலை அதிமுக அரசின் மீது காட்டும். சதியில் முதல்வர் சிக்கிக் கொண்டார்.
- பஞ்சு
நன்றி : நக்கீரன்
