தான் வாழ பிறரை ஏமாற்றும் பேர்வழிகள் மனிதர்களில் 100க்கு 99 பேர் இருக்கின்றார்கள். எங்கு நோக்கினும் சுய நலம். தன் சக மனிதனைக் கொன்று விட்டு, பதவி அதிகாரத்தில் இருக்கத் துடிக்கும் அழியப் போகும் மானிடர்கள் இவ்வுலகிலே கோடானு கோடி பேர் இருக்கின்றார்கள். எத்தனை எத்தனை மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? கோவிலுக்கு போவோர் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். படிக்காதவனை விட படித்தவன் தான் தன் சக மனிதனை அழிக்கின்றான். சர்ச்சுக்குப் போகும் அமெரிக்கர்கள் தான் உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயேசுபிரான் என்ன சொல்லி என்ன புண்ணியம்? கம்யூனிசம் பேசும் சீனாவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றார்கள். கம்யூனிச தத்துவத்தை விட மனிதன் மேலானவன் இல்லையா? தத்துவமும், கொள்கையும் மனிதனின் நல் வாழ்வுக்குதானே ஒழிய, மனிதனை அழிக்கவா இருக்கின்றன?
அன்பார்ந்த அனாதியின் வாசகர்களே, இதோ ஒரு பாடல் உங்களுக்காக. கேட்டு விட்டு மனதுக்குள் என்ன தோன்றுகிறதோ அதன்படி செய்யுங்கள்.
- பஞ்சு.

good