கதறினார் கண்ணீர் விட்டார் சி.எம்

ஜூலை 31, 2011

”என்னப்பா, சியெம் என்ன சொல்றாரு?”

“அட, ஆளு சும்மா வெத்து வேட்டுப்பா, என்ன விட்டுறுங்க, அவங்க கிட்டே சொல்லுங்க, நான் வேணா அப்ரூவரா மாறிடுறேன்னு அழுவுறானப்பா?”

“அப்படியா???”

“அதுமட்டுமா, என்னக் கொல்லத்தானே கூட்டிக்கிட்டு போறீங்க, உங்களுக்கு எவ்வளவு காசு வேணும்னாலும் தாரேன், விட்டுடுங்கன்னு அழுது துடிக்கிறானப்பா”

“ஓகோ… !”

“இப்படித்தானே நீங்கள் மொத்தம் மொத்தமாய் போட்டுத்தள்ளியவனெல்லாம் கதறியிருப்பான், இன்னிக்கு உனக்கு சங்குடான்னு, சொன்னாரு ஒருத்தரு, கேட்டானோ இல்லியோ, வேஷ்டியிலே மூத்தி போய்ட்டானப்போ”

“சி எம்முக்கு வேஷ்டியிலே மூத்தியா?”

”கழிஞ்சிட்டான். கர்மம் புடிச்சவன். பதவிக்கு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீயாடான்னு கேட்டாரு ஒருத்தரு, வாரா வாராம் குட்டிகளோடு படுக்கவில்லை என்றால் உனக்கு தூக்கமே வராதாமேன்னு சொல்லிக்கிட்டு பூட்ஸ் காலை ஓங்கினாரு பாரு, ஆளு கீழே விழுந்து காலைப் பிடிச்சிக்கிட்டு கதறுறான்”

“அட, நாந்தான்டா சி.எம் பேசுறேன்னுல்லடா பேசுவான்”

“ஆமா, ஆமா, இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா???”

“ஆக யாருக்கெல்லாம் என்கவுண்டர் லிஸ்ட்”

“இவனுகளுக்கு என்கவுண்டர் போட்டா, துப்பாக்கிக்கே கேவலம்பா?, வெளிய வாரதுக்குள்ளே காயடிச்சுருவானுங்க. இல்லேன்னா ஒரு வாரம் மாத்திரையக் கொடுக்கலன்னா, மொத்தமா போயிடுவானுங்க”

“அப்படியா சேதி, ஆக இனி வேட்டுத்தான்னு சொல்லு”

“அப்படித்தான்”

- பஞ்சரு பலராமன்

இது ஒரு சிறுகதை யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை.


வேலை தயார் !

ஜூலை 29, 2011

காசே வாங்காத வேலைக்காரன் தேவை. மேலதிக விபரத்திற்கு பாரு நீ பிளாக்கைப் பார்க்கவும்.

- பஞ்சு


அழகிய ஆபத்து – பஞ்சு vs குஞ்சு

ஜூலை 28, 2011

பஞ்சு :  பாகிஸ்தானில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்காக இந்தியா வந்திருக்கின்றாராம். பார்த்தியா குஞ்சு ?

குஞ்சு : எஸ் எம் கிருஷ்ணா இடத்துல நான் இருந்தா, பேசாம காஷ்மீரைக் கொடுக்கிறோம்னு சொல்லிடுவேன் பஞ்சு.

பஞ்சு : அடப்பாவி, ஏண்டா இப்படி இருக்கிறாய்?

குஞ்சு : பின்னே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இருக்கும் அழகுக்கு உலகத்தையே எழுதி வைக்கலாம். இது என்ன குட்டி காஷ்மீரு புடலங்காய்.

பஞ்சு : நீ உருப்படவே மாட்டியாடா?

குஞ்சு : டேய், பஞ்சு இப்படியெல்லாம் பேசுனா நீயெல்லாம் அயோக்கியன்னு ஒத்துக்குவாங்கன்னு உனக்கு நினைப்பாடா. உனக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நேரு மாமான்னு சொல்றீயே அவரு  ”கேரளா பெண்களைப் போல அழகிகள் உலத்திலேயே இல்லை” அப்படின்னு சொன்னாரு. அவரையெல்லாம் தலைவருன்னு ஒத்துக்கொள்ளும் இந்த உலகம், உண்மையே பேசி, உழைக்கும் குஞ்சுவை ஏண்டா தப்பா பாக்குறீங்க?

பஞ்சு : அவரு செத்துப்போய் எத்தனையோ வருஷமாச்சு, அவரை ஏண்டா உன் அரிப்புக்கு சொரிய அழைக்கிறாய்?

குஞ்சு : பாரு நிவேதிதாவை சொரிந்து விடும் கட்டுரைகளை அவரு பிளாக்குல போட்டுக்கிறாரே அதையெல்லாம் ஒத்துக் கொள்ளுவாய். ஆனால் நான் நேருவை துணைக்கழைத்தால் ஒத்துக் கொள்ள மாட்டாயாடா? என்னாங்கடா உங்க நியாயம்?

பஞ்சு : அடப்பாவி உனக்கு வேற ஆளே கிடைக்கவில்லையாடா. அவ்ரு பாட்டுக்கு ஏதோ கடலை போட்டாரு, அது ஓவரா புகைஞ்சு போச்சுன்னு, மாலையெல்லாம் போட்டுக்கிட்டு பாவத்தைப் போக்க போறாரு அவரைப் போயி ஏண்டா வம்புக்கு இழுக்கிறாய்?

குஞ்சு : என்னாது பாவத்தைப் போக்கறாரா? போடாங்…. சபரிமலைக்கு யாரெல்லாம் மாலை போடுவாங்க ?

பஞ்சு : ஆண்கள் அதிகமாக இருக்கும். அடேய்… அடேய்… என்னடா சொல்ல வாராய்???

குஞ்சு : நீதாண்டா ஒன்னா நம்பரு அயோக்கியன். உன் புத்தி எங்கே போறது பார் ! அவரு சதையை அடச்சே கதையை இளைஞர்கிட்டே பரப்பப் போறாருடா பஞ்சு…

பஞ்சு : ஓஹோ அப்படியா சேதி ! குஞ்சு, மொத மொதன்னு நாம பேசுறதை வாசகர்கள் படிக்கிறாங்க. இதுக்கும் மேலே பேசுனா இவனுங்களுக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சுடப் போறாங்க. போதும்டா…

குஞ்சு : அதெப்டி, குஷி மேட்டர் சொல்லாம முடிச்சா என்னைப் பற்றி என்ன நினைச்சுக்குவாங்க. கல்யாணம் ஆன அந்த நடிகை, “ஏங்க, அந்தக் கிழட்டுப்பய வரச்சொல்லி இருக்கான். போயி தடவினாலே போதும், சீக்கிரமா வந்துட்ரேன்”  புருஷனுக்கிட்டே சொல்லிட்டுத்தான் ரகசிய பார்ட்டிகளைப் பார்க்கப் போகிறாராம்.  இதெப்படி இருக்கு பஞ்சு ???

பஞ்சு : அடேய் என்னடா இது கருமம் ????

குஞ்சு : அய்ய்… கேட்டுட்டு கருமமாடா போடாங் …

-

இத்துடன் சம்பாஷனைகள் முடிந்து விட்டன.


சரணம் – பாருநி ஸ்பெஷல்

ஜூலை 26, 2011

சென்னைப் பக்கம் முடிந்த வரைக்கும் ஆடிப் பார்த்தாச்சு. இனி கேரளா பக்கம் போகலாமென்று முடிவெடுத்து விட்டார் பாருனி. ஏனென்றால் கேரளா சியெம் கூட பாருனியைக் கேட்டுத்தான் கக்கா போகின்றாராம். அந்தளவுக்கு பாருனி கேரளாவில் பிரபலம். பாருனியின் போட்டோ இல்லாத இடமே கேரளாவில் இல்லையாம். அதுமட்டுமல்ல, இளம் பருவ வயதுப் பெண்கள் தங்களின் வலது தொடையில் பாருனியின் புகைப்படத்தினை டாட்டூ செய்து கொள்கிறார்களாம். பெரும்பாலான பெண்களுக்கு பாருனியின் டாட்டூவைக் குண்டியில் குத்திக்கொள்ளத்தான் விருப்பமாம்.

பாருனியின் டாட்டூவை பெண்களின் குண்டிகளில் குத்திக் கொண்டிருக்கும் டாட்டூ கம்பெனி முதலாளிக்கு கடலில் 500 கப்பல் ஓடுகின்றதாம். அந்தக் கப்பலில் ஒரு கப்பலை பாரு நீக்கு இலவசமாய் தரப்போகிறென் என்று டாட்டூ முதலாளி பேட்டி கூட கொடுத்திருக்கின்றாராம்.

கேரளா பத்திரிக்கைகள் பாருநி இல்லாத செய்தியைப் போட்டால், அன்றைக்குப் பார்த்து ஒரு பத்திரிக்கை கூட விற்க மாட்டேன் என்று பத்திரிக்கை முதலாளிகள் கவலைப்படுகின்றார்களாம். பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் பாரு நீயைப் பார்த்து பயப்பட்டு விடுகின்றார்களாம்.

பாரு நியின் இந்தப் பிரபலம் எங்கே தங்களுக்கு ஆபத்தாய் முடிந்து விடுமோ என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்ததாய் ”குவுக்கு” ஆன்லைன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

அதுமட்டுமா, விக்கிலீக்ஸ் கூட பாரு நியின் பிரபலத்தால் கவரப்பட்டு, இனி விக்கிலீக்ஸை பாருலீக்ஸ் என்று மாற்றலாமா என்று யோசிப்பதாய் உலகப் பத்திரிக்கைகள் பரபரப்பாய் செய்தி வெளியிட்டு இருக்கின்றதாம்.

-

இப்படிக்கு குஞ்சு

இது குஞ்சுவின் ஆசான் ஸ்பெஷல் கட்டுரை


பாரு நிவேதிதாவிற்குப் பிடித்த இடம் எது?

ஜூலை 25, 2011

இந்தப் படத்தில் பாரு நிவேதிதாவிற்குப் பிடித்த இடம் எதுவாக இருக்கும் என்று வாசகர்கள் பின்னூட்டத்தின் வழியாக மட்டுமே பதில் சொல்லலாம்.

- உங்கள் குஞ்சு


காலாண்டுத் தேர்வு

ஜூலை 25, 2011

ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதிமுக தலைவி செய்யும் சமச்சீர் அரசியல், ஓட்டுப் போட்ட மக்களைக் கேணயர்கள் என்று கருதுகின்றாரோ என்று தோன்றுகிறது.

செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடக்கும். உலகமே வியக்கும் அளவுக்கு வெற்றி பெற்ற அதிமுக அரசு, காலாண்டுத்தேர்வினை ரத்துச் செய்து, அனைவரும் பாஸ் என்று அறிவித்தாலும் அறிவிக்கக் கூடும் போல. காலாண்டுத் தேர்வு விடைத்தாளில் “ அம்மா வாழ்க ! அம்மா வாழ்க !! அம்மா வாழ்க !!!” என்று எழுதினாலே போதும் 100% மார்க் கிடைக்கும் என்று சொன்னாலும் சொல்வார்கள் போல. மார்க் போடாத வாத்தியார்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்படும் போல.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வியை அமுல்படுத்து என்றுச் சொல்லி விட்டது. அதன்பிறகு 200 கோடி செலவு செய்து பழைய புத்தகங்களை அச்சடிக்கிறது அதிமுக அரசு. ஏதாவது ஒரு 200 கோடி வேஸ்ட் தானே. அதை அதிமுக நிதியில் இருந்து எடுக்க வேண்டுமென்று யாராவது ஒரு புண்ணியவான் கேஸ் ஒன்றினைப் போட்டால் பரவாயில்லை. மக்கள் பணத்தினை வேஸ்ட் செய்யும் அரசியல் கட்சிகள் வரும் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட சட்டம் வேண்டும். இல்லையென்றால் கட்சி நிதியில் இருந்து வேஸ்ட் செய்யப்பட்ட நிதியைப் பெற வழி வகை செய்ய வேண்டும். அப்போது தான் திருந்துவார்கள்.

அன்னா ஹசாரே டீமினர் கவனிக்கவும்.

பள்ளிகளின் வாசல்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விட வரும் பெண்கள் திட்டும் திட்டினைக் காது கொடுத்து வாங்க முடியவில்லை என்று பள்ளியின் வாட்ச்மேன்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றுச் சொன்னார் ஒரு ஆசிரியர். பெண்கள் வாயில் ஏன் விழ வேண்டும்?

இரண்டு மாதம் புத்தகமே இல்லாமல் பள்ளி நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சியின் மாபெரும்  புரட்சிதானோ?

சமச்சீர் இந்தாண்டே அமல் படுத்தப்பட்டால் அந்த வரலாற்று நிகழ்வு கொஞ்சம் கூட கருணையே இல்லாத “கருணாநிதிக்கு” போய் விடும் என்ற அற்ப ஆசையின்றி வேறென்ன?

குழந்தைகளின் படிப்பு இருளில் தள்ளப்பட்டிருப்பது அதிமுக ஆட்சியின் பெருமைதானே.

தமிழகம் மீண்டும் இருளில் தள்ளப்பட்டு விட்டது. ஆட்சியாளர்கள் சுய நலமற்றவர்களாய் இருப்பது என்றைக்கும் நடக்காது. தமிழர்கள் மீண்டும் முட்டாளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

- பஞ்சரு பலராமன்.


ஆஹா வந்துடுச்சா? செம ஹாட் மச்சீ

ஜூலை 22, 2011

என்ன வந்துச்சு?ன்னு தெரிந்து கொள்ள வேண்டுமா நண்பர்களே ? சொல்லித் தெரிவதா சாப்பாட்டுக் கலை? பசி வந்தா கை தானா இலையைப் பார்த்ததும் அங்கே போகிறது அல்லவா? தலைப்பைப் பார்த்ததும் என்ன வந்துடுச்சுன்னு இதற்குள் உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும். கலைச் சேவை செய்யும் உலக மகா நடிகைகளும், இயக்குனர்களும் இருக்கையில் உங்களின் பிரிய தோழனனான குஞ்சுக்கு என்ன கவலை? இனி படம் பாருங்கள். படங்களின் முடிவில் வடையைப் பாருங்கள்.  அடச்சே, விடையைப் பாருங்கள்.

முக்கிய குறிப்பு : வாசகிகளே இதெல்லாம் தமிழ்படங்களில் வெளிவந்திருக்கும் சீன்கள். இப்படங்கள் எல்லாம் சென்சார் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.ஆகவே உங்கள் பிரிய குஞ்சுவை தவறாக நினைத்து விடாதீர்கள். ஓகே… …

ஜொள்ளு !

- உங்கள் மனம் கவர் குஞ்சு


வடிவேலுக்கு வெடி தயார் !

ஜூலை 19, 2011

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

தி.மு.க. ஆட்சிக்கு கடந்த ஐந்தாண்டுகளாக துதிபாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது சுவடே இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் தலையை நீட்டிய வடிவேலு, இப்போது எந்த முகவரியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. இந்நிலையில்,  மலேசியாவில் அவர் பணமோசடி செய்துவிட்டார் என்ற பகீர் குற்றச்சாட்டுதான் தலைமறைவுக்குக் காரணம். 

‘பண மோசடியில் வடிவேலுவா?’ என்பது குறித்து விசாரணை நடத்தினோம். மலேசிய தொழிலதிபர் மைக்கேல் கானப்பிரகாசம் வேதனையோடு விவரித்தார். இவர் கடந்த  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சினிமா கலைஞர்களை மலேசியாவுக்கு வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இனி மைக்கேல் கானப் பிரகாசமே  பேசுகிறார்.

“கோலாலம்பூரில் வசித்து வந்தாலும் எனக்கு சொந்த ஊர் திருப்பத்தூர்தான். மலேசியத் தமிழர்களுக்குப் பிரியமான தமிழ் நடிகர், நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள், இசைக்  கலைஞர்களை வரவழைத்து மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்துவதுதான் எனக்குத் தொழில். இந்த நிலையில், என் மலேசிய நண்பர்களின் வேண் டுகோளுக்கிணங்கி 2007-ம் ஆண்டு இறுதியில் வடிவேலு, இசையமைப்பாளர் தேவாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தோம்.

நிகழ்ச்சிக்கு ‘தேவா-வடிவேலு லைவ் இன் கன்சர்ட்’ எனப் பெயர் வைத்தோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வடிவேலுவுக்கு பத்து லட்ச ரூபாய் பேசப்பட்டு நான்கு  லட்ச ரூபாய் பணத்தை முன் பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி முடிவில் மீதம் ஆறு லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டேன். பிறகு  இசையமைப்பாளர் தேவா உள்பட துணை நடிகர், நடிகைகளுக்காக முப்பது லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தேன். நிகழ்ச்சிக்காக மலேசியாவில் உள்ள நெகரா  அரங்கமும் தயாரானது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு மலேசிய துணைப் பிரதமர்,  நெகரா அரங்கத்தில் அரசு விழா நடக்கவிருப்பதால் அரங்கத்தை விட்டுக் கொடுக்குமாறு கே ட்டார். நாங்களும் விட்டுக் கொடுத்தோம். பிறகு, 2008-ம் ஆண்டில் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த தேதி கிடைத்தது. அந்த நேரத்தில் மலேசிய இண்ட்ராப் அமைப்பு  தீவிரமான போராட்டத்தில் இறங்கியது. மலேசியத் தமிழர்கள் பிரச்னை பெரிய அளவில் இருந்தது. அதையும் தாண்டி நிகழ்ச்சி நடத்துவதற்கான 13 லைசென்சுகளை  வாங்கினோம்.

இண்ட்ராப் சண்டை தீவிரமாக வலுத்து வந்ததால், ‘இந்தியர்களால் பிரச்னை தீவிரமாகிறது. எனவே, அனைவரும் கூடும் இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்’  எனத் தடை போட்டது. பின்னர் நிகழ்ச்சி நடத்த தேதி முடிவானது. நான் தேவாவுக்கு போன் போட்டேன். அவரும், ‘ஒன்றும் பிரச்னையில்லை. எப்போது நீங்கள் சொன் னாலும் வந்து நிகழ்ச்சியை நடத்திவிட்டுச் செல்கிறேன்’ என உறுதியளித்தார்.

அடுத்து வடிவேலுவுக்கு போன் போட்டேன். எடுத்த எடுப்பிலேயே, ‘எந்தப் பணம் உனக்குத் தரணும்? உனக்கு ரெண்டு தேதியக் கொடுத்தேன். நீ பயன்படுத்திக்கலை. அ துக்கே உன் பணம் முடிஞ்சு போச்சு…. நீ சொல்ற நேரத்துக்கெல்லாம் வர முடியாது. வேலையைப் பாருடா… போடா டேய்’ என சத்தம் போட்டார். எப்படியாவது வடிவே லுவை அழைத்து வர வேண்டும் என நான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.  குறிப்பிட்ட நேரத்திற்கு வடிவேலுவிடம் இருந்து உறுதியான தகவல்  கிடைக்காததால், விளம்பரம் உள்பட பல்வேறு செலவினங்களால் சுமார் அறுபது  லட்ச ரூபாய்க்கும் மேல் எனக்கு நஷ்டமானது.

இதன்பிறகு, வடிவேலுவுக்கு நான் கொடுத்த பணத்தைத் திரும்பத் தருமாறு தூதரகம் மூலம் கடிதம் எழுதினேன். அதற்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.  ஒருகட்டத் தில் தூதரக அதிகாரிகளே வடிவேலுவிடம் போனில் பேசினர். போனை எடுத்தவர், ‘ஓ…எஸ்…எஸ்… ஓ…நோ…நோ…’ என்று மட்டும் சொல்லிவிட்டு லைனை கட்  பண்ணிட்டார்.
அதன்பிறகு மலேசிய எண் வந்தாலே அவர் எடுப்பதில்லை. ஒரு கட்டத்தில் வடிவேலுவைத் தொடர்பு கொள்ள முடியாததால், முதல்வராக இருந்த கருணாநிதிக்கு என்  நிலையை முழுமையாக விளக்கி கடிதம் எழுதினேன். கருணாநிதியிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. அந்தளவுக்கு ஆளுங்கட்சியோடு செல்வாக்கில் இருந்தார்  வடிவேலு. இப்போது சென்னை மாநகர கமிஷனர் திரிபாதியைச் சந்தித்து விரைவில் புகார் கொடுக்கவிருக்கிறேன்’’ என்றவர் இறுதியாக,

“கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகக் கலைஞர்களை மலேசியாவில் மேடையேற்றி பிழைப்பு நடத்தி வருகிறேன். யாரிடமும் எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.  வடிவேலுவால் மட்டுமே அதிகப்படியான மனஉளைச்சலுக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியிருக்கிறேன். மிகுந்த வேதனையாக இருக்கிறது. விரைவில் என் பணம்  எனக்குத் திரும்ப வரும் என்ற நம்பிக்கை மட்டுமே மீதமிருக்கிறது’’ என்றார் வேதனையோடு.

மைக்கேல் கானாவின் புகார்களுக்கு விடை தேடி வடிவேலுவைத் தேடினோம். ‘‘மதுரையில் இருக்கிறார் விரைவில் உங்களிடம் பேசுவார்’’ என்றார் மேலாளர் முத்தையா.  ‘‘மதியம் 2 மணிக்குப் பேசுங்கள். சென்னை அலுவலகத்தில் இருப்பார்’’ என்றார் ஒரு உதவியாளர். ‘‘விஷயத்தைச் சொல்லுங்கள்’’ என்றார் சங்கர் என்பவர். அனைத்தையும்  கேட்டவர், ‘‘அண்ணனே உங்களிடம் பேசுவார்’’ என்றார். நேரில் சென்றால் வடிவேலு வீட்டு கூர்க்காவோ, ‘‘சார் ஊரிலேயே இல்லை’’ என்றார்.

வடிவேலுவுக்கு என்னதான் ஆச்சு?

 ஆ.விஜயானந்த்


பெட்ரோல் விலையேற்றம் சில மர்மங்கள்

ஜூலை 18, 2011

பெட்ரோல் விலையேற்றத்தினைப் பற்றிய ஒரு கட்டுரை விரிவாக கீழே இருக்கும் இணைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொருவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கட்டுரை இது. கீழே இருக்கும் டேபிளர் காலங்களில் இருக்கும் விபரங்களை ஒரு முறை படித்துப் பாருங்கள். வரி வரி வரி என்று நாம் சம்பாதிக்கும் பெருமளவு பணத்தில் 95 சதவீதம் வரியாகவே பெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. எந்தப் பொருள் வரி இல்லாமல் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள் ஒரு நிமிடம். அசந்து போய் விடுவீர்கள். ஒரு இரும்புக் கம்பியை உதாரணமாய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கம்பி தயார் செய்ய என்னவெல்லாம் தேவை என்று யோசித்துப் பார்த்தால் நாம் எத்தனை வரிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரிய வரும்.

- பஞ்சரு பலராமன்

Courtesy : http://www.newsclick.in

Link : http://newsclick.in/india/economics-behind-oil-prices-india


கலைஞர் ராஜினாமா செய்வாரா?

ஜூலை 17, 2011

தமிழக அரசியலில் இன்றைய சூடான பரபரப்பு செய்தி “ திமுக தலைவரான கலைஞர் தன் பதவியை ராஜினாமா செய்வாரா?” என்பதுதான். ஏன் இந்த நிலை வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு பிரபலமான இணையதளத்தில் ஸ்டாலின் கலைஞர் மோதல் என்ற செய்தியைப் படித்த போது சிரிப்புத்தான் வந்தது.

நல்ல அரசியல்வாதிக்கு உதாரணம் கம்யூனிஸ்ட் கட்சி திரு நல்லகண்ணு. மிக மோசமான அரசியல்வாதிக்கு உதாரணமாய் உலகமே விரல் நீட்டுவது யாரென்பது உங்களுக்குத் தெரியும்.

திமுகவின் இந்தத் தோல்விக்கு காரணம் கலைஞர் மட்டுமே. ஸ்டாலின் நிச்சயமாய் இல்லை. அழகிரியும் இல்லை. அழகிரி கட்சியில் திணிக்கப்பட்டவர். ஆனால் ஸ்டாலின் தானகவே வளர்ந்தவர். அரசியலில் எவரையும் பகைத்துக் கொள்வதும் இல்லை. கடுமையான விமர்சனமும் செய்வதும் இல்லை. நாகரீகமான அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்பவர்.

2011இல் அதிமுகவே இருக்காது என்று அரைகூவல் விட்ட அழகிரிக்கு ஸ்டாலினோடு ஒப்பிட எந்த வித அருகதையும் அற்றவர். அரசியல் சாணக்கியத்தனமோ, வேறு எந்த வித விபரங்களும் இல்லாத ஒருவராய் தன்னைக் காட்டிக் கொள்கிறார். திருமங்கலம் பார்முலா திமுகவின் அழிவிற்கு காரணமாய் ஆகி விட்ட கொடுமைக்கும் அழகிரியே காரணம். இதே பார்முலாவை காங்கிரஸ் ஒரு காலத்தில் செய்தது. அன்று ஆணவம் பிடித்தலைந்த காங்கிரஸாரின் இன்றைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

உங்களுக்குத் தெரியுமா? எத்தனை எத்தனையோ காங்கிரஸ்காரர்கள் திமுகவால் படுபயங்கரமான விதத்தில் பாதிக்கப்பட்டார்கள். ஒரு காலத்தில் காங்கிரஸ்காரன் என்றுச் சொல்லவே அச்சப்பட்டார்கள். திமுக அந்தளவுக்கு காங்கிரஸ்காரர்களை வேட்டையாடியது என்று வயதானவர் ஒருவர் சொன்னார். குஜராத் கலவரங்களை விட கொடுமையான நிகழ்வுகளை திமுகவினர் செய்தனர் என்றும் கூடுதல் தகவல்களைச் சொன்னார். வயதான காங்கிரஸ்காரர்களிடம் மேற்படி விஷயத்தை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திமுகவின் இந்த தோல்விக்கு கலைஞரே காரணம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் கனிமொழியைக் கண்டிக்காமல் விட்டதன் பலன், இன்றைய திமுகவின் அழிவிற்கு கனிமொழி மூலம் கலைஞரே காரணமாய் இருக்கிறார். எத்தனை எத்தனையோ லட்சோப லட்ச திமுக தொண்டர்களால் உருவாகிய திமுகவை கனிமொழி தன் பேராசையால் அழித்து விட்டார். ஆவதும் பெண்ணாலே அழிவதும் கனியாலே என்றாகி விட்டது.

இத்தனை ஆண்டுகாலம் தலைவர் பதவியில் அமர்ந்து தன் குடும்பம் மட்டுமே கோடீஸ்வரர்களாய் மாற உழைத்தாகி விட்டது. ஆட்சியில் இருந்து இறங்கும் போது தமிழகத்துக்கு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் கடனையும் வைத்துச் சென்று விட்டார் கலைஞர். அதுமட்டுமா, இந்தியாவிற்கு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் இழப்பையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் என்று பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

இத்தனையும் செய்து விட்டு, இனிமேலும் கட்சிக்கு தலைவராய் இருப்பதற்கு எப்படி முடிகிறது என்பதுதான் வேடிக்கை. அடுத்த திமுகவின் தலைவர் ஸ்டாலினாக வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும் கூட. அதுவே தர்மமும் கூட. ஏனென்றால் திமுகவை உடையாமல் காக்கும் திறமை ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.

- பஞ்சரு பலராமன்


Follow

Get every new post delivered to your Inbox.

Join 157 other followers

%d bloggers like this: