லோக்பால் – காங்கிரஸ்ஸின் படுபயங்கரம்

மே 31, 2011

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தால் வயிற்றுக் கழிச்சல் எடுத்த காங்கிரஸ் கட்சி, ஊழல் ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து கமிட்டி ஒன்றினை அமைத்து சட்ட திட்டங்களை உருவாக்கலாம் என்று சொன்னது. அன்னாவும் உண்ணாவிரதத்தை முடித்தார்.

காங்கிரஸ் அடுத்த முயற்சியாய் இந்த அன்னா உண்ணாவிரதத்தை கேவலப்படுத்த, மக்களின் கமிட்டி உறுப்பினர்கள் மீது சேற்றினை வாரி இறைத்தது. அதுவும் பலிக்கவில்லை. நேற்றைக்கு பிரதமர், எம்பிக்களை இந்த விசாரணையிலிருந்து விலக்க் வேண்டுமென்றுச் சொன்னார்கள் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் டிவியில் பேட்டி கொடுத்தார்.

திமுக எம்பி ராசாவால் தான் உலக மெகா ஊழல் நடந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களை விசாரிக்கக் கூடாதாம். என்ன ஒரு அக்கிரம் பாருங்கள்.

இந்திய ஜன நாயக நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டது தான் இறைவன் உரையும் கோவில் கூட. கடவுளைக்கூட கேள்வி கேட்கும் தகுதியுடைய சட்டத்திற்கு பிரைம் மினிஸ்டர் என்றால் சல்யூட் போட வேண்டுமா?

இந்திய நாட்டின் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு உட்பட்டவரே. இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுவார். நாளைக்கு வேறொருவர் வருவார். எத்தனையோ பிரதமர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் சட்டம் ஒன்று தான். அந்தச் சட்டத்தின் படிதான் இந்தியா இயங்குகிறது.

ஊழலை ஒழிக்கச் சட்டம் போட வேண்டும் என்றுச் சொன்னால் எம்பிக்களை அதில் சேர்க்கக் கூடாது. பிரதமரை அதில் சேர்க்கக் கூடாது என்று சொல்வது காங்கிரஸ் மக்களை மடையர்கள் என்று நினைத்து விட்டதால் வந்த சோதனை. காங்கிரஸ்ஸின் தலைவர் சோனியா ஊழலை ஒழிக்க வேண்டுமென்று பேசுகிறார். அவரின் அமைச்சர்களோ அவரை விசாரிக்க கூடாது, இவரை விசாரிக்கக் கூடாது என்றுச் சொல்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வருகிறது காங்கிரஸ் கட்சி.

திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாகி இருக்கிறது லோக்பால் சட்டம். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை லோக்பால் சட்டத்தைக் கொண்டு வராது.

இந்திய மக்கள் அரசியல்வாதிகளுக்கெதிரான மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஊழலை ஒழிக்க போராட வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

அன்னா ஹசாரேவை முன்வைத்து, இந்தியா தன் எதிர்காலத்திற்காக போராட வேண்டும். மக்கள் அனைவரும் அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிக்கும் போராட்டத்திற்கு உறுதுணையாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஜன நாயக ஆட்சி என்று வாரிசுகளே இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பார்கள். இது நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்பதை மட்டும் கவனத்தில் கொள்க.

- பஞ்சரு பலராமன்

செய்தி ஆதாரம்

http://www.timesnow.tv/Lokpal-Bill-war-heats-up/articleshow/4374626.cms


Hello ! Who will bell this Cat ? பூனை : தயாநிதிமாறன்

மே 31, 2011

தெஹல்ஹாவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி இருக்கிறார் தயா நிதிமாறன் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.என்ன விஷயமென்பதெல்லாம் ஏற்கனவே தெரியும் என்பதால், இப்போது தான் மேட்டர் வெளிச்சத்திற்கு வருகிறது போலும் என்று நினைத்தேன். சிறிது நாட்களுக்கு முன்பே சவுக்கில் இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றினையும் வாசித்தேன்.

பொய்மை என்பது காற்றுக் குமிழ் போல. அது என்றாவது ஒரு நாள் வெளியே வந்து விடும். இதோ தயா நிதிமாறனைப் பற்றிய ஊழல் செய்தி வெளிவந்து விட்டது. நேற்று பிரைம் மினிஸ்டரைப் பார்த்திருக்கிறார் இவர். மேட்டர் ஏதோ சீரியஸாக போகிறது.

ஸ்பெக்ட்ரம் – இந்திய மக்களின் உழைப்பினை உறிஞ்சி ரத்தம் குடிக்கும் காட்டேறிகளை, சட்டம் தண்டித்து ஆக வேண்டும். அவ்வாறு சட்டமும் தண்டிக்கத் தவறினால் தர்மம் நிச்சயம் தண்டிக்கும்.

தெய்வம் நின்று கொல்லுவதில்லை. அன்றைக்கே கொன்று விடுகிறது. உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

இதோ அகில உலகத்திலும் இதுவரை எவரும் செய்ய முடியாத ஊழலைச் செய்த திமுகவினர் அதற்கான தண்டனையை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். சட்டம் தன் கடமையைத் தவறினால் தர்மன் அதை நிலை நாட்டும்.

அந்தக் கட்டுரையின் இணைப்பு கீழே

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

இம்மென்றால் நோட்டீஸ் விடும் தயா நிதிமாறனுக்கு சரியான ஆப்பை தெஹல்கா அடிக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் சொல்கின்றார்கள். இவரைப் போல பெரும் தலைகள் பலரைப் பார்த்த பத்திரிக்கை அது என்கிறார்கள். பச்சா நோட்டிஸ் கிச்சடியை தெகல்காவிடம் கிண்டி விட முடியாது.

- பஞ்சரு பலராமன்


கோவை பெர்க்ஸ் பள்ளியினால் ஒரு தற்கொலை

மே 30, 2011

மெட்ரிக் பள்ளிகள் செய்யும் கொலைகள் என்ற பதிவினை வாசகர்கள் படித்திருக்கலாம். இதோ கோவையில் மேலும் ஒரு கொலை நடந்திருக்கிறது. பெற்றோர்கள் எவரையும் இப்பள்ளிகள் அழைக்கவில்லை என்று சப்பைக் கட்டு கட்ட வேண்டாம். வெறும் நான்காயிரம் மட்டுமே பெற வேண்டுமென்று அரசு உத்திரவிட்டாலும் எப்படி இப்பள்ளி அதிகக் கட்டணம் வசூலிக்கின்றார்கள்? அரசு ஏன் தலையிடவில்லை?

கோவையில் இருக்கும் மற்றொரு பள்ளியில் சமச்சீர் பிளஸ் என்ற புதிய கல்வியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்று கோவை நண்பர் சொன்னார். அப்பள்ளி ஒன்டிப் புதூரில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா என்று கேள்விப்பட்டோம். சமச்சீர் பிளஸ் என்று புதிய கல்வித் திட்டத்தை இப்பள்ளி அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதற்கு தனியான கட்டணம் வசூலிப்பதாகவும் சொல்கிறார்கள். கோவையில் இருக்கும் பல பள்ளிகள் இது போன்ற கூடுதல் பாடத்திட்டங்களைச் சேர்ந்து கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதாகவும் அறிகிறோம்.

கோவை பெர்க்ஸ் பள்ளியின் கட்டணக் கொள்ளையினால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது என்பதை கீழே இருக்கும் பதிவு மூலம் அறிந்து கொள்ளுங்கள். அரசாங்கம் விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. வாளாயிருத்தல் அழகல்ல.

http://www.vinavu.com/2011/05/30/kovai-sangeetha-suicide/

இக்கட்டுரை வினவில் வெளியாகி இருக்கிறது.

- பஞ்சரு பலராமன்


குஞ்சைக் கூப்பிடும் கோழிவறுவல் (18+)

மே 30, 2011

ஹாய் டியர்ஸ்,

குஞ்சாமணிக்கு கோழிகள் என்றால் விருப்பம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயம். கோழிகள் என்றால் அதுவும் கீழே படத்தில் இருக்கும் கோழிகள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடித்தம். ஏன்பா குஞ்சு, உனக்கு மட்டும் தான் இந்தக் கோழியைப் பிடிக்குமா? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.  விரைவில் கோழி ஒன்றினை நூல் மில் அதிபருடன் வறுத்த கதையுடன் வருகிறேன்.  அதுவரை இந்தக் கோழியைப் பார்த்து “ஜொள்” விட்டுக் கொண்டிருங்கள்.


இப்படத்தினைப் பார்த்தீர்களா நண்பர்களே, குஞ்சை வா வான்னு கூப்பிடுகிற மாதிரியே இருப்பதைக் கவனித்தீர்களா?. இந்தக் கொடுப்பினையெல்லாம் யாருக்கு வரும் சொல்லுங்க பார்ப்போம்

வேண்டுகோள் : அன்பு நண்பா அனாதி என் வழியில் குறுக்கிட்டு விடாதே.

குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்களின் பிரிய குஞ்சாமணி


ஞானம் பெற – எண்ணெய் ஸ்ரீயின் தொடர்

மே 29, 2011

அன்பு நண்பர்களே, அனாதியின் நண்பர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மஞ்சள் துண்டின் மனசு என்ற தொடர் இன்றிலிருந்து ‘ஞானம் பெற’ என்ற மாற்றப்படுகிறது. உடனே ஆகா இவன் ஆன்மீக அரிப்பை நம்மிடம் வந்து தீர்த்துக் கொள்ளப் போகின்றானே என்று நினைத்து விடாதீர்கள். நான் எழுத முற்படுவது நிச்சயம் ‘ஞானம் பற்றி’ தான். ஆனால் இது வேறு வகையான ‘ஞானம்’ என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குப் போதிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் புத்திசாலியும் இல்லை. ஆன்மீக வாதியும் இல்லை. இன்றைக்கும் தொப்புள் தெரியும் நடிகைகளின் போஸ்டரைப் பார்த்தால் தன்னாலே பார்வை போகும் மனதினைக் கொண்டிருப்பவன் தான் இந்த ஸ்ரீ. ஆனால் இந்த “குஞ்சு” போல மோசமானவன் கிடையாது. போன வாரம் ஒரு குட்டியுடன் ஆஸ்பிட்டலுக்குச் சென்று வந்தான் இந்த குஞ்சு. என்னடா விஷயம் என்றால், அசந்துட்டானாம் அதனால ‘கிளீன்’ பண்ண ஆஸ்பத்திரிக்கு வந்தானாம். படுபாவி. பிரம்மகத்திப் பய.

என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘ நீங்கள் தான்’. உங்களின் உடம்பே கோயில். கோவிலைச் சுத்தமாய் பராமரிக்க வேண்டும். அப்படிப் பராமரித்தால் கடவுள் சந்தோஷமாய் இருப்பார். அந்தக் கோயிலான உடலைப் பராமரிப்பது எப்படி என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொல்ல விரும்புகிறேன். உடம்பு நன்றாய் இருந்தால் தானே பிற செயல்களைச் செய்யலாம்.

கடந்த பதிவில் உணவே மருந்து என்பதைப் பார்க்கும் போது எண்ணெய் பற்றிய சில விஷயங்களைச் சொன்னேன். சிலர் நம்பி இருப்பீர்கள். சிலர் இவனுக்கு வேற வேலை இல்லை என்று திட்டி இருப்பீர்கள். இதோ எண்ணெய் தான் உடலுக்கு எதிரி என்பதை காட்டும் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்.

அன்பு நண்பர்களே, இது என்னடா பெரிய கட்டுரையாய் இருக்கிறதே என்று நினைக்காமல், இரண்டு நிமிடம் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாய் படித்துப் பாருங்களேன்.

-உங்களின் தோழன் ஸ்ரீ.

( நண்பர்களிடமிருந்து பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்)

”ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?”

‘என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ – பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

”சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.

நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!” என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.

நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம். சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!” -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

- சி.சரவணன்

 நன்றி : டாக்டர் விகடன்


விரைவில் – ரஜினி பற்றிய வித்தியாசமான பதிவு

மே 28, 2011

ரஜினி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருக்கும் இந்த நேரத்தில் அவருக்குத் தேவையானது ஆன்மீக பலமும், ஆன்ம பலமும் தான். ரஜினி போல நண்பர்களைக் கொண்டாடியவர்கள் யாரும் கிடையாது. ரஜினியையும், அவரின் நண்பரையும் அடிக்கடி என் நண்பர்கள் பார்ப்பார்கள். ரஜினியின் எளிமையும், நட்பும் எந்த ஒரு நடிகராலும் பின்பற்றவே முடியாத ஒன்று.

ரஜினி அடிக்கடி ஆஸ்பிட்டலுக்கு சென்று வரும் வழக்கம் இல்லாததால், தற்போது அவருக்குண்டான் நோயின் காரணமாய் மனதொடிந்து போய் இருப்பார் என்று நினைக்கிறேன். மிகச் சரியான சிகிச்சை அவருக்கு கிடைக்க, அவரின் பாபா நிச்சயம் அவருக்கு உதவி செய்வார்.

ரஜினி பற்றிய மிக வித்தியாசமான பதிவொன்றினை எழுதிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ. விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்பு நண்பர்களே, ரஜினி நலமடைய ஒரு செகண்ட் பிரார்த்தனை செய்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ….

”என் தோழனே கிருஷ்ணா, என் பிரியத்துக்குரிய நடிகர் ரஜினி நல்ல முறையில் சிகிச்சை பெற்று, நலமோடு நூறாண்டுகள் வாழ உன்னைப் பிரார்த்திக்கிறேன்”

- குஞ்சு


சென்னையில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?

மே 28, 2011

அம்மா, பேட்டியின் போது ஜெயின் திருடர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வந்து கொண்டிருப்பதாய் கேள்விப்படுகிறேன் என்றுச் சொல்லி அடுத்த வாரத்திற்குள் அதிமுக எம் எல் ஏ வீட்டில் ஜெயின் பறிப்பு நடந்து திருடன் பிடிக்கப்பட்டான்.

தங்கத்தின் விலை உயரே உயரே போவது மக்களுக்கு நல்லது அல்ல என்பதை இந்திய அரசு புரிந்து கொண்டு, உடனடியாக ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தினை நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் கொலை கொள்ளை அதிக அளவில் நடக்கும். இந்திய அரசு மக்களின் நன்மையை உத்தேசித்து இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால் செய்யாது என்று நம்புவோம். என்றைக்கு காங்கிரஸ் கட்சி மக்களின் நன்மையை பற்றிச் சிந்தித்திருக்கிறது? இந்தியாவினைப் பிடித்த பீடை “காங்கிரஸ்”.

சென்னையில் சட்டம் ஒழுங்கு புதிய ஆட்சியில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்டோம்.  நண்பர்கள் ஐந்து பேர் தனித்தனியாக சென்னையின் பிரதான பகுதிகளுக்குச் சென்றோம். அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வர “ஆட்டோக்களை” தேர்வு செய்து, அதில் பயணம் செய்தோம். சாதாரண மக்களோடு மக்களாய் வாழ்வதும், பயணிப்பதும், ஒவ்வொரு மூலை முடுக்குகளிலெல்லாமும் சென்று வருவதும் ஆட்டோக்காரர்களே. அவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இருக்க முடியாது. யார் யார் ரவுடிகள், அவர்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இதையெல்லாம் காரணமாய் வைத்து தான் சென்னையின் சட்டம் ஒழுங்கு புதிய ஆட்சியில் எப்படி இருக்கிறது என்பதை ஆராய ஆட்டோக்காரர்களைத் தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட 50 ஆட்டோக்களில் மாறி மாறி பயணம் செய்தோம்.

கொஞ்ச காலத்திற்கு முன்னால் சென்னையில் சில பகுதிகளுக்கு ஆட்டோவை விடச் சொன்னால், ஆட்டோக்காரர்கள் அலறுவார்கள். சார், ஆட்டோ அங்கேயெல்லாம் வராது என்று மறுப்பார்கள். ஆனால் தற்போது எந்த ஆட்டோக்காரரும் பிரச்சினைகள் இருந்த பகுதிகளுக்கு செல்ல எந்த மறுப்பும் சொல்ல வில்லை.

சொல்லி வைத்தாற் போல அனைத்து ஆட்டோக்காரர்களும் சொல்லிய ஒரே வாக்கியம் “இந்த ரவுடிகள் எல்லாம் எங்கே போனாங்க என்று தெரியவில்லை”. இதுவரை ஆங்காங்கே குட்டித்தலைவர்களாய் வலம் வந்த ரவுடிகள் எல்லாம் ஓடி ஒளிந்து விட்டார்கள் என்றும், இன்றைக்கு சென்னையில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றும் சொன்னார்கள்.

காவல்துறையினரை சரியாக அவர்கள் பணியினை செயல்படுத்த அனுமதித்தாலே, சட்டம் ஒழுங்கு சீர்பட்டு விடும். கட்சிக்காரர்கள் எவராவது போலீஸ் ஸ்டேஷன் பக்கம் சென்றாலே பட்டயக் கிளப்பினால் போதும். எல்லாம் சரியாகி விடும்.

ஆக, தற்போதைய ஆட்சியில் சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்பட்டு வருகிறது என்பதை நேரடியாகப் புரிந்து கொண்டோம்.

அம்மாவிற்கு ஒரு வணக்கத்தையும், காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் ஒன்றினையும் போட்டு விடுகிறோம்.

- அனாதி


இறைவனைப் பாருங்கள் !

மே 27, 2011

அன்பு நண்பர்களே,

பஞ்சு ஆரம்பித்து விட்டான். கடந்த மாதம் வரையிலும் திமுக அரசினை திட்டிக்கொண்டிருந்தான். இப்போது அதிமுக அரசினைத் திட்டிக் கொண்டிருக்கிறான். பஞ்சு கல்வியை பொதுவுடைமையாக்கும் வேலையைப் பாருடா. எதிர்கால சந்ததிக்கு இது ஒன்றே உருப்படியாய் நீ செய்யும் காரியமாக இருக்கும். அரசியல்வாதியைத் திட்டி என்ன பலனைப் பார்க்கப் போகின்றாய் பஞ்சு?

வேசித்தனம் செய்வதை அரசியல் என்றுச் சொல்லி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் தேர்தலின் போது கூட்டணி சேரும் போது கட்சியின் தலைவர்கள் சொல்வார்களே ஒரு வார்த்தை “ கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று. இதைத் தானடா நான் வேசித்தனம் என்கிறேன்.

நண்பர்களே, இந்தப் பஞ்சுப் பயல் இருக்கின்றானே இவனுக்கு மூக்கு மேலே கோபம் வரும்.  அடக்குடா அடக்குடான்னு சொல்லிப் பார்த்தேன். கேட்க மாட்டேன் என்கிறான்.  எனது தோழி ஒருத்தி இருக்கிறாள். அவளிடம் சொல்லித்தான் இவனையெல்லாம் சரி செய்ய வேண்டும். தற்போது ஆஸ்ட்ரேலியாச் சென்றிருக்கிறாள். வரும் போது பஞ்சு சின்னா பின்னமாகப் போகின்றது. அந்தக் கதையை மேட்டர் நடந்த பிறகு எழுதுகிறேன். பஞ்சு புள்ளி வைத்து விட்டேனடா, கோலம் நிச்சயம். முடிந்தால் இப்போதே காசிப் பக்கமாய் ஓடிப் போய் விடு ராஸ்கல்.

உங்களுக்கெல்லாம் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசைப்படாதவர்கள் இந்தப் பக்கமாய் வந்து விட வேண்டாம். ஓடிப் போய் ”சாரு நிவேதிதாவின்” பிளாக்கைப் படித்துக் கொண்டிருங்கள்.

கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றால் நான் சொல்லும் சில முன்னேற்பாடுகளை நீங்கள் செய்தாக வேண்டும். முதலில் நீங்கள் இருக்கும் அறைக் கதவினை அடைத்து விடுங்கள். லைவ்வில் ஸ்பீக்கரை செட் செய்யுங்கள். 75 அளவுக்கு ஸ்பீக்கரின் சத்தத்தை அதிகப்படுத்துங்கள். செல்போனை அணைத்து விடுங்கள்(ஹீ…ஹீ.. வந்து விடுகிறது, என்ன செய்ய?).

இதோ கீழே இருக்கும் பாட்டினை மட்டும் பாருங்கள். கடவுள் இரண்டு இடங்களில் தரிசனம் தருவதை நிச்சயம் உணருவீர்கள்.

உங்களின் பிரிய குஞ்சாமணி


மெட்ரிக் பள்ளிகள் செய்யும் கொலைகள் !

மே 26, 2011

இதென்ன தலைப்பே டெரரா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது உண்மை. இச்சம்பவம் தமிழகத்தின் பிரபல நகரங்களில் நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கும் கூட. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான், கலைஞர் அரசு கல்விக் கட்டணத்திற்கு கமிட்டி ஒன்றினைப் போட்டது. அதையும் இப்போது “அம்மா????” நீக்கி விட முனைந்திருக்கிறார். இதுகாறும் மக்கள் விரோத அரசு என்று திமுக அரசை விமர்சித்த அம்மா, தன் அரசில் மட்டும் மக்களுக்கு நன்மையா செய்ய முனைகிறார்.

மக்கள் குரலை எடுத்து ஒலிக்க எவர் இருக்கின்றார்கள் இப்போதைய அரசாங்கத்தில். கோடீஸ்வரக் கல்விக் கொள்ளையர்களின் குரல்கள் பத்திரிக்கைகள் தோறும் விளம்பரங்களாய் ஜொலிக்கின்றனவே. இதோ ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திமுக ஆட்சி எப்போதடா போகும் என்று காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் இந்தக் கொள்ளையர்கள். அவர்களின் எண்ணம் போலே, அம்மா சமச்சீர் கல்வியையும் தூக்கி விட்டார். கட்டணத்தில் பள்ளிகள் கேட்டுக் கொண்டால் தலையிடுவோம் என்றும் சொல்லி விட்டார். மக்கள் விரோத அரசு திமுகவா இல்லை அதிமுகாவா என்பதில் சந்தேகம் வருகிறது.

6400 பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஆதரவாய் பேசும் அம்மா செயல் சரிதானா என்பதை அம்மா ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும். 6400 முதலாளிகள் முக்கியமா இல்லை தன்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்கள் முக்கியமா என்பதை அம்மா முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. மந்திரி, எம்மெல்லே பிரதிநிதிகள் இவ்விஷயத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

சரி இப்போது நடந்த உண்மைச் சம்பவத்திற்கு வருகிறேன். சென்னையின் பிரதான பள்ளியில் ஒரு ஏழையின் மகன் ஒருவன் படித்து வந்திருக்கிறான். அம்மாவின் திடீர் அறிவிப்பைக் கேட்ட பள்ளி, உடனே பெற்றோரிடம் 6000 ரூபாய் கட்டச் சொல்லி வற்புறுத்தி இருக்கின்றார்கள். மாதம் 400 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த பள்ளி, திடீரென்று 6000 கட்டச் சொல்லியதைக் கேட்டு தகப்பனார் திகில் பிடித்தலைந்திருக்கிறார். மனைவியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் ஏதோ ஒரு வார்த்தைச் சொல்ல, மனைவி தீ வைத்துக் கொண்டு இறந்து போய் விட்டார். பிள்ளைகள் இருவரும் அம்மா இல்லாமல் அனாதையாய் நிற்கின்றனர். இனி யார் அவர்களை கவனிப்பது? அம்மா இல்லாமல் இருப்போரிடம் கேட்டுப் பாருங்கள் அதன் அருமை தெரியும்.

அம்மாவின் அறிவிப்பு வந்த அடுத்த சில நாட்களில் மேற்கண்ட சம்பவம் நடந்து விட்டது. ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி விட்டது. இதற்கு காரணம் அந்த மெட்ரிக் பள்ளி.

25ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் பள்ளிகளின் கல்விக் கணக்கினை எந்த அரசாவது தணிக்கை செய்ததா? ஒவ்வொரு பள்ளியும் லாப நோக்கமற்ற டிரஸ்ட் மூலம் தொடங்கப்பட்டவை. இவர்களுக்கு எதுக்கு லாபம் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும். அரசு ஏன் இதைக் கேட்க மறுக்கிறது????? டிரஸ்ட்டை அரசு தானே ஆரம்பிக்க அனுமதி தருகிறது.

இவர்களை ஒடுக்கி, அனைத்துக் கல்வி நிலையங்களையும் அரசுடைமையாக்கி, தனியார் கல்விக் கொள்ளையர்களை தமிழ் நாட்டை விட்டு அடித்து விரட்ட வேண்டும்.

ஆனால் எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யப்போவதில்லை. இந்த தேர்தலில் நடந்த அமைதிப் புரட்சி போல எதிர்கால சந்ததியினருக்கு கல்வி கிடைக்க, மக்கள் மாபெரும் கல்விப் போராட்டத்தினை ஆரம்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். ஊழலுக்கு எதிராய் அன்னா ஹசாரே போல, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல கல்வி கிடைக்காமலே போய் விடும். கல்வியிலும் சமச்சீர் இல்லையென்றால் அது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கே ஆபத்தாய் மாறி விடும்.

கேபிள் டிவியை அரசுடைமையாக்க முயலும் அரசால் ஏன் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க முடியாது? நிச்சயம் முடியும். பெற்றோர்கள் ஒன்று திரண்டு தனியார் பள்ளிக் கொலைகாரர்களை அடக்கி ஒடுக்கி விரட்ட முயல வேண்டும். இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் நம்மை சபிக்காமல் விடமாட்டார்கள்.

- மக்களின் குரலாய் பஞ்சரு பலராமன்

குறிப்பு : தினமலர் சமச்சீர் கல்வியை எதிர்த்து வரும் போக்கு கண்டிக்கத்தக்கது.


பெற்றோர்களை பகைத்துக் கொள்கிறார் இன்றைய முதல்வர்

மே 25, 2011

உலகிலேயே அதிகக் கொள்ளை அடிக்கும் கொள்ளைக் கூடாரங்களான தனியார் பள்ளிகளின் கட்டணத்தை கலைஞரின் அரசு கட்டுப்படுத்தி, கட்டணங்களைச் சீர்படுத்தியது. தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று செருப்பால் அடிக்கப்பட்டு திரும்பி வந்து நீலிக்கண்ணீர் வடித்தனர்.

எந்த ஊரிலாவது ஒன்றாம் வகுப்பிற்கு புத்தகக் கட்டணமாய் 6000 ரூபாய் வசூலிப்பார்களா என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். தனியார் பள்ளிகளில் வசூலிக்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு பையனுக்கு 25 ஆயிரம் கட்டணம் கட்டு என்கிறார்கள். இதைக் கேட்க அரசுக்கு தகுதி இல்லையா? தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காகத் தானே நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அரசு உருவாக்கியது. ஒவ்வொரு பள்ளியும் அதன் தரத்திற்கு ஏற்ப இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டுமென்று கமிட்டி சொல்லியது தவறா? பெற்றோர்களின் உழைப்பை, கல்வி என்ற பெயரில் உறிஞ்சித் திருடிய பகாசுர கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாய் பேசவா, அம்மாவிற்கு கோடிக்கணக்கான பெற்றோர்கள் ஓடி ஓடி வந்து ஓட்டுப் போட்டார்கள்.

கொஞ்சம் கூட செய் நன்றி அற்றவராய் தனியார் பள்ளிக்கூட முதலாளிகளுக்கு ஆதரவாய் பேசுகின்றாரே முதல்வர் இது நியாயமா? அடுக்குமா?

இன்றைக்கு ஆட்சிக்கு வந்த அம்மா நேற்றைய பிரஸ் மீட்டில், தனியார் பள்ளிகள் கேட்டுக் கொண்டால் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடும் என்றுச் சொல்கிறார்.

தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளா ஓட்டுப் போட்டுச் ஜெயிக்க வைத்தனர்? வெறும் 60 ஆயிரம் ஓட்டுக்களிலா அதிமுக ஜெயித்தது?

நல்ல ஆட்சி தருவார் என்று எத்தனையோ பெற்றோர்கள் அல்லவா ஜெயலலிதா அவர்களுக்கு ஓட்டுப் போட்டனர். ஓட்டுப் போட்ட ஈரம் காய்வதற்குள் அம்மா தன் செய் நன்றியைக் காட்டி விட்டார் பாருங்கள்.

கொள்ளைக்காரன் கேட்டுக் கொண்டால் தலையிடுவாராம் முதல்வர். கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாய்த் தான் ஆட்சி நடத்துவீர்களா? உங்களை நம்பி ஓட்டுப் போட்ட கோடானு கோடி மக்களுக்காக ஆட்சி நடத்த மாட்டீர்களா?

கல்விக் கட்டணம் என்பது கமிட்டிக்கும் தனியார் பள்ளிக்கும் சம்பந்தப்பட்டதாம். அரசுக்கு பங்கில்லையாம். என்ன இது கொடுமை. அரசுதானே தனியார் கல்விக்கூடங்களுக்கு அனுமதி வழங்கியது. அரசு தானே கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் படி கமிட்டி அமைத்தது? இதெல்லாம் அரசாங்கம் செய்யவில்லை என்றுச் சொல்கிறாரே முதல்வர்.

அம்மா என்றழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கவா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்?

அம்மாக்களில் அன்பெல்லாம் காரியம் முடிவதற்கு மட்டும் தானா?

கடவுளே.. இதென்ன கொடுமை????

- பஞ்சரு பலராமன்


Follow

Get every new post delivered to your Inbox.

Join 157 other followers

%d bloggers like this: