ஹாட் டாபிக் : அமலா பால் (18+)

இந்தக் கதை ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது. இக்கதைக்கும் அமலா பாலுக்கும் ( ரொம்ப இருக்கோ அமலா?) எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மிகப் பிரபலமான ஹோட்டலின் லவுன்சில் அமர்ந்திருந்தேன். அப்போது தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வந்தவரும் லவுன்சிற்கு வந்தார். கண்களில் ஆச்சரியம் விரிய, அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

ஹோட்டலின் வரவேற்பாளர்கள் அனைவரும் அவரைக் கண்டு கொண்டதாகவே இல்லை. என்னடா உலக அதிசயம் இது என்று நினைத்தேன். நடிகையைப் பார்த்து விட்டு பல்லை இளிக்காத தமிழர்களும் இருக்கின்றார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் இரண்டாவது மாடிக்குச் சென்றார். என் அறையும் அங்குதானிருந்தது.

எனது வேலைகளை முடித்து விட்டு, இரவு பத்து மணிக்கும் மேல் ஹோட்டலுக்கு வந்தேன். அறையைத் திறக்கும் போதுதான் இடது பக்கமிருந்த அறையிலிருந்து அபாயகரமான டிரஸ்ஸொடு அந்த நடிகை வெளியே வந்தார். கண்களில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து நின்றார். பதறி உள்ளே வாருங்கள் என்று அழைத்துச் சென்றேன்.

அதற்குள் அறைக்குள்ளிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவரைப் பார்ததும் கிறுகிறுகென்றாகி விட்டது. நல்ல போதையில் இருந்தார். ஏய் வாடி என்று குழறிக் கொண்டே வெளியே வர உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நின்று கொண்டிருந்தார். நடிகை கண்ணை மூடிக் கொண்டு என் பின்னால் மறைய, அவர் என்னை அடிக்க வந்தார்.

அவருக்கு தான் எப்படி இருக்கிறோம் என்று தெரியவில்லை. என் அறையைத் திறந்து நடிகையை உள்ளே அனுப்பி விட்டு, பெரியவரை அவரின் அறைக்குள் தள்ளிக் கொண்டு போய், விட்டேன் ஒரு அறை. அப்படியே பெட்டில் விழுந்தார்.

அறையைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு, என் அறைக்குள் வந்தால் அங்கு நடிகை மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். ஒன்றும் பேசாமல் துண்டை எடுத்துக் கொண்டு, வாஷ்பேஷனில் கையைக் கழுவி விட்டு, ஷோபாவில் அமர்ந்தேன். மணி பதினொன்றாகி விட்டது. குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். அழுது முடிக்கட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தேன்.

” ஹே! கடவுளே !!!  எங்கு போனாலும் இதே பொழைப்பாப் போச்சு. பொம்பளைக அழுவதையே பார்க்க வேண்டியதிருக்கிறதே. எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளைத் தந்து கொண்டிருக்கிறாய் ?” என்று மனதுக்குள் திட்டி முடித்தேன்.

அடுத்து நடந்தது என்ன? இந்தக் கதைக்கும் அமலா பாலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை நாளைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை மனதுக்குள் கொண்டு வந்ததுமே, டென்ஷனாகி விட்டது.

சரி போகட்டும் அக்கதை.

ஒரு வாசகர் இது சாருவின் பிளாக்கா என்றும் அந்து மணி எழுதுவது போல இருக்கிறதே என்று கேட்டிருந்தார். மேற்படி இருவருக்கும் இந்த பிளாக்கிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சாருவும், அந்துமணியும் நண்பர்கள் என்று தெரியும்.

முக்கிய் குறிப்பு : சினிமா உலகை அழிக்க நடந்து வரும் ரகசிய சதி வலையைப் பற்றி விரைவில் ஒரு கட்டுரை வெளிவரப்போகிறது. பஞ்சரு பலராமன் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஹாட் டாபிக் : அமலா பால் பற்றி நாளை பார்ப்போம்.

அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுவது,

உங்களின் மனம் கவர் குஞ்சாமணி

3 Responses to ஹாட் டாபிக் : அமலா பால் (18+)

  1. asmi says:

    athu eppadi, ungala thediyaeee ella nadikaiyum varraanga, ellam poiyaa unmaiyaa

  2. மார்ட்டின் says:

    We are counting minutes….eager to read tomorrow’s post :)

  3. jramesh says:

    kunju sir,
    romba mosam neenga….
    antha hotel perum illa nadigai perum illa…..
    enakkum asai iruukku,,,,,
    enna panna….
    unga alavukku kudupanai illa…………..

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers