இந்தக் குஞ்சுப்பயல் இருக்கானே, அவனுக்கு எப்பவுமே ஒரே பாலிசிதான். ஆடு மாட்னாத்தான் பிரியாணி வைப்பான். அதுவும் தானா விரும்பி மாட்னும். வலுக்கட்டாயமெல்லாம் கிடையாது. அஞ்சலியை பாக்குறேன்னு கிளம்புனவன் இன்னும் வீடு திரும்பல.
ஆனால் சில பேர் இருக்காகளே அவனுங்க ஆடை சிக்க வைக்கவே பெரிய வலையா விரிப்பானுவ. ஆடு பிடிக்க ஆளுங்களை ரகசியமாய் கூட்டு வைச்சிருக்கானுவ. அப்படி மாட்ன ஆடுக பட்ட கதை ஏகப்பட்டது இருக்கு எனக்கிட்டே.
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. இந்த முற்போக்கு எழுதாளனுவ, பிற்போக்கு எழுத்தாளனுவன்னு சொல்லிக்கிட்டு திரியிறானுவளே அவனுங்க என்னா செய்வானுங்க தெரியுமா?
ஆடு மாட்னாலும் பிரியாணி வைப்பானுவ. ஆட்டோட அம்மா மாட்டுனாலும் பிரியாணி வைப்பானுவ. இவனுகளெல்லாம் தம்மை பிற்போக்கு, முற்போக்கு, புரட்சி எழுத்தாளனுவன்னு சொல்லிக்கிட்டு திரியுறானுவ. ஜாக்கிரதைப்புய்…..
அஜால் குஜால் பேர்வழிங்க சில பேரு திரிவானுங்க. அவனுங்க எப்படிப்பட்ட ஆளுன்னா, நோகாம நோம்பி கும்பிடுறதுல்ல அஜக் குஜக் மன்னனுவ. அந்தப் பயபுள்ளயோட மவன் ஒருத்தன் பன்னுன காரியத்தைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.
அஜக் குஜக்கோட குட்டிப்பயலுக்கு ஆறு வயசுருக்கும். பாக்கிறதுக்கு நாலு வயசுப் பால்குடி மறக்காத பயலாட்டமே இருப்பான். அம்மாட்ட சொல்லிட்டு வெளியே கிளம்பினான். இன்னிக்கு எவன் தலய உருட்டலாம்னு கணக்கு பண்ணிக்கிட்டே நடந்தான்னா, எதுக்கே போலீஸ் ஸ்டேஷனைப் பாத்தான். உடனே என்னா பண்ணினான்னா… அழுவ ஆரம்பிச்சுட்டான். அழுவுறான் அழுவுறான் அழுதுகிட்டே அம்மாட்ட போவனும்… அப்பாட்டா போவனும்னு கதற ஆரம்பிச்சுட்டான்.
போற வாற பயலுக இந்த பயலோட உள்திட்டம் என்னான்னு தெரியாம வலியப் போயி விசாரிக்க ஆரம்பிச்சானுவ. கூட்டம் கூட ஆரம்பிச்சிடுச்சு. பயபுள்ள விடாம அழுகுறான். அம்மா எங்கே? அப்பா எங்கேன்னு கேக்குறானுவ கேனப்பயலுவ. அவனுக்கு சொல்லவா தெரியாது. இன்னும் மேட்டர் வல்லயே. வார வரைக்கு அழுகுறதுன்னு முடிவு கட்டி கண்ணீரும் கம்பலையுமா கத்த ஆரம்பிச்சான்.
கூட்டத்துல ஒருத்தன் குழந்தை அழுவுறானேன்னு இரக்கப்பட்டு, கையில வச்சுறுந்த சாக்லேட்டை கொடுத்தான். பசியில சாப்பிடறா மாதிரிப் பிரிச்சு மேஞ்சான். உடனே இன்னொருத்தன் புள்ள பசியா இருப்பான் போலருக்குன்னு சொல்லிட்டு பக்கத்து பேக்கரியில போயி சூடா டீ, சமோஷான்னு வாங்கிக் கொடுக்க பயலும் ஒன்னும் சொல்லாம சாப்பிட்டான். சாப்புட்டு முடிச்சவுடனே அம்மா அம்மான்னு அழுகுறான்.
பையா எங்கே இருக்கு உன் வீடுன்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போது ஸ்டேஷனுக்குள்ளே ஜீப்புல நுழைஞ்ச இஞ்ச்பெக்கிட்டரு கண்ணுல கூட்டம் மாட்டுச்சு. அதைப் பாத்துப்புட்டு வலிய வந்து இவனுக்கிட்டே மாட்னாறு.
அரட்டல் கிரட்டல் முடிஞ்சு பயலை ஸ்டேஷனுக்குள்ளே கூட்டிக்கிட்டுபோனாரு. இந்த பயலோ பாக்கிறதுக்கு சோக்கா இருப்பான். அப்பா பேரென்ன, அம்மா பேரென்னன்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போது பசிக்குதுன்னு சொன்னான். அந்த இஞ்ச்பெக்டருக்கு கொழந்த பொறக்கலையேன்னு குறை வேற. இவனோ மொவத்தை சோகமா வச்சுக்கிட்டு பசிக்குதுன்னு சொன்னான்னா, இவருக்கு இரக்கம் பொத்துக்கிட்டு வர பக்கத்துல இருக்கிற ஓட்டலுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போயி சாப்பிட வச்சாறு. ஐஸ்கிரீமு, இட்லின்னு வெளுத்துக் கட்டுனவன் ஒன்னுக்கு வருதுன்னு சொல்லிட்டு பாத்ரூமு பக்கமா போனான்.
பய வருவான்னு இஞ்ச்பெக்டரு காத்துக்கிட்டு இருக்காரு…
இப்படிப்பட்ட பயலுக எல்லாம் வேற இந்த உலகத்துல திரியுறானுவ. அம்மா தாய்மாறுகளே, பொன்னுவளே! இலக்கியம் படிக்கிறேன், எழுத்தாளனுவ கையிலே முத்தா கொடுக்குறேன்னு கிளம்பினீங்கன்னு வச்சுக்கோங்க. சாமான் சகதியாயிரும் பாத்துக்கோங்க…
ஆடு மாட்னாலும் பிரியாணி வைப்பானுவ. உன்னோட அம்மா மாட்லுனாலும் பிரியாணி வைப்பானுவ. அவனுகளுக்குத் தேவை பிரியாணிதான். ஆடு அல்ல. புரியுதா ?
ஜாக்கிரதை… ஜாக்கிரதை…
இப்படிக்கு – அரச்சான் (அனாதியின் நண்பன்)
குறிப்பு : நேற்று விசாரித்த நண்பருக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தத் தளம் நான்கு நண்பர்களால் எழுதப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அரசியல், பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் மட்டுமே அனாதி எழுதுகிறார். மற்ற கட்டுரைகள் அவரின் நண்பர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும்….
அனாதி பதிப்பித்தது. 











