ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ரஜினி எந்திரன் படத்தோடு தன் நடிப்புக்கு டாட்டா சொல்லப்போவதாக எழுதி இருந்தார்கள். அது உண்மையாக இருந்தால் இன்செஸ்ட் செக்ஸ் கதைகளில் ஒன்று குறையும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மேற்படி செய்திகளில் நான் கண்டது : எந்திரனுக்கான மார்க்கெட்டிங்க் டெக்னிக்.
அதீத, அசுர பதவி பலம், மீடியா பலத்தினைக் கொண்ட சன் கம்பெனியாருக்கு எந்திரனை நம்பிப் போட்டிருக்கும் பல கோடி ரூபாய் முதல் தேருமா என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதுவரை வெளியிடப்பட்ட அவர்களது படங்கள் பல மண்ணைக் கவ்வியது. நம்பி வாங்கிய பல விநியோகஸ்தர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி. டிவியிலும், தனது பத்திரிக்கைகளிலும் விடாது விளம்பரப் படுத்தினால் படம் வெற்றி அடைந்து விடும் என்ற அவர்களது நம்பிக்கைக்கு மக்கள் வேட்டு வைத்திருக்கின்றனர்.
எந்திரனில் அதுபோல ஏதும் நடந்து விட்டால் முதலாளித்துவத்தை வளர்த்து வரும் ஏழைப் பங்காளன் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் இமேஜும் காணாமல் போய் விடும்,
சமீபத்தில் முதல்வரின் பாராட்டு விழாவில் ரஜினி கலைஞரை துதிபாடிய சேவகர்களின் வாழ்த்துப்பாக்களை கடைசி வரை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். எந்திரன் படத்திற்காக செய்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை உங்களுக்கு சொல்லியா தெரியப்போகிறது. இதைத் தான் முதலாளித்துவத்துக்கு துணை போகும் ஏழைப்பங்காளன் என்று விமர்சிக்க வேண்டியிருக்கிறது.
போட்ட முதலுக்கே ஆபத்தும் வந்து விடும் என்ற காரணத்தால் ரஜினியின் கடைசிப் படம் என்ற சிம்பதியை உருவாக்க முனைகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சிம்பதியை உருவாக்கினால் ரஜினியின் கடைசிப் படம் என்ற ஆவலில் மக்களிடையே ஆவல் உண்டாகும், அதனால் வசூலை வாரிக் குவித்து விடலாமென்ற திட்டமும் இருக்கலாம்.
மக்கள் சிம்பதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்பது தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஏகப்பட்ட சம்பவங்கள் உதாரணாமாய் காட்டப்பட்டிருக்கின்றன.
மேலும் ஒரு சிறிய கணக்கு ஒன்றையும் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அதாவது சச்சின் டெண்டுல்கரை உங்களுக்கு நன்கு தெரியும். அவரைத் தெரிந்த அளவுக்கு ரஜினியை இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஐம்பது கோடி என்பது தமிழ் சினிமாவிற்கு மிக அதிக பட்ஜெட். நூறு கோடி செலவு செய்தால், போட்ட பணத்தை திரும்ப எடுக்க ஏதாவது மாய மந்திரம் நடக்க வேண்டும். இல்லையென்றால் முதல் ஒரு மாதத்திற்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் விற்க வேண்டும்.
சினிமா தியேட்டர்களில் இவ்வளவு தான் டிக்கெட் விலை இருக்க வேண்டுமென்ற அரசாங்க அறிவிப்பு எந்திரன் படத்தின் வெளியீட்டின் போது தூங்கிக் கொண்டிருக்கும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை.
போகப்போக எந்திரன் திரைப்படத்தைப் பற்றி வெளிவரக்கூடிய செய்திகளை மொத்தமாக தொகுத்தால் பெரிய புத்தகமே போடலாம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
இப்படிக்கு,
குஞ்சாமணி குலசேகரபாண்டியன்
அனாதி பதிப்பித்தது.
அனாதி பதிப்பித்தது. 
அனாதி பதிப்பித்தது. 






